Thursday, January 10, 2013

ஆதிபகவன்

ஜீவா நடிக்க...

எ ஃபிலிம் பை 'ஜெயம்' ரவி!
க.நாகப்பன்
"போன வருஷம் என் படம் தமிழ்ல ஒண்ணுகூட ரிலீஸ் ஆகலை. ஆனா, 2012ல நான் பண்ண வேலைகள் 2013ல்தான் ஸ்க்ரீனுக்கு வரும். அதிலும் 'ஆதிபகவன்’ படத்தில் நாலு படத்துக்கான உழைப்பைக் கொடுத்திருக்கேன். 2013 எனக்கு... ஏன் நம்ம எல்லா ருக்கும் ரொம்ப ரொம்ப ஜோரான வருஷமா இருக்கும்!''நம்பிக்கை வார்த்தை களுடன் பேட்டியைத் துவக்குகிறார் 'ஜெயம்’ ரவி.


 ''கடகடனு நிறையப் படங்கள் பண்ணிட்டு இருந்தீங்க. இப்ப ரொம்ப செலெக்ட்டிவ் ஆயிட்டீங்க. முக்கியமா அண்ணன் இயக்கத்தில் ஒரு படம்கூட நடிக்கலை. ஏன் இந்த மாற்றம்?''


 
''மாற்றம் நல்லதுதானே! அண்ணன் இயக்கமோ, மத்த இயக்குநர்களோ எல்லாமே நல்ல படங்கள்தான் பண்ணேன். ஆனா, மொத்தக் குடும்பத்துக்குமான பேக்கேஜ்னு சொல்லிட்டு, ஒரு ஃபார்முலாவில் செட் ஆகிட்டேன். இனிமே பண்ற ஒவ்வொரு படமும் நமக்கே புதுசா இருக்கணும்னு முடிவுபண்ணி நடிச்ச படம்தான் 'பேராண்மை’. 
 அதுக்குக் கிடைச்ச ரெஸ்பான்ஸ்.... ரொம்ப சந்தோஷமா இருந் தது. இப்ப 'ஆதிபகவன்’, 'நிமிர்ந்து நில்’, 'பூலோகம்’ படங்களோட போஸ்டர்ஸ் பார்த்தீங்கன்னாலே, ஒவ்வொரு படமும் வேற வேற ஏரியானு தெரிஞ்சுக்குவீங்க. 'ஆதிபகவன்’ ரொம்ப ரௌத்ரமானவன். அந்தப் படத்தோட கேன்வாஸுக்காகவே ஒரு வருஷம் உயிரைக் கொடுத்து நடிச்சேன். 'நிமிர்ந்து நில்’ படத்துல 40 வயசைத் தாண்டின கேரக்டர்ல நடிக்குறது... ஃப்ரெஷ்ஷா இருக்கு. முதன்முதலா டபுள் ரோல் பண்றேன். 'பூலோகம்’ செம ஆக்ஷன் ஏரியா. என்ன... அடுத்தடுத்து மூணு படங்கள்ல நடிக்கிறதால, உடம்பை ஏத்த, இறக்க, ஜிம் வொர்க் அவுட்னு ஒவ்வொரு நாளும் கஷ்டமா இருக்கு. வயசு இருக்கிறதால சமாளிக்க முடியுது. படம் வரும்போது, அதுக்கான கிரெடிட் கிடைக்கும்போது கவலை, வலி எல்லாம் மறைஞ்சிடும்!''''சாக்லேட் பாய் இமேஜை உடைக்கத்தான் அடுத்து அடுத்து ஆக்ஷன் படம் பண்றீங்களா?''


''அப்படி இல்லை. என்னால இன்னும் பிரமாதமான ரோல் பண்ண முடியும்னு என்னைவிட என் இயக்குநர்கள் நம்பினாங்க. 'இவன் காதலிச்சுட்டே இருந்தா சரிவராது. அடுத்த லெவலுக்கு இவன் போகணும்’னு என் மேல் அக்கறையும் நம்பிக்கையும் வெச்ச ஜனா சார், அமீர் அண்ணன், கனி அண்ணன்... இவங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். உதவி இயக்குநரா இருந்த நான் நடிக்க வந்ததே ஒரு நம்பிக்கையில்தானே!''  


''உதவி இயக்குநரா..? எந்தப் படத்தில் வேலை பார்த்தீங்க?''  ''இயக்குநர் ஆகணும்கிற ஆசையில்தான் லயோலாவில் விஸ்காம் படிச்சேன். அப்பவே நான் இயக்கின 'சம்மரி’ குறும்படமும் 'வேர்ல்டு பீஸ்’ ஆவணப்படமும் பாராட்டுகளைக் குவிச்சது. சரி... சினிமாவுக்குள் வந்துடுவோம், நிறையக் கத்துக்குவோம்னு நினைச்சுதான் வந்தேன். 'ஆளவந்தான்’ல சுரேஷ் கிருஷ்ணா சாரிடம் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். ஆனா, சினிமாவைப் பக்கத்தில் இருந்து  பார்த் தப்போ, இயக்கத்தைவிட நடிப்பு கொஞ்சம் பக்கத்தில் இருந்த மாதிரி தெரிந்தது. அப்படியே டிராக் மாறி நடிப்புப் பயிற்சி எடுத்துக்க ஆரம் பிச்சேன். இப்ப ஆர்வமா நடிச்சுட்டு இருக்கேன். ஆனா, டைரக்ஷன்தான் என் கனவு. சீக்கிரம் ஒரு படம் பண்ணுவேன். என் மனசுல ஒரு கதை இருக்கு. அந்த கேரக்டருக்கு நீதான் பொருத்தமா இருப்பேனு ஜீவாகிட்ட இப்பவே சொல்லி வெச்சிருக்கேன்... பார்க்கலாம்!''  ''ஹீரோக்கள் மத்தியில உங்க ஃப்ரெண்ட்ஸ் கேங் ரொம்ப ஆரோக்கியமான விஷயம். என்னல்லாம் பேசிக்கு வீங்க?''''கார்த்தி, சிபிராஜ், ஆர்யா, ஜீவா, விஷால், நான்... இது செம குபீர் ஜாலி பிரதர்ஸ் டீம்! இவங்கள்ல ஒருத்தன் சிக்கிட்டா, எல்லாரும் அவனைக் கலாய்ச்சுக் கிண்டலடிச்சுக் காலி பண்ணிருவோம்.' 'எங்கேயும் காதல்’ படத்தில் அழகா இருக்கடா... டான்ஸ் நல்லாப் பண்ற’னு என்னைப் பாராட்டினாங்க. இன்னொரு படத்துல நடிச்சதுக்கு, 'ஏன்டா... கதையே இல்லாத படத்துல நடிச்ச?’னு செம பரேடு வாங்கினேன். சினிமாபத்திக் கொஞ்சம்தான் பேசிக்குவோம். மத்த அரட்டை, சேட்டைதான் நிறைய. நான், ஆர்யா, விஷால், ஜீவா நாலு பேரும் சேர்ந்து நடிக்கிற மாதிரி ஒரு படம் பண்ணலாம்னு வெங்கட் பிரபு சொல்லியிருக்கார். அந்தப் படத்துக்காக நாங்க நாலு பேருமே வெயிட்டிங்!''
''புதுசா வந்த ஹீரோ, ஹீரோயின்கள்ல யாரைப் பிடிச்சிருக்கு?''  '' 'பரதேசி’ டிரெய்லர்லயே மிரண்டுட்டேன். அதர்வா நல்லாப் பண்றார். சமந்தா பெர்ஃபார்மன்ஸ் ரொம்ப க்யூட்!''''சினிமாவுக்கு வந்து பத்து வருஷம் ஆச்சு. என்னலாம் கத்துக்கிட்டீங்க?''''கத்துக்கிட்டே இருக்கேன். ரொம்பக் கொஞ்சம்தான் கத்திருக்கேன். இன்னும் நிறையக் கத்துக்கணும். யார் உண்மையா இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். பொய்யானவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். ஒவ்வொரு படத்துலயும் என்னை இம்ப்ரூவ் பண்ணிட்டே இருக்கேன். நடிப்பு, டான்ஸ், ஃபைட் மட்டும் நல்லாப் பண்ணாப் போதும்னு நினைக்க மாட்டேன். நான் நடிக்கிற படத்தில் நடிகன்கிறதைத் தாண்டி, ஓர் உதவி இயக்குநராகவும் வேலை பார்ப்பேன்.'பேராண்மை’ படத்தில் என் கேரக்டருக்கு எங்கேயும் ரெஃபரன்ஸ் இல்லை. என்.சி.சி. ஆபீஸர், பழங்குடி இளைஞன், உறுதியான உடம்பு, அதீதப் புத்திசாலித்தனம்... அவன் எப்படி இருப்பான்... என்ன பண்ணுவான்? ஜனா சார் சுருக்கமா சொன்னார், 'பலரோட தாய்ப் பால் குடிச்சு வளர்ந்தவன். காட்டுப் பழங்கள் சாப் பிட்டு வளர்ந்தவன். ஆரோக்கியமா இருப்பான். அதே சமயம், இரும்பு மாதிரி இருப்பான்’னு சொன்னாரு. அப்போ 'சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்துக்காக அமுல் பேபி மாதிரி இருந்தேன். சில வாரங்கள்ல அப்படியே ஆளே மாறினேன். ஒரு செட் பிராப்பர்ட்டி எப்படி இருக் கணும்னு இயக்குநர் நினைக்கிறாரோ, ஒரு நடிகனையும் அப்படித்தான் எதிர்பார்ப்பார். அந்த எதிர்பார்ப்புக்கும் மேல இருக்கணும்னுதான் நான் ஓடிட்டே இருக்கேன்.
எனக்குப் பக்கத்துல இருக்கிற ரோல் மாடல் அமீர் கான். சினிமாவில் சகல துறைகளிலும் அவர் மாதிரி வித்தியாசமான முயற்சிகள் பண்ணிட்டே இருக்கணும். அதுக்கு ஏத்த மாதிரி என்னைத் தகுதிப்படுத்திட்டு இருக்கேன்.''


நன்றி - விகடன்

0 comments: