Wednesday, January 02, 2013

2013 - ஹேப்பி நியூ இயர் கொண்டாட்ட ட்வீட்ஸ்

இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1..உயர் கல்வி கற்றவனை விட பெண்ணின் மனதை படித்தவனே அவள் மனசுக்குப்பிடித்தவன் ஆகிறான் 
--------------------------


2. பெண்களுக்கு குறுகி இருப்பது இடையும் , மனமும். 


--------------------


3. அரியர் வைக்காத காலேஜ் ஸ்டூடன்ட்டும் ,சின்ன வீடு வெச்சுக்காத அரசியல்வாதியும் அபூர்வம் 
-------------------------


4. இறுதி வரை மன உறுதியுடன் இருக்கும் ஆணின் காதல்.பெற்றோருக்குத்தெரியும் வரை உறுதியாய் இருக்கும் பெண்ணின் காதல் --------------------------


5. நம் மானம் கப்பல் ஏறுவது நாம் மிகவும் அபிமானம் வைத்தவர்களாலேதான் பெரும்பாலும் நிகழும் ------------------------6. எவ்வளவு மன உளைச்சல்கள் தாக்கி நின்றாலும் வதனத்தில் புன்னகையை தேக்கி நின்றவனே வாழ்வில் வெற்றி கொண்டான் 
---------------------------


7. திரு நீறு இல்லா நெற்றியும்,தன்னடக்கம் ,பணிவு இல்லாத வெற்றியும் பாழ் 
-------------------


8. பஸ்ல சீட் பிடிக்கனும்னா பஸ் ஸ்டேன்ட் போயிடனும்.பொண்ணு மனசுல இடம் பிடிக்கனும்னா வயசுக்கு வந்து சீர் செய்யும்போதே காதலை சொல்லிடனும். ------------------------


9. ஒரு ஜி கே கேள்வி - ஒரு பெண் ஆணை அட்டெம்ப்ட் ரேப் செய்வதும் அவள் மேல் ஆண் கோர்ட்டில் கேஸ் போட்டு ஜெயிப்பதும் எந்த தமிழ்ப்படத்தில் ?

ஜப்பான் அழகி நமீதா வின் இந்திர விழாவில் 
------------------


10. தன் தாய் வீட்டில் இருந்து வரப்போகும் மனைவிுக்கு வருத்தப்படாதே. வருவதற்கு முன்னரே எஞ்சாய் 
----------------------Wanna Apple ???
Wanna Apple ???11. டாக்டர். கனவுல வந்தது அனகோண்டா என்னை முழுங்க முயற்சி பண்ணுது..ஆனா நான் தப்பிக்கிறேன்..ஆமா ரொம்ப குண்டா இருக்கீங்ளே 
----------------------


12. ஷார்ட் டைம் மெமரி லாஸ் நோய் வந்தாலும் மறந்துவிடாத லாங்க் டைம் மெம்மரி நம் காதல் 
------------------------


13. 4 வழக்குகளை கூட தாக்குப்பிடிக்க முடியாத விஜயகாந்த் CM ஆக முடியுமா? : அழகிரி - # நாலும் தெரிந்த நல்ல தம்பி சொன்னாசரியாத்தான் இருக்கும் 
--------------------------


14. ஊடல் பொழுதுகளில் ,பொய்க்கோபத்தருணங்களில் தன்னிடம் ஆண் கெஞ்ச வேண்டும் ,தாள் படிந்து கிடக்க வேண்டும் என்பது பெண்களின் குரூர எதிர்பார்ப்பு ------------------------------


15. ஒரு ஆணின் காதல் அரசுப்பணி போல் நிரந் தரமானது.பெண்ணின் காதல் நிபந்தனைகளுடன் கூடிய தனியார் பணி போல 
-------------------------


16. ஆண்ட்ரியா = வெண்ணெய் தடவிய அரச இலை.பூஜா = கண்ணில் ஒற்றிக்கொள்ளும் கற்பூர வெற்றிலை ---------------


17. உள்ளங்கையை அழுத்துவதன் பொது அர்த்தம் நான் உன்னை என் உள்ளங்கையில் வைத்துத்தாங்குவேன் என்பதாகும் 
----------------------


18. காதலனைத்தவிர வேறு யாரையும் பெண் கவனிப்பதில்லை.எதிர் வரும் பெண்களை தன் காதலி வடிவில் ஆண் ரசிக்காமல் விடுவதில்லை ------------------------


19. பெண்ணின் அதிகபட்ச தியாகம் காதலன் பெயரை த்தன் குழந்தைக்கு வைப்பது.ஆணின் குறைந்த பட்ச தியாகம் வாழ்நாள் முழுக்க முதல் காதல் நினைவில் இருப்பது் 
-----------------------


20. நீ என் அன்பை புறக்கணித்தபோது கூட என்னை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம் என எனக்குத்தோன்றியதே இல்லை 
---------------------------எல்லா காலைகளும் நமக்காகவே விடிகின்றன.இனிய காலை வணக்கம்.


21. தான் உண்மையாய்க்காதலித்த பெண்ணுக்கு துரோகம் இழைத்ததாய் ஆண்கள் வரலாற்றில் இல்லை. 
----------------------


22. டியர் .ஐ லவ் யூ. நீ ஓக்கே சொன்னா .நீ எனக்கு மிசஸ். நாட் ஓக்கே ன்னா ஐ மிஸ் யூ --------------------------23. பாம்பையும் ,பணக்காரனையும் ஒரே இடத்தில் பார்த்தால் ஆண் பாம்பை அடிக்கப்பார்ப்பான்.பெண் பணக்காரனை மடக்கப்பார்ப்பாள் 
--------------------------


24. ஒரு ஏழையின் ப‌சியைவிட‌க் கொடுமையான‌து உன் நிராகரிப்பு.உன் நிராகரிப்பை விடக்கொடியது உன் அலட்சியம் ் ---------------------------


25. அன்பே! நீ சாம்பார் வெச்சதா சொன்னாலும் அது சாதா ரசம் தான். 
-------------------------


26. மனைவி முட்டாள்தனமாய்க் கேள்வி கேட்கும்போது தான்  கணவன் கேனத்தனமாய் பதில் சொல்கிறான் 
------------------------------


27. புது வருஷத்தன்னைக்கு ஒரு புது பிகரோட கடலை போட்டா வருஷம் பூரா சாகுபடி அமோகமா இருக்குமாம் # சென்னிமலை சித்தர் வாக்கு 
-----------------------------


28.  அசினுக்காக பார்த்திருந்தா நீ யூத். நதியாக்காக பார்த்திருந்தா ஓல்டு #்.. M குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி! 
--------------------


29. உன் கன்னத்தில் இடும் ஒத்தட முத்தம் பஞ்சாமிர்தத்தை உள்ளங்கையில் ஊற்றி சுவைப்பது போல.இடம் பொருள் ஏவல் கவலைப்படாதது --------------------------30. டியர் உன் புருவம் வில்லு மாதிரி இருக்கு. கண்ணு சுறா மாதிரி. ம்ககும்.போடா போக்கிரி .---------------------


Photo31. கமல் ( மைன்ட் வாய்ஸ் ) - நல்ல வேளை அனிரூத் நடிக்க வர்ல.நம்ம பொழப்புல மண்ணைபோட்டிருப்பாப்ல 
--------------------------


32. ஆர்மோனியம் ஸ்பெஷலிஸ்ட் - இளையராஜா .மவுத் ஆர்கன் ஸ்பெஷலிஸ்ட் - அனிரூத் # ஆண்ட்ரியா பாறைகள்் ---------------------------


33. அனிருத  ஏன் யாருக்குமே பிடிக்கலை? 


 எப்போ அவர் ஆண்ட்ரியா கிட்டே லிப் லாக் பண்ணாரோ அப்பவே லாக் அவுட் 

-----------------------------


34. உங்களால் நல்ல படைப்பை உருவாக்க முடியாத சந்தர்ப்பங்களில் நல்ல படைப்பை ,படைப்பாளிகளை ஊக்குவிக்கலாம். 
-------------------------


35. ஆரோக்யமான நல்லசினிமாக்கள் மேலும் மேலும் உருவாக அலெக்ஸ்பாண்டியன் மாதிரி மாமூல் மசாலாக்குப்பைகள் மண்ணைக்கவ்வ வேண்டும் 
-----------------------36. மேரேஜ் ஆகாதவங்களுக்கு புது வருஷத்துல புது சம்சாரம் கிடைக்க வாழ்த்துகள்.மேரேஜ் ஆனவங்க ஒழுங்கா பழைய சம்சாரத்தோடயே இருக்க வாழ்த்து ;-))) ----------------------


37. விஸ்வரூபம் எத்தனை நாள் ஓடும்னு எதிர்பார்க்கறீங்க ? 
கமல் - படம் 2 1/2 மணி நேரம் ஓடும்.அதுதான் கன்பர்மா சொல்ல முடியும் ----------------------------
 
டுடே டைம் பாஸ் @ டி வி

2 comments:

பூந்தளிர் said...

கருத்துக்கள் எல்லாமே ஓக்கே ரகம். 34-ம் 6- நல்லா இருக்கு.

அம்பாளடியாள் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்கள்
அனைவருக்கும் உரித்தாகட்டும் !....