Thursday, January 10, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா

-->
பவர் ஸ்டார் பளார்

ஒரு தம்பி சந்தானம்... இன்னொரு தம்பி ஷங்கர்!

திலீபன்

தமிழின் முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களே நூறு நாளைத் தாண்டுவது எட்டாக்கனி. ஆனால் லத்திகாதிரைப்படத்தைத் தயாரித்து, இயக்கி, நடித்து அப்படத்தை 225 நாள் ஓட வைத்த பெருமைக்குரியவர் பவர் ஸ்டார் என்கிற டாக்டர் சீனிவாசன். அவர் கல்கிக்கு அளித்த லகலக பேட்டி இது.
ஒரே படத்துல உச்சம் தொட்டுட்டீங்களே?
இந்த வெற்றியை நான் எதிர்பார்க்கலை. நான் செய்யக்கூடிய தர்மங்கள்தான் என் வளர்ச்சிக்குக் காரணம். என் ரசிகர்களாகிய கல்லூரி மாணவர்கள்தான் என்னை இந்த அளவு பிரபலப்படுத்தியது. அவங்களுக்கு நான் கடமைப் பட்டிருக்கேன்."
நடிக்க வந்ததன் நோக்கம்?
சினிமாவுக்கு வந்தா பணம் புகழ் கிடைக்கும்னு சொல்வாங்க ஆனா, இங்க நான் இழந்ததுதான் அதிகம். லத்திகாபடத்தில் மட்டும் இரண்டரைக் கோடி. சினிமாங்கிறது எனக்கான அடையாளம்."
ஒரே நேரத்துல நீங்க ஆறு படம் எடுக்கிறதா தகவல் வந்ததே?
சினிமா மேல எனக்கு ஒரு வெறி. அது இதுக்கெல்லாம் காரணம். (ஒய் திஸ் கொலை வெறி) இதுக்காக நான் முழுமூச்சா உழைக்கிறேன். நம்பிக்கைதாங்க வாழ்க்கை."
நீங்க ஆக்ஷன் ஹீரோ(?) ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா... காமெடி படம். எங்கேயோ இடிக்குதே?
நல்ல நடிகன்னா எதுக்கும் தயாரா இருக்கணும். உண்மையைச் சொல்லப் போனா ஆக்ஷன் ஹீரோவா நடிக்கிறதை விட காமெடியனா நடிக்கிறது ரொம்பக் கஷ்டம் (சூப்பர் காமெடி). ரசிகர்களை சிரிக்க வைக்க நாங்க பாடுபட வேண்டியிருக்கு."
பரதேசி’, ‘படங்கள்ல நீங்க நடிச்சதா தகவல் வந்ததே?
பரதேசிபட வாய்ப்புக்காக என் மீசையை எடுத்தேன். அப்பதான் கண்ணா லட்டு தின்ன ஆசையாபடம் கமிட் ஆச்சு. அதனால பரதேசியில் நடிக்க முடியலை. படத்துல நடிச்சிருக்கேன். 3 நாள் ஷூட்டிங். நானும் சந்தானமும் காமெடி ரோல்ல நடிச்சிருக்கோம்."
ஷங்கர் கூட வொர்க் பண்ண அனுபவம்?

ஒரு பெரிய இயக்குனர்னு ஆரம்பத்துல நானும் பயந்தேன். ஷங்கர் என்னை அண்ணேன்னு உரிமையோட கூப்பிட்டார். எப்படி எனக்கு சந்தானம்னு ஒரு தம்பி கிடைச்சாரோ அது மாதிரி ஷங்கரும் என் தம்பி தான்."
சந்தானம்- பவர் ஸ்டார் கூட்டணி தமிழ்நாடு தாங்குமா?
கவுண்டமணி - செந்தில் கூட்டணி எப்படி இருந்ததோ அதுமாதிரிதான் எங்க கூட்டணியும் இருக்கும். எனக்கு மிக உந்துதலாய் இருந்தது என் தம்பி சந்தானம்தான். கண்ணா லட்டு தின்ன ஆசையாபட யூனிட்டே ஒரு குடும்பம் மாதிரிதான். நாங்கள்லாம் சேர்ந்து இந்த லட்டை உருட்டியிருக்கோம். மொத்தத்துல இந்தப் படம் ஒரு திகட்டாத லட்டு."
நீங்க லட்டு தின்னதான் ஆசைப்படுவீங்களா?
(சிரிக்கிறார்) அப்படியெல்லாம் கிடையாது. நான் எல்லா ஸ்வீட்டும் சாப்பிடுவேன். (இன்க்ளூடிங் அல்வா)"
பில்லா 2’, ‘சிங்கம் 2’ மாதிரி லத்திகா 2’ எதிர்பார்க்கலாமா?
இல்லை, ஒரு படம் ஒருதடவைதான் வரணும். இல்லைன்னா நம்மகிட்ட கதை இல்லைன்னு மக்கள் கேலி பேசுவாங்க."
நீங்க சிக்ஸ்பேக் ட்ரை பண்ணலாமே?
(அவருக்கே சிரிப்பு பொத்துக் கொண்டது). நான் அந்த வயசையெல்லாம் தாண்டியாச்சு, வேணா சிக்ஸ் பேக்கோட இருக்கிற மாதிரி க்ராபிக்ஸ் பண்ணிக்கலாம்."
கமல் தன் ரசிகர்களை ரத்ததானம் செய்யச் சொன்னார். நீங்க உங்க ரசிகர்கள் கிட்ட வைக்கும் கோரிக்கை?
ஏழைகளுக்கு உதவி பண்ண தயங்கக்கூடாது. பெத்தவங்களைக் கடைசிவரைக்கும் காப்பாத்தணும்." குறிப்பு: பவர் ஸ்டாரின் காலர் ட்யூன்: அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே.
உங்க மேல இதுவரை எந்தக் கிசுகிசுவும் வரலையே?

இனி வரலாம்." (ரொம்ப எதிர்பார்க்கிறார் போல)
அடுத்து அரசியல்தானா?
அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை. கலைத் துறையிலேயே நான் இன்னும் சாதிக்க வேண்டியிருக்கு. சூப்பர் ஸ்டார்தான் என் குரு. ஆனா எனக்கு போட்டின்னா அவர்தான். அவர் எப்படி உழைச்சு இந்த இடத்துக்கு வந்துருக்காரோ அவரைப் போலவே நானும் அந்த இடத்துக்கு வரணும்."
காதல் அனுபவம்?
எனக்கும் ஒரு காதல் இருந்தது. ஆனால், என் நண்பனுக்காக என் காதலை விட்டுக் கொடுத்துட்டேன். (இதுவல்லவா நட்பு) இந்த ஒன்லைனையே வெச்சு நீங்க ஏன் படம் பண்ணக்கூடாது என்றோம். அதற்கு புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தார்.
சூப்பர் ஸ்டார்- பவர் ஸ்டார் இணைவது சாத்தியமா?
நிச்சயமாக, அந்த ஒரு வாய்ப்புக்காகத் தான் நான் காத்துட்டிருக்கேன்."
நீங்க பவர் ஸ்டார் எத்தனை வாட்ஸ் பவர்?
(குபீரெனச் சிரிக்கிறார்). கரண்ட் கண்ணுல பார்த்தா தெரியாது. தொட்டாத்தான் தெரியும் அதுமாதிரிதான் நானும் தொட்டாத்தான் என்பவர் தெரியும்."
இதுவரைக்கும் உங்களை யாராவது தொட்டிருக்காங்களா?
இதுவரைக்கும் என்னை யாரும் தொட்டதில்லை. இனி தொடணும்னு நினைச்சாக்கூட அவ்ளோதான்."


 கலக்கல் ட்ரெய்லர்

a
ஆடியோ ரிலீஸ் விழாவில் சந்தானத்தின் உரை ( செம கலாய்ப்பு )

பவர் ஸ்டார் உரை


ட்ரெய்லர் 2 ட்ரெய்லர் 3

ட்ரெய்லர் 4ட்ரெய்லர் 51 comments:

Anonymous said...

மிக அருமை, பவர் ஸ்டாரைக் கண்டு வியக்கிறேன்.