Saturday, January 12, 2013

கமலை மிரட்டிய 13 பேர்! - குற்றம் நடந்தது என்ன? ஜூ வி கட்டுரை

Vishwaroopam-On-Location-Stills-06072012921592e.jpg (940×627)
எம்.ஜி.ஆர். தோளில் தூங்கினார்... சிவாஜி மடியில் வளர்ந்தார்... கலைத் தாயின் தவப்புதல்வன்... உலக நாயகன்... என்றெல்லாம் புகழாரம் சூடப்பட்டக் கமலுக்கு, விஸ்வரூபம் இவ்வளவு தலைவலியைக் கொடுக்கும் என அவரே நினைக்கவில்லை! 



'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்-ல் ஒளி பரப்பப் ​போவதாக கமல் அறிவித்த நாளில் இருந்தே பிரச்னைகளும் ஆரம்பமாகின. தியேட்டர் உரிமையாளர்கள் கமலை எதிர்த்து அறிக்கை விட்டது, போலீஸ் கமிஷன​ரைச் சந்தித்தது என அடுத்தடுத்தப் பிரச்னை​களுக்கு இடையில்... கடந்த 9-ம் தேதி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்துப் பேசினார் கமல்



. அந்த சந்திப்புக்குப் பிறகு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செய​லாளர் பன்னீர்செல்வம், '' 'விஸ்வரூபம்’ படம்  முதலில் தியேட்டரில் ரிலீஸ். அதன்பிறகுதான் டி.டி.ஹெச். ஒளி​​பரப்பு'' என்று தீர்மானமாக அறி வித்தார்.


மறுநாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், ''என் அங்காடியில் எனது பொருளை விற்கிறேன். விருப்பப்​பட்டவர்கள் வாங்கிச் செல்​லுங்கள். குறைந்த விலைக்குக் கொடுங்கள் என்று பேரம் பேசாதீர்கள். என் ரசிகர்களைக் கட்டுப்படுத்தி வைத்து இருக்கிறேன். இனி அவர்கள் அமைதியாக

இருப்பது என் கையில் இல்லை. என் எதி ராளி​களின் நடவடிக்கையில் இருக்கிறது. 'விஸ்வரூபம்’ படத்துக்கு எதிராக மிரட்டல் விடுத்த 13 பேரின் பட்டியல் என்னிடம் இருக் கிறது. அவர்களின் பெயர்களைச் சொல்ல மாட்டேன்'' என்று பதிலடி கொடுத்தார்.



என்ன நடந்தது? கோடம்பாக்கம் வட் டாரத்தில் விசாரித்தோம்.


''வெளியூர் தியேட்டர்காரர்கள் பலருக்கும் பொங்கல் தினத்தில் 'விஸ்வரூபம்’ படத்தை ரிலீஸ் செய்ய ஆசை. அவர்களைத் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், விநியோகஸ்தர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் படத்தை வாங்கக் கூடாது என மிரட்டி இருக்கிறார்கள். சென்னை சாந்தி தியேட்டரில் படத்தைத் திரையிடக் கூடாது என்றும் மிரட்டல் வந்​திருக்கிறது. சிவாஜியின் மாப்பிள்ளையான வேணுகோபால்,


 'கமல் சின்ன வயசுல இருந்து எங்க வீட்டுல வளர்ந்தவர். எங்க மாமாவுக்கும் கமல்னா உயிர். அவரோட படத்தை வெளியிடக் கூடாதுனு சொல்ற அதிகாரம் யாருக்கும் இல்லை. என்ன ஆக்ஷன் வேண்டுமானாலும் எடுக்கட்டும். நாங்க படத்தை ரிலீஸ் செய்வோம்’னு கோபமாகச் சொல்லிட்டார். மிரட்டப்பட்ட தியேட்டர் அதிபர்கள் பலரும் கமலிடம் புலம்பி இருக்கிறார்கள். அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த கமல், மிரட்டிய 13 பேருக்கும் நோட்டீஸ் 



அனுப்ப முடிவெடுத்து இருக்கிறார். 'தனிப்பட்ட தியேட்டர் அதிபர்களை மிரட்டும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அத்துமீறி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் திரையரங்க உரிமத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் உண்டு’ என்று சட்ட ஆலோசகர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதன்பிறகே, ஆக்ஷனில் இறங்கி இருக்கிறார் கமல்.




இந்த விஷயம், சம்பந்தப்​பட்ட​வர்களின் காதுக்குப் போனதும், பதறியடித்தபடி கமலின் அலுவ​லகத்துக்குப் போனார்களாம். 'நீங்கள் எது செய்​தாலும் அது சரியாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் உங்​கள் பின்னால் நிற்போம்’ என்று சரண்​டராகி இருக்கிறார்கள். ஆனால் கமல் அவர்களிடம் எந்த பதிலும் சொல்ல​வில்லையாம். அதன்பிறகே, 'விஸ்​வரூபம் 25-ம் தேதி 500 தியேட்டரில் ரிலீஸ்’ என்று கமல் அறிவித்தார்'' என்கிறார்கள்.


கமலுடன் பேச்சுவார்த்தையில் கலந்து​கொண்ட தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயாரிடம் பேசினோம். ''தியேட்டர் உரிமையாளர்கள் அமைப்பாலும், சில விநியோகஸ்தர்களாலும் ஆரம்பத்தில் குழப்பங்கள் உண்டாகின. இப்போது எல்லாப் பிரச்னைகளும் சுமுகமாக முடிந்து இருக்கிறது. 25-ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் அன்று இரவு டி.டி.ஹெச்-சிலும் ஒளிபரப்பும் திட்டத்தில் கமல் இருக்கிறார். இதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 'தசாவதாரம்’ வசூலை 'விஸ்வரூபம்’ முறியடிக்கும் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இல்லை'' என்று உறுதியாகச் சொன்னார்.


பார்க்கலாம்!

எம்.குணா

படங்கள்: ஆ.முத்துகுமார்  


newviswa-14.jpg (630×420)

readerls views


1.மறுநாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், ''என் அங்காடியில் எனது பொருளை விற்கிறேன். விருப்பப்​பட்டவர்கள் வாங்கிச் செல்​லுங்கள்.. சரியா சொன்னிங்க. அதே மாதிரி தியேட்டர்காரங்களுக்கும் தங்களோட அங்காடில என்ன பொருள விற்பனை செய்ய வேண்டும் கூடாது என்று முடிவு பண்ண உரிமை இருக்கு. தியேட்டர்காரங்க ஒரு சங்கமா செயல்பட்டு முடிவு எடுக்கராங்க அவங்கள்ள சிலர பிரிச்சு தன் வழிக்கு கொண்டு வரும் போது எதிர்ப்பு வரது சகஜம்தான்.



 டிடிஎச்ல படத்த போட்டா பல தியேட்டர்களுக்கு பெரும் பாதிப்பு வரும் என்பது உண்மைதான். அதுவும் இல்லாமல் கமலுக்கு தியேட்டர் ரிலீஸுக்கு 80 கோடி பணம் வேணுமாம் (தமிழுக்கு மட்டும்) அவருக்கு 80 கோடி தரணும்னா டிக்கட் கலக்ஷன் 250 கோடி வரணும். 250 கோடில 35% சதம் வரிக்கு போயிடும் மிச்சம் இருக்கும் 160 கோடில 50% சதம் தியேட்டர்காரங்க ஷேர் மிச்சம் இருப்பதுதான் படத்த வாங்கினவங்க (வினியோகிஸ்தர்) ஷேர்.



 ஆனானபட்ட ஷாருக்கான் படங்களே அகில இந்தியா கலக்ஷன் 120 கோடிய தாண்டரதில்லை. 250 கோடி டிக்கட் கலக்ஷன்னா ஒரு டிக்கட் விலை 100 ருபான்னு போட்டாகூட 2.50 கோடி பேரு இந்த படத்த பார்க்கணும் அதவது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் இப்படி உள்ல 5 சிட்டி மக்கள் எல்லாரும் ஒருத்தர் விடாம 100 ருபா குடுத்து இந்த படத்த பார்க்கணும். நடக்கர காரியமா?




2. ஒரு தொழிலில் லாப நட்டம் சகஜம். லாபம் வரும் என்று நம்புபவர் அதில் இறங்கட்டும்.மற்றவர்கள் விலகி கொள்ளட்டும் எதற்க்காக ஒரு ரசிகனுக்கு டிடிஎச்ல படம் பார்க்கும் வாயப்பை தடுக்க வேண்டும்?




3. ஆக கமலுக்கு நல்ல விளம்பரம். ரஜினி வேற மாதிரி விளம்பரம் - இவர தடாலடியாக அரசியல்வாதிகளை நாடாமல் விளம்பரம். ஆனால் இவரது அப்ரோச் பிடித்திருக்கிறது. (இவர் படங்களும், அவற்றில் இவர் எல்லா பிரேமிலும் வர முயற்சிக்கும் சுயநலமும் வெறுப்பேற்றினாலும்).






4. 'நடிகர்களும் பிஸினஸ்மேன்கள் தான்'...என்று கமல் ஒரு பேட்டியில் சமீபத்தில் கூறியிருந்தார். எப்போது கலைஞன் வியாபாரியாக முடிவு செய்து விட்டானோ அப்போது வியாபார உலகின் தந்திரங்களை வென்றால் தான் நிலைக்க முடியும்.அந்த நோக்கில் பார்க்கும் போது நல்ல கலைஞனாய்

மட்டுமல்ல திறமையான வியாபாரியாகவும் கமல் தோன்றுகின்றார்.
மிக தரமான, நல்ல பொருளை விற்கும் வியாபாரியிடம் தான் இத்தகைய
உறுதியையும்,போராடும் குணத்தையும் பார்க்க முடியும்.'விஸ்வரூபம்' அந்த விதத்தில் நிறைய எதிர்பார்ப்பினை கொடுத்திருக்கிறது....
வாழ்த்துக்கள் கமல்...!!!





5. ஆக மொத்தம் தமிழகம் இப்போ மஃபியாகைகளில் உள்ளது. எது செய்தாளும் அவர்களுக்கு மாமூல் வர வேண்டும். என்ன நாம் மக்களாட்சி நடகிர நாட்டில் உள்ளோமா?. சந்தேகம் தான்.




6. சீக்கிரம்... படம் நீங்க ரீலிஸ் பண்றதுக்கு முன்னாடி திருட்டு விசிடியில் ரிலிசாகப்போகு




7. இவருக்கு எல்லாம் எனக்கு தெரியும் என்ற திமிர்....இது ஒன்றே போதும் இவருக்கு ஆப்பு வைக்க... ( உதாரணம்... கழ்டப்பட்டு இளையராஜா போட்ட டுயன இவரு பாடி கெடுக்கிற மாதிரி...)




8. தொழில் நுட்பத்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் கமல் ஹாசன் முன்னோடி. புதுமைகள் புகுத்தும் போது எதிர்ப்புகள் இருக்கவே செய்யும். அனால், கமலுக்கு, தமிழ் ரசிகர்களின் பேராதரவு எப்போது உண்டு!


9. இந்த விஷயம், சம்பந்தப்​பட்ட​வர்களின் காதுக்குப் போனதும், பதறியடித்தபடி கமலின் அலுவ​லகத்துக்குப் போனார்களாம். 'நீங்கள் எது செய்​தாலும் அது சரியாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் உங்​கள் பின்னால் நிற்போம்’ என்று சரண்​டராகி இருக்கிறார்கள்.


கோழைகள், வேறு யாரோ (அரசியல்?) பின்னனியில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.


கமலின் முடிவும், எதிர்த்து நின்ற சவாலுக்கும் பாராட்டுக்கள். 


படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்



thanx - ju vi 



Vishwaroopam-Reservation-Starts-Tomorrow-Poster.jpg (538×667)a




அன்புக்குக் கட்டுப்பட்டு விஸ்வரூபம் 25 ல் திரையரங்கில் வெளியீடு: கமல்ஹாசன்



விஸ்வரூபம் படம் வரும் 25-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் செய்யப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.


திரையரங்க உரிமையாளர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு, இந்த முடிவை தாம் மேற்கொண்டதாக அவர் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். 



டி.டி.எச். நிறுவனத்துடன் பேச்சு நடத்தி, விஸ்வரூபத்தை டி.டி.எச்.சில் எந்தத் தேதியில் வெளியிடுவது என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.



a





0 comments: