Thursday, January 31, 2013

விஜய் + அஜித் + நித்தியானந்தா = ? சினிமா புதிர்

1. டாக்டர்,ரோஜா அல்லது ரோஜா இதழ் எதுவுமே என்னை கவருவதில்லை,இது எதனால?  ஒரு வேளை ஆர் கே செல்வமணி பக்கத்து வீடுன்னு பயமோ?
--------------


2. ட்ரெய்லரில் அடக்கி வாசித்து இருந்தால் கமல் இத்தனை பிரச்சனைகளை சந்திச்சிருக்கத்தேவை இல்லை # நீதி - பட மேக்கிங்கை விட ட்ரெய்லர் முக்கியம்-------------------------


3. சார், ஹீரோயினை க்ளைமாக்ஸ் சீன்ல தான் டச் பண்றீங்களாமே? ஏன்? 
கமல் - உச்சத்தில் ஏதும் மிச்சம் வெச்ச குறை இருக்கக்கூடாதுன்னுதான்-------------------


4. கமல் ரசிகையை லவ் பண்ணுனா நிறைய யூஸ் உண்டு , ஆனா தனுஷ் ரசிகையை லவ் பண்ணா சைக்கோ ஆக்காம விட மாட்டாங்க # சும்மா ---------------------


5. டாடி, எனக்கு கத்திரிப்பூ கலர்ல சேலையே இல்லை. முதல்ல உன் நெட் கனெக்‌ஷனுக்கு கத்திரி போடனும்----------------------


6. டியர், நான் உங்க மேல பைத்தியமா இருக்கேன். ம், நானும் # MAD FOR EACH OTHER-----------------------


7. காதலிப்பது எப்படி? என 18 புக்கும் படிச்சேன், பைத்தியம் ஆனேன் # பதினெண் கீழ்(ப்பாக்க)க்கணக்கு நூல் போல -----------------------


8. படத்தை விற்றுவிட்ட கமலுக்கு வழக்கு தொடர உரிமை இல்லை- தமிழக அரசு அதிரடி வாதம் #படத்தை வாங்குனது அரசா?----------------------------9. ஜெ ( மனசுக்குள் ) - ஹூம், நமக்கும் கோர்ட்டுக்கும் ராசியே இல்லை போல
-----------------------10. இன்னும் எனக்கு காதலிக்கிற வயசே வரவில்லை- அமலாபால் # நல்ல வேளை, இன்னும் வயசுக்கே வர்லைனு சொல்லலை

-------------------------11. கமல் ரசிகர்கள் மட்டுமல்ல நல்ல சினிமா ரசிகர்கள் மனதிலும் இப்போ ஓடும் பாட்டு - அய்யய்யோ ஆனந்தமே .மலர்ந்ததம்மா கமல் முகமே-----------12. விஸ்வரூபத்துக்கு நஷ்டம் ஏற்படுத்திய தமிழக அரசு ரூ.100 கோடி கோர்ட் டிப்பாசிட் செய்ய கோரிக்கை!# அப்படிப்போடு அருவாளை.தேவர் மகனா கொக்கா?
----------------------


13. ஜட்ஜ் - நல்லவேளை நான் கமல் ரசிகன் கற மேட்டர் யாருக்கும் தெரியல--------------------------14. பெண்களுக்கு பேன்கள் தொல்லை.ஆண்களுக்கு பெண்கள் தொல்லை.----------------------

15. ஜட்ஜ் - மொத்தமா உனக்கு எத்தனை சம்சாரம் ? 
எசமான்.மொத்தமா.1 ஒல்லியா 2 ஆக மொத்தம் 3
------------------------
16. ரஜினி அடிக்கடி மந்த்ராலயா போறாரே? மந்த்ரா வுக்கு கட்ன ஆலயமா ? # இதுவும் சும்மா
-----------------------------
17. ஜட்ஜ் - பிரச்சனையை பேசித்தீர்க்க முடியாதா ?
,யுவர் ஆனர்.பிரச்சனையே என் சம்சாரம் என் கிட்டே பேசமாட்டேங்கறா அப்டினுதான் 
-----------------------------
18. ரிசப்ஷனிஸ்ட் - 20 நிமிஷமா பேப்பர் படிச்சுட்டு இருக்கீங்க? 
யாரைப்பார்க்கனும்? உங்களைத்தான் ஸைட்டிங்.பேப்பர் ஒரு சாக்கு 
-----------------------------
19. மேடமை பார்க்கனும். ரிசப்ஷனிஸ்ட் - 
வெயிட் ப்ளீஸ். 
என் வெயிட் 78,உங்க வெயிட் 46 இருக்கும் 
-------------------------
20./ கமல் - கனம் கோர்ட்டார் அவர்களே! படம் பார்த்தாச்சா?
 ஜட்ஜ் - சத்யராஜ் படத்துலயே செம மொக்கை படம் அதுதான்
-------------------------
21. சின்னத்தம்பி பிரபு - எனக்கு தாலின்னா என்னன்னே தெரியாது.என் கிட்டே வந்து தாலிபான் னா யாருன்னு கேட்கறாங்க
---------------------
22. உடன்பிறப்பே! தம்பி கமல்.எனக்கு முஸ்லீம்கள் ஓட்டும் வேண்டும்.உன் ரசிகர்கள் ஆதரவும் வேண்டும்.அதுதான் இருதலைக்கொள்ளி எறும்பாய்த்தவிக்கிறேன்
-------------------------
23. ரஜினி -(மனசுக்குள்) = நல்ல வேளை.பாட்ஷா இப்போ வர்லை.நம்மை பாதுஷா ஆக்கி இருப்பாங்க
-------------------------------
24.  முஸ்லீம் சகோதரர்களுக்கு எதிரான வசனங்கள் வைத்த புத்திசாலித்தன டைட்டில் படங்கள் = தாயகம் , ஐ லவ் இண்டியா ,ஜெய் ஹிந்த்
--------------------
25. கமல் (மனசுக்குள் ) - அரசியல் எனக்கு தெரியாது.அப்டியே நான் மேடைல பேசுனா யாருக்கும் புரியாது.என்னை தர்மசங்கடமான நிலைக்கு கொண்டுபோகாதீங்க
----------------------------
26. புரட்சித்தலைவி அவர்களுக்கு வணக்கம். கோச்சடையான் க்கு இதே போல் தடை போட திராணி இருக்கா? # சும்மா
-----------------------
27. சட்டம் தன் கடமையைச்செய்தால் மகிழ்ச்சி! மடமையை செய்தால் ஆதரவு அமைதிப்புரட்சி # விஸ்வரூபம் தீர்ப்பு
-------------------
28. பேஷன் டிசைனிங் படிக்கிறேன்.உங்களுக்கு அதுல ஆர்வம் உண்டா? பேஷன் டி வி வேனா பார்ப்பேன் # பஸ் கடலை்
------------------------
29. உலகையே சுற்றி வந்தேன்.ஆனாலும் இளைக்க முடியவில்லை. 2 நாளாக உன்னையே சுற்றிவந்தேன்.கிரி வலம் இன்னும் முடியவில்லை.சுற்றளவு ஜாஸ்தி
---------------------
30. வெற்றி நடை போடுகிறது"= விஜய் ( வெற்றி) அஜித் ( நடை) நித்தி ( விளக்கனுமா?)
---------------------------

0 comments: