Thursday, January 10, 2013

உலக நாயகன் கமல்ஹாசனிடம் சில கேள்விகள்

http://www.indicine.com/images/gallery/bollywood/movies/vishwaroop/68871-vishwaroop4-large.jpg 

 கலைஞானி கமலின் திரை வாழ்க்கையை 2 பகுதிகளா பிரிக்கலாம். மணிரத்னத்துடன் இணைந்து  பணி ஆற்றிய நாயகன் ப்டத்துக்கு முன்பும் பின்பும் என . ஏன்னா நாயகன் படத்துக்குப்பிறகு கம்லின் லைஃப் ஸ்டைலே மாறிடுச்சு . ஒவ்வொரு படத்துக்கும் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தனும், கெட்டப் சேஞ்ச் பண்ணனும்  , ஹேர் ஸ்டைல் , மேனரிசம் , டிரஸ்ஸிங்க் சென்ஸ் உட்பட வெரைட்டி காண்பிக்கனும் என்ற  தணியாத தாகம் கொண்டவர்  ஆனார். 

சத்யா படத்துல  ஆக்‌ஷன் காட்சிகளில் புது ஆக்ரோஷம் . ஃபைட் சீனில் டிஷ்யூம் டிஷ்யூம் சவுண்ட் இல்லாம புதுசா ட்ரை பண்ணாங்க , பேசும் படம் இந்திய சினிமாவில் யாரும் செய்யாத பரிசோதனை முயற்சி . வசனமே இல்லாம ஆனா பிரமாதமான நகைச்சுவை படம். ஆளவந்தான் ல  ஜிம் பாடி கொண்டுவந்தது , மகாநதில  முழுக்க முழுக்க ஜெயில்வாழ்க்கையின் அவலத்தை சொன்னது ( எந்த ஒரு தமிழ்ப்படத்திலும் ஜெயில் காட்சிகள் இவ்வளவு விஸ்தீரத்தோடு இல்லை )


மைக்கேல் மதனகாமராஜன்ல 4 வேடங்கள்ல அவர் செஞ்ச மாதிரி இதுவரை தமிழ்ல யாரும் செய்ய்லை. செம காமெடி படம். .அபூர்வ சகோதரர்கள்ல அவர்  குட்டி அப்புவா நடிச்ச ரகசியத்துக்கான விடை இதுவரை யாருக்கும் தெரியலை .

குருதிப்புனல் , மகாநதி ல அவரோட திரைக்கதை அறிவு பிரமாதமா பேசப்பட்டது . மிஸஸ் டவுட் ஃப்யரோட உல்டாவா இருந்தாலும் அவ்வை சண்முகி தமிழுக்கு புதிய முயற்சி ( பிரசாந்த் ஆணழகன் ல ஒரு முயற்சி பண்ணி இருக்கார் ) .

நிற்க . இவை எல்லாம் எதுக்கு? ஒரே கமல் புராணமா இருக்குன்னு யோசிக்கறீங்களா? நான் இப்போ கேட்கும் கேள்விகளை வெச்சு நீ ரஜினி ரசிகனா?  கமல்னா உனக்கு ஆகாதா? என நீங்க நினைச்சுடக்கூடாதே, அதுக்குதான் இந்த முன்னுரை , தமிழ் சினிமாவில்  கமல் ஒரு சகாப்தம் என்பதில் ஐயம் இல்லை .

 அன்பே சிவம் படத்தில்  சுனாமியை பற்றி சொன்னபோது நம்ம ஆட்களுக்கு சுனாமியின் தீவிரம் பற்றி தெரியலை . 10 வருடங்களுக்கு முன் கூட்டியே சிந்திப்பவர் தான் அவர். ஆனா இப்போ விஸ்வரூபம் பட பிரச்சனைல ஆழம் தெரியாம காலை விட்டுட்டார். அவரிடம் ஒரு சாதாரண பொது ஜனமா என்னோட கேள்விகள் .


சரித்திர நாயகன் கமலிடம் சாமான்யனின் கேள்விகள்1. படத்தோட பட்ஜெட் எகிறிடுச்சு , 95 கோடி ஆகிடுச்சு என்கிறீங்க  அதனால தியேட்டர்காரங்க கம்மி ரேட்டுக்கு கேட்கறாங்க , கட்டுபடி ஆகலை , அதனலாதான் டி டி ஹெச் ரிலீஸ் திட்டம்னு சொல்றீங்க ஓக்கே . ஒரு வீடு கட்டனும்னா  ப்ளூ பிரிண்ட் போட்ட பின் முதல் வேலையா பட்ஜெட் போடுவோம் . இஞ்சினியர் சொல்லும் எஸ்டிமேட்டை விட நம்ம கிட்டே  டபுள் மடங்கு பணம் இருக்கனும்.  ஏன்னா அவர் 10 லட்சம் சொன்னார்னா 17 லட்சம் ஆகிடும். லோன்  சோர்ஸ் எல்லாம் நாம ரெடி பண்ணிக்கனும்
 உங்க மார்க்கெட் வேல்யூ எவ்ளவ்? என்ன ரேட்டுக்கு போகும்? என்ற கால்குலேஷன் இவ்வளவு வருட திரை உலக வாழ்வில் தெரியாம போயிடுமா? ஏன் அகலக்கால் வைச்சீங்க?சன் டி வி , சன் பிக்சர்ஸ் இப்படி காம்பினேஷன் போட்டிருக்கலாமே? 


2. உங்க டி டி ஹெச் திட்டம் விளம்பரங்கள் நம்பி பலர் பணம் கட்டி இருக்காங்க. எல்லாரும் உங்க முகத்துக்காகத்தான் பணம் கட்டி இருக்காங்க , இப்போ வந்து திடீர்னு அறிவிச்ச தேதில மாற்றம் , டி டி ஹெச் பணம் திரும்ப வருமா? என்பது டவுட் என்றால் எப்படி?

>>>>டி.டி.ஹெச். காசு திருப்பித் தரப்படுமா எனும் சட்ட விபரங்கள் எனக்குத் தெரியாது.


பணம் வசூல் பண்ணும்போது “ கடைசி நிமிடத்தில் வெளியிடுவதில் மாற்றம் நிகழ்ந்தால் பணம் வாபஸ் இல்லை , அல்லது அது பற்றி அந்தந்த நிறுவனங்கள்தான் முடிவெடுக்கும், எனக்கும் அதற்கும் எந்த சமப்ந்தமும் இல்லை “ என முன் கூட்டியே அறிவித்தீர்களா? 


3. இப்போ ஈரோட்டில் 6 தியேட்டர்கள் விஸ்வரூபம் புக் பண்ணி இருக்காங்க. உங்க டீலிங்க் என்ன? அட்வான்ஸ் வேண்டாம். DTH ரிலீஸ் என்பதால் ரிஸ்க் அதிகம் , அதனால் வர்ற லாபத்துல அதாவது வசூல் பணத்துல  60 %  எனக்கு 40 % உனக்கு அப்டினு அக்ரீமெண்ட் போட்டீங்க. உங்களை நம்பி கொங்கு மண்டலத்துல  உங்க படத்தை  புக் பண்ண தியேட்டர்ங்க கடைசி டைம் அறிவிப்பால் இப்போ எந்தப்படத்தை புக் பண்ணுவாங்க ? 

>>>> என்னுடைய செளகரியத்துக்காக மட்டுமே ரிலீஸை தள்ளி வைக்கிறேன் 


உங்க தனி நபர் சவுகர்யத்துக்காக எத்தனை பேர்க்கு அசவுகர்யம்னு பார்த்தீங்களா? வியாபார உலகில் இது சகஜம், ஆனா உங்க நம்பக்த்தன்மை குறைஞ்சுடுச்சே? இப்போ ஒரு கோர்ட் தடையோ , வேற எதிர்பாராத சிக்கலோ வந்து படம் ரிலீஸ் பண்ண முடியலைன்னா ஓக்கே , ஆனா உங்க தனிப்பட்ட முடிவால  ரிலீஸ் ஆகலைன்னா அதுக்கு நீங்க தானே தார்மீகப்பொறுப்பு ? 4.  >>>> என்னுடைய படத்தின் தேதியை அறிவிக்க என்னைத் தவிர வேறு யாருக்கும் தகுதியோ அருகதையோ இல்லை


இந்த ஸ்டேட்மெண்ட் ஓவரா  தோணலை? அப்புறம்  ஏன் ஜனவரி 11ன்னு அறிவிச்சீங்க ?  சில பல காரணங்களால் வெளியீடு தள்ளிப்போகிறது  அப்டினு சொல்லி இருக்கலாமே? 


5.  டி டிஹெச்சில் படம் வந்தால் அதை காப்பி பண்ண முடியாது , அப்படி ஒரு தொழில் நுட்பத்துல வெளியிடுவோம் அப்டினு ஆணித்தரமா முதல்ல சொன்ன நீங்க கேபிள் ஆபரேட்டர்கள் “இல்லை , நாங்க காப்பி பண்ணுவோம் அப்டினு சவால் விட்டதும் பல்டி அடிச்சீங்க 


>>>>பாலில் தண்ணி கலப்பதே தப்பு தான். அதே போல தான் டி.டி.ஹெச்.சில் ரிகார்ட் செய்யக்கூடாது என்று சொல்லி செய்தால் அது தப்பு தான் 6. யாராலும் மறுக்க முடியாத ஒரு உண்மை , நீங்க பதிலே சொல்ல முடியாத , சமாளிச்சு மழுப்ப முடியாத ஒரு கேள்வி

மக்கள் ரூ 1000 பணம் கட்டியதுக்கு முக்கியக்காரணம் என்ன?  தியேட்டர்ல படம் ரிலீஸ் ஆகும்  முன்பே நாம படம் பார்க்கலாம் என்ற ஆர்வம் தானே? அப்படித்தானே முதல்ல மார்க்கெடிங்க் பண்ணுனீங்க>?  இப்போ வசூல் பண்ணிட்டு  படம் ரிலீஸ் ஆகும் அதே தேதியில் டி டி ஹெச்சில் ரிலீஸ் அப்டின்னா எப்படி?  இது மோசடி ஆகாதா?

 நீங்க நேர்மையானவர் எனில் என்ன பண்ணனும் ?  வாங்குன பணத்தை எல்லாம் எல்லாருக்கும் ரிட்டர்ன் பண்ணிட்டு புதுசா அறிவிக்கனும் .  அப்போ யார் புக் பண்றாங்களோ  அவங்களுக்கு படம் காட்டுனா ஓக்கே 
 7. ஒரு விஷயத்தை ஓப்பனா சொல்லப்போனா நீங்க எதிர்பார்த்த அளவு டி டி ஹெச் புக்கிங்க் இல்லை. உங்க டார்கெட் மினிமம் 50 கோடி இதுல பார்த்துடலாம்னு இருந்தீங்க.. தமிழன் சிக்கனவாதி . மேக்சிமம் ரூ 200க்குள் முடிக்க வேண்டிய செலவில் ஏன் வீணாக ரூ 1000 கொடுக்கனும் அப்டினு நினைச்சு அதிகம் பேர் புக் பண்ணலை . அப்படி புக் பண்ணி இருந்தா நீங்க தியேட்டர்காரங்களை சட்டையே பண்ணி இருந்திருக்க மாட்டீங்க , இதான் உண்மை. உண்மை என்னைக்கும் கசக்கும். ஆனா மீட்டிங்க் முடிஞ்சு வந்து

>>>>அவங்க கெஞ்சினாங்க. நான் முடிவு செஞ்சிருக்கேன். வித்தியாசத்தைப் புரிஞ்சுக்குங்க’ 

 அப்டினு சொன்னீங்க... இது சரியா? அவங்க ஏன் உங்க கிட்டே கெஞ்சனும்? உங்களுக்குதான் தேவை இருக்கு.

 உண்மையிலேயே நீங்க இந்த விஷயத்துல ஜெயிச்சிருந்தா  இந்த 2 ல ஏதாவது ஒண்ணை நடத்தி காட்டி இருக்கனும்

1. சொன்ன தேதில சொன்ன தியேட்டர்ல படத்தை ரிலீஸ் பண்றது 

2. வாக்குத்தந்த படி , சவால் விட்ட படி டி டி ஹெச் ஒளிபரப்பை தியேட்டர் ரிலீஸ்க்கு முந்தின நாள் ஒளிபரப்புவது 


 இந்த 2 லயும் உங்களால நிகழ்த்திக்காட்ட முடியலைன்னா அப்போ அது தோல்விதானே?  


8. >>> டி.டி.ஹெச். ரிலீஸூக்கு எக்கச்சக்க enquiry வந்தது. நேரக் குறைவு! 

 இது அப்பட்டமான பொய். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் எங்க ஊர் சென்னிமலைல  மொத்தமே 12 பேர் தான் புக் பண்ணி இருக்காங்க . ஈரோட்டில்  எனக்குத்தெரிஞ்சு  40 பேர் புக் பண்ணி இருக்காங்க.. எப்போ போனாலும் ஆஃபீஸ் காத்து வாங்கிட்டு இருக்கு.. 
9. >>>>திரைத்துறையிலிருந்து இல்லீகல் பிரஷர்கள் வந்தன.அதுக்குத்தான் போலீஸ்ல புகார் குடுத்தாச்சே?

>>>>>>13 பேருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். யார் என்று இப்போது சொல்ல மாட்டேன். 

உங்களுக்கு 3000 பேர் லீகல் நோட்டீஸ் அனுப்பப்போறாங்க , ஏன்னா நீங்க டி டி ஹெச் மேட்டர்ல சீட்டிங்க் பண்ணிட்டீங்க 10. >>>>>>>புதியது என்றால் அது லேட்டாக வரக்கூடாது..

 ஆமா, உங்க படம் லேட்டாத்தானே வருது?


11. >>>>>>>>பிற்காலத்தில் மொபைல் ஃபோனில் கூட தமிழ் திரைப்படங்கள் காண ஆசைப்படலாம்

>>> நடிகர் சங்கத்திலிருந்து இது வரை ஆதரவு இல்லை. விரைவில் வரும் என்று நம்புகிறேன்

>>>>>படத்தின் வியாபார சங்கதிகளை பத்திரிகைகளுடன் விவாதிக்க முடியாது


>>>ஒரு பத்திரிகைக்காரர் நான் முடிவு செய்வதற்கு முன்பே அவர் முடிவு செய்திருக்கிறார். உங்கள் தலையங்கத்தை நான் முடிவு செய்ய முடியாது>>>>என்னுடைய வழி தனி வழி இல்லை.. அது புது வழி.. நாளையே அது பொது வழியாகவும் ஆகலாம்மேலே நீங்க சொன்னவைகளுடன் ஒத்துப்போகிறேன்7 comments:

Deva. Palaniappan @ Balaji said...

சரி தான் தோழரே !! ஒரு கருத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். திரு. கமலஹாசன் அவர்களின் திரைப்படங்கள் பெரிய லாபகரமானதாக இல்லை என்ற கருத்து திரையரங்க உரிமையாளர்களிடம் என்றுமே உள்ளது. அவர் அண்மையில் நடித்த மன்மதன் அம்பு மிகப்பெரிய உத்திரவாத தொகைக்கு விற்கப்பட்டது, அதில் பெருத்த நஷ்டம் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அதனால் தான் உன்னைப்போல் ஒருவன் திரைப்படம் பெரிய திரையரங்களில் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே பெரிய படங்களின் தோல்வி, மின்வெட்டு பிரச்சனை, அதிக கேளிக்கை வரி என அல்லாடி கொண்டிருக்கும் திரையரங்கங்கள் எப்படி இவளவு பெரிய பணத்தை கொடுக்க முடியும் ?? அதனால் தான் 60-40 ஒப்பந்தத்திற்கு எறங்கி வந்தார், ஆனால் ஒரு நாள் முன்னாடி செயற்கைக்கோள் மூலம் பிரத்தியேக காட்சி நடத்துவேன் என்றார். ஆனால் அதை உள்ளூர் வடகயிறு ஒளிப்பரப்பாளர்கள் திருடி ஒளிப்பரப்ப முற்பட்ட காரணத்தாலும், அதனை வைத்து பெரிய உணவு விடுதிகள் பணம் சம்பாதிக்க முற்பட்டதாலும் சிக்கல் வலுத்தது. இப்போது வேறு வழியே இல்லாமல் திரையரங்க உரிமையாளர்களிடம் சரணடைந்துள்ளார் தயாரிப்பாளர் திரு. கமலஹாசன் !!

IHLAS IM said...

நீங்க கேட்குறதெல்லாம் ஓகே, ஆனாலும் பிள்ளையைப் பெத்துப்பாரு, வீட்டைக்கட்டிப்பாருன்ற மாதிரி, படத்தை எடுத்துப் பாரு, அதை வெளியிட்டுப்பாருன்னும் சொல்லலாம் அவரோட கஸ்டம் அவருக்கு..

கும்மாச்சி said...

கமலஹாசன் நல்ல கலைஞர்தான், ஆனால் நல்ல வியாபாரி அல்ல எனபது புரிகிறதா?

imannankkatti said...

என்ன தான் சப்ப கட்டு கட்டுனாலும் நடந்த கசப்பான விஷயங்கள யாராலும் மன்னிக்க முடியாது.

இந்த விஷயத்துல கமல் கெட்ட பேர் சம்பாதிச்சிருக்கறது என்னவோ உண்மை!

Shankar said...

ஒங்க நேர்மை என்க்கு பிடிச்சிருக்கு .இவ்வள்ளவு நேர்மையா கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்ல முடியும்.
talent is one thing, but marketing is a different ball game.One need to hire professionals to do this.As a owner, he thinks he will call all the shots. Sometimes the market is more intelligent than the maker. Sad truth. hurts you more when it hits you only.
we wish and hope in the end, all turns out well.
Shankar

YESRAMESH said...

குருதிப்புனல் இந்தி ரீமேக் னு நினைச்சேன் இவருக்கு கிரடிட் கொடுக்கிறிங்க.
இவரோட மார்கெட் வால்யூ இவருக்கு தெரியாதா. ஓவர் கான்பிடன்ட்.

Unknown said...

இவிங்க சண்டையில என்னோட 1000 ரூபா போச்சே!!!