Saturday, January 26, 2013

திருப்பூரில் பதிவர் திருவிழா , புத்தக வெளியீட்டு விழா @ 27 1 2013


மக்களே! திருப்பூர்ல நாளை  27 1 2013  ஒரு பதிவர் சந்திப்பு இருக்கு. சமூக ஆர்வலரும் ,சமுதாயப்பொறுப்பும் , அக்கறையும் மிக்க, நான் மிக மதிக்கும் ஒரு பதிவர் திருப்பூர் ஜோதிஜி அவர்களின் புத்தக வெளியீட்டு விழா நடக்க இருக்கு , கொங்குமண்டல்ம் மற்றும் சாத்தியம் உள்ளவர்கள் அனைவரும் வருக. 


 விழா டீட்டெயில்ஸ் டைப் அடிக்க டைம் இல்லை, சோ ஆல்ரெடி பலர் போட்ட பதிவை காபி பேஸ்ட்டிங்க் 


டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா - முதல் தகவல் அறிக்கை

வணக்கம் நண்பர்களே
இந்த தகவலை என் தொடர்பில் இருக்கும், எனக்குத் தெரிந்த, என் மின் அஞ்சல் முகவரியில் இருந்த பெரும்பாலான நண்பர்களுக்கு அனுப்பி உள்ளேன். இப்போதுள்ள வேலைப்பளூவின் காரணமாக முக்கியமான பலருக்கும் இந்த தகவல் சென்றடையாமல் இருக்கக்கூடும் என்பதற்காக இங்கே எழுதி வைக்கின்றேன். 
இந்த மாதம் முழுக்க இது தொடர்பான அனைத்து தகவல்களும் இங்கே இடம் பெறும்.  
திருப்பூருக்குள் இருக்கும் பலரையும் தெரியும். சிலரின் மின் அஞ்சல் முகவரி தெரியாமல் இருக்கும். திருப்பூரில் உள்ள அரசு துறை, அதிகாரத்துறை, உளவுத்துறை, மாசுகட்டுப்பாட்டுத்துறை, சாயப்பட்டறை முதலாளிகள், ஏற்றுமதி நிறுவனங்கள், முதலாளிகள், பணியாளர்கள் என்று சகலரும் என் தளத்தை படித்துக் கொண்டு இருப்பதால் இப்படி ஒரு விழா திருப்பூரில் நடக்கப் போகின்றது என்பதற்காக இங்கே எழுதி வைக்கின்றேன். இந்த விழாவிற்கான அழைப்பிதழ் தயாராகிக் கொண்டு இருப்பதால் ஒவ்வொருவரும் எனக்கு முக்கியமானவர்களாக இருப்பதால் உங்கள் மின் அஞ்சல் முகவரியை பின்னூட்டத்தில் எழுதி வைக்க வேண்டுகின்றேன்.  அப்படி வெளியே காட்டிக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் அவசியம் ஞாயிற்றுக் கிழமை அன்று அரங்கத்திற்கு வரும் படி அன்போடு அழைக்கின்றேன்.
பலரிடமிருந்து வாழ்த்துரைகள் வந்து சேர்ந்தது. சிலரின் மின் அஞ்சலில் உள்ள ஸ்பேர்ம் பகுதிக்கு போய் இருக்க வாய்ப்பு இருப்பதால் ஒரு வேளை நமக்கு அனுப்பினாரா என்று சோதிக்க விரும்புவர்கள் மட்டும் உங்கள் மின் அஞ்சலில் உள்ள ஸ்பேர்ம் பகுதியை சோதித்துப் பார்க்கவும். தொடர்ச்சியான மின் அஞ்சல் பறிமாற்றம் இல்லாத மின் அஞ்சல் முகவரி  என் அனுபவத்தில் ஸ்பேர்ம் பகுதிக்குத் தான் சென்று விடுகின்றது. அழைத்துச் சொன்னதும் சோதிக்க வேண்டியதாக உள்ளது. இது உங்கள் புரிதலுக்காக மட்டுமே.
உங்களை அன்போடு அழைக்கின்றேன்.

வணக்கம். 
27 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரைக்கும் திருப்பூரில் பல்லடம் சாலையில் உள்ள டிஆர்ஜி நவீன கூட்ட அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்பிரபல எழுத்தாளர்கள்வலைபதிவர்கள்,தொழில் அதிபர்கள்சுற்றுப்புறச் சூழல் சார்ந்து செயல்படும் சமூக அக்கறை மிக்க ஆர்வலர்கள் மத்தியில் டாலர் நகரம் என்ற நூல் வெளியீட்டு விழா நடக்க இருப்பதால் தங்களை அன்போடு அழைக்கின்றோம்.
இந்த நூல் ஸ்விஸ் ல் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் 4 தமிழ்மீடியா குழுமத்தின் ஒரு அங்கமான 4 தமிழ்மீடியா (படைப்பாய்வகம்) மூலம் வெளிவருகின்றது.
திருப்பூரில் உள்ள தமிழ்வழிக்கல்வியை சிறப்பான செயல்பாடுகளின் மூலம் ஆச்சரியமளிக்கும் பள்ளிக் குழந்தைகளின் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. முதல் முறையாக தமிழ் இணையம்திரட்டிகள் பற்றிய முழுமையான விபரங்கள்வலைபதிவுகளின் வளர்ச்சிமாற்று ஊடகம் குறித்த எண்ணங்கள்,திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வலைபதிவில் எழுதிக் கொண்டிருக்கும் அத்தனை வலைபதிவுகளைப் பற்றிய அறிமுகத்தோடுஅவர்களின் தளம் குறித்த விபரங்களை விழா சிறப்பு மலராக வெளிவர உள்ளது.
அருகில் உள்ள கோவை மற்றும் இதனைச் சார்ந்த மற்ற பகுதிகளின் நண்பர்களின் வேண்டுகோள்களை சிறப்பாக நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
திருப்பூரில் உள்ள பிரபல தொழிலதிபர் சமூக சேவகர், அமெரிக்கா பெட்னா சங்கத்தில் இருக்கும் கேபிகே செல்வா அவர்களின் அறக்கட்டளை மூலம் இந்த விழா நடத்தப்படுகின்றது.இவர் இங்குள்ள பல்வேறு சங்கத்தின் பொறுப்பாளர். கல்விக்காக பல ஆக்கபூர்வமான பணிகளை செய்து கொண்டு வருபவர்.

விழாவுக்காக தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்குபவர்கள் தமிழ்ச்செடிசேர்தளம்தொழிற்களம்கனவு இதழ் பத்திரிக்கை போன்றவர்கள் மூலம் இந்த விழா நடக்க இருக்கின்றது. இந்த விழாவில் வேறு சில நிறுவனங்களும் தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள்.
முழுமையான விபரங்கள்அழைப்பிதழ் அடுத்த கடிதத்தின் வாயிலாக தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த கடிதம் தங்களின் நினைவுக்காக,தங்களின் திட்டமிடுதலுக்காக உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் ஆதரவுக்காக இந்த கடிதம் அனுப்பி வைக்கப்படுகின்றது. விழா குறித்த விபரங்கள் நண்பர்களின் தளத்தில், தமிழ்செடி, சேர்தளம், தொழிற்களம், தேவியர் இல்லம் தளத்தில் வெளியிடப்படும்.
நட்புடன்
ஜோதிஜி

டாலர் நகரம் விழாவுக்கு வந்தவர் வருகை தரப் போகின்றவர்கள் - தகவல்கள்

4 தமிழ் மீடியா தளம் டாலர் நகரம் என்ற எனது புத்தகத்திறக்காக சிலரை பேட்டி கண்டது. அது என் தளத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடுகின்றேன்.
இது ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வருகின்ற ஞாயிறு (27.1.2013) டாலர் நகரம் விழாவில் உரையாற்றுகின்றார்.
திருப்பூர் வருகின்ற நண்பர்கள் கவனத்திற்கு.
தங்கும் வசதி திருப்பூரில் உள்ள எஸ் எஸ் ஹோட்டல் என்ற தங்குமிடம் நண்பர்களுக்காக அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஞாயிறு காலையில் வந்து சேர முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள் மற்றும் இந்த விழாவில் தங்கள் மேலான ஒத்துழைப்பை உழைப்பை தேவியர் இல்லத்திற்காக பல வகையிலும் தந்து உதவிக் கொண்டிருப்பவர்களை கீழ் கண்ட அலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளவும். 
தங்களுக்கு தேவையான உதவிகளை, வழிகாட்டுதலை,அழைத்து வருதல் போன்றவற்றில் உதவி புரிவார்கள்.
சேர்தளம் தலைவர்.
வெயிலான் ரமேஷ் 98 94 03 59 17 
தமிழ்ச்செடி அங்கத்தினர்கள்
வீடு சுரேஷ் குமார் 98 439 41  916
இரவு வானம் சுரேஷ்  860 86 910  55
வாகன போக்குவரத்து ஒருங்கிணைப்பு மற்றும் எனக்கு தனிப்பட்ட முறையில் பல உதவிகள் செய்தவர் செய்து கொண்டிருப்பவர்
நிகழ்காலத்தில் சிவா 97 900 36 233
எனது உடன்பிறப்பு போல கடந்த நான்கு ஆண்டுகளாக என் வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவியர் இல்லத்தின் மேல் அக்கறை கொண்டு சென்னையில் இருந்து திருப்பூர் வந்து இந்த விழாவுக்கு உழைத்துக் கொண்டிருப்பவர்
ராஜராஜன்  99 411 43 821
புத்தகம் தொடர்பாக உங்கள் வீடு தேடி வர தொடர்புக்கு, மற்றும் மொத்த புத்தகத்தையும் வாங்கி சந்தைப்படுத்துதல் என்ற மகத்தான் உதவியை செய்து கொண்டிருக்கும் ஒரு பிரபல நிறுவனத்தின் பங்குதாரர் தன்னுடைய பெயரை எந்த இடத்திலும் போடக்கூடாது என்று கட்டளையோடு தேவியர் இல்லத்தின் மேல் அதிக அக்கறை கொண்டிருப்பவர். அவரின் பணியாளர் அலைபேசி எண்
திரு. மகேஷ் அலைபேசி எண் 97 89 311 666
இங்கே குறிப்பிட்ட எந்த அலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளும் போது விழாவில் கலந்து கொள்ள, உங்கள் வருகையை உறுதிப்படுத்தும் போது உங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய காத்திருக்கின்றார்கள்.
27 1 2013 காலை 9.30  மணிக்கு விழா தொடங்குகின்றது.  
காலை 9  மணிக்கு அரங்கத்தில் இருக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். 
தாய்த்தமிழ் பள்ளி குழந்தைகளின் அற்புத பாடல் நிகழ்ச்சிகளை நீங்கள் அவசியே கண்டு களிக்க வேண்டும்.  தமிழ் இலக்கியம் சார்ந்த, மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன், மற்றும் தந்தை பெரியார் பெருமையை பறைசாற்றும் பாடல்கள் என் நீங்கள் இது வரையிலும் கேட்டிராத பல அற்புத பாடல்களை தங்களது அசாத்தியமான திறமைகளால் உங்களை மகிழ்விப்பார்கள்.
என்னுடைய புத்தக அறிமுகம், வெளியீடு அறிமுகம் என்பதை விட பல நண்பர்களை இதன் சந்திக்க வாய்ப்பு என்பதாக கருதியுள்ளேன். 
இது தவிர வலைபதிவர்களை மேடையில் பேச வைக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.  
தாய்த்தமிழ் பள்ளி, ஞானாலயா வை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். தமிழ் இணையம் மற்றும் திரட்டிகள் குறித்த அறிமுகத்தை திருப்பூரில் உள்ள பலருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்.
விழா மலர் மூன்று பகுதியாக கொண்டு வந்துள்ளோம். 
குறிப்பாக தமிழ்மணம் உருவாக்கிய திரு. காசி ஆறுமுகம் அவர்களின் உழைப்பை இந்த உலகத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று தமிழ்ச்செடி அமைப்பாளர்களில் ஒருவரான திரு வீடு சுரேஷ்குமார் பிடிஎஃப் கோப்பாக தனது அற்புத வடிவமைப்பு திறமையின்  மூலம் உருவாக்கியுள்ளார். 
விழா அன்று அந்த கோப்பு இணையத்தில் வெளியிடப்படும்.  
எளிமையான அந்த விழா மலர் விழா அரங்கத்தில் வெளியிடப்படும். 
25.1.2013 அன்று புத்தக கண்காட்சியில் பின்னல் அறக்கட்டளை மற்றும் மகேஸ்வரி புத்தக நிலையம் என்ற இரண்டு கடையில் டாலர் நகரம்  புத்தகத்தை கொண்டு போய் நண்பர்கள் கொடுத்தார்கள். 
திருப்பூர் 2013 புத்தக கண்காட்சியில் டாலர் நகரம் குறித்த ஒரு ப்ளக்ஸ் போர்டு வைத்துள்ளார்கள். 
மாதிரி டாலர் நகரம் புத்தகங்களை பின்னல் மற்றும் மகேஸ்வரி புத்தக நிலையத்திற்கு நண்பர்கள்  கொண்டு போய்ச் சேர்ந்த அந்த நிமிடத்தில் காத்திருந்த ஒருவர் உடனடியாக வாங்கிக் கொண்டு சென்றதை நண்பர்கள் அழைத்துச் சொன்ன போது என்னை விட என் தம்பிமார்கள் அதிக மகிழ்ச்சியில் அழைத்துச் சொன்னார்கள். .  
நாலைந்து பேர்கள் டாலர் நகரம் புத்தகத்தை வாங்கிக் கொண்டு சென்றதை பார்த்த போது தான் எனக்கே உங்கள் புத்தகம் கடைகளுக்கு வந்து விட்டது என்று தெரிந்தது என்று வெயிலான் ரமேஷ் அழைத்துச் சொன்னார்.
உள்ளுரில் பத்திரிக்கையுடன் கொடுக்கப்பட்ட சுவரொட்டி விளம்பரங்கள் மூலம் முன்பதிவு செய்ய என்ற தகவலை என் மேல் அக்கறை டெக் மீடியா (கணினி துறை) நண்பர் விஜய் மற்றும் விகேஆர் பிரிண்ட்டிங்,  செண்பகம் மக்கள் சந்தை, சாப்ளின் வாட்ச் ஹவுஸ், ப்ரகாஷ் நியூஸ் ஏஜென்ஸி போன்றவர்கள் தங்களின் மகத்தான் உதவிகள் மூலம் விளம்பரம் என்பதையும், நேரிடையான சந்தைப்படுத்துதல் என்ற புதிய சாதனையை உருவாக்கி காட்டியுள்ளனர்.
நிச்சயம் இந்த புத்தகம் திருப்பூர் முழுக்க சென்று சேரும் என்று நம்புகின்றேன். 
வெட்டிக்காடு ரவி பெங்களூரில் இருந்து திருப்பூர் வந்து சேர்ந்து தற்போது எஸ் எஸ்  ஹோட்டலில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கின்றார். இவர் இந்த விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு வாரமாக அவரது தினசரி கடமைகளில் ஒன்றாக அழைத்து பேசி உதவிகள் பல செய்து தன் பங்களிப்பை செய்து உள்ளார். 
முகம் தெரியாமல் பழகி இதயத்தால் இணைவது தான் இணைப்பது தான் இந்த தமிழ் இணையம். 
எழுத்தாளர் சிந்தனையாளர், பத்திரிக்கையாளர் என் ஆசான் திரு. ஞாநி அவர்கள் இன்று இரவு 9 மணிக்கு எஸ் எஸ் ஹோட்டல் வந்து சேர்கின்றார்.
திரு. அப்துல்லா, திரு. ஜோசப் பால்ராஜ் (சிங்கப்பூர்) இருவரும் இன்று மாலை திருப்பூரில் இருக்கின்றார்கள்.
மீதியுள்ள விபரங்கள் இன்று அடுத்த வெளியிடப்படும் அடுத்த பதிவில் வெளியிடுகின்றேன்.
வாருங்கள் நண்பர்களே.


நண்பர்கள் பலரும் தேவியர் இல்லம் ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருப்பூர் வந்த வண்ணம் இருக்கின்றனர்.  அதில், சிலருக்கு விழா நடக்கும் இடம் அழைப்பிதழில் இருந்தாலும், குறிப்பான அடையாளம் இருந்தால் நல்லது, நாளை ஞாயிறு காலை நேரடியாக வந்துவிட வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்ததன் பேரில் இணைப்பு கொடுத்து இருக்கிறேன்,

விழா நிகழும் இடம் திருப்பூர் டிஆர்ஜி ஹோட்டல், பல்லடம் ரோடு, பழைய பஸ் நிலையத்திலிருந்து தெற்கே பல்லடம் ரோட்டில் சுமார் 700 மீட்டர் தூரத்தில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது.

 11.092603, 77.346939


திருப்பூர் பழைய் பேருந்து நிலையத்திலிருந்து வழி - http://goo.gl/maps/aYfP1

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வழி - http://goo.gl/maps/vsvuI
திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து அரங்கை வந்தடைய - http://goo.gl/maps/gwN4m




நாளை நேரில் சந்திப்போம் நண்பர்களே..
நிகழ்காலத்தில் சிவா
9790036233
நன்றி - அண்ணன் ஜோதிஜி 

1 comments:

ஜோதிஜி said...

நன்றி செந்தில். கூகுளில் தேடிய போது உங்கள் தளம் வந்தது.