Thursday, January 10, 2013

கரண்ட் கட்டுக்கு தீர்வு

-->
ஒளிமயமான எதிர்காலம்!

‘‘சூரிய விளக்குக்கு மாறுங்க!’’


ஐயோ... கரண்ட் கட் பிரச்னை தாங்க முடியலையே!"
மின் கட்டண உயர்வும் எக்கச்சக்கமாயிடுச்சே!" என்ற புலம்பல்தான் இப்போது எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
சென்னை கிருகம்பாக்கத்தில் எம்.எஸ். லைட்டிங் சொல்யூஷன்ஸ்என்ற பெயரில் சோலார் மின்விளக்குகளை சந்தைப்படுத்தி வருகிறார் சுதா ரமணி.
மின் வெட்டு, தட்டுப்பாடு, பகிர்வில் பிரச்னை இவ்வளவுக்கும் ஒரே தீர்வு இறைவன் அளித்த இயற்கைக் கொடையான சூரியனே! சூரிய சக்தியே பிரபஞ்ச சக்தி. இன்று எப்படி கம்ப்யூட்டர் இன்றி, உலகில்லையோ, அதுபோல வருங்காலத்தில் சோலார் எனர்ஜி இல்லாமல் தொழில் வளமில்லை" என்று ஆரம்பித்தார் சுதா ரமணி.
சோலார் மின் சக்தி என்றால் என்ன?
சூரியக் கதிர்களின் மூலம் வெப்பம் பெற்று உற்பத்தி செய்யப்படும் மின்சாரமே, சோலார் மின்சக்தி எனப்படுகிறது. சூரியக் கதிர்கள் சூரியப் பலகையில் படும்போது, அதில் உள்ள சிலிக்கான் என்னும் பொருள் எலக்ட்ரான்களைச் செயல்படத் தூண்டும். அச்சமயம், ஏற்படும் எலெக்ட்ரான்களின் ஓட்டத்தால் ஒருவித சக்தி உற்பத்தியாகும். அந்தச் சக்தியே மின்சக்தி. இப்படி உருவாகும் மின்சாரமானது, பேட்டரி, இன்வெர்ட்டர் மூலமாகச் சேமிக்கப்பட்டு மின் பயன்பாட்டுக்கு வயர்கள் மூலம் அனுப்பப்படும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல உபகரணங்களை சூரிய மின்சக்தி மூலம் இயக்கலாம். சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் தெருவிளக்குகள், சோலார் மொபைல் சார்ஜர், சோலார் மின்விசிறி, சோலார் குக்கர், ஏன் சோலார் விமானம் கூட வந்துவிட்டது.
நீங்க என்னென்ன சோலார் விளக்குகளைத் தயாரிக்கிறீங்க?

பத்து வாட்ஸ் உள்ள சோலார் பேனல் முதல், எட்டு வாட்ஸ் போர் டபிள் ஸ்லிம் லைட்வரை விதவிதமான லைட்டுகளைத் தயாரிக்கிறோம். உதாரணமாக, பத்து வாட்ஸ் உள்ள சோலார் பேனலைப் போட்டுவிட்டால், அது முழுமையாக சார்ஜ் ஆனதும் விளக்குகள் 10-12 மணி நேரம் ஃபுல் மோடிலும், அதை அடுத்து 24 மணி நேரம் டிம் மோடிலும் எரியும். ஆட்டோமேடிக் மோடில் போட்டுவிட்டால் சூரியன் மறைந்ததும் தானாகவே எரிய ஆரம்பிக்கும். சூரியன் உதித்ததும் ஸ்விச் ஆஃப் ஆகிவிடும். இதில் லெட் ஆசிட் பேட்டரிஉள்ளதால், ஓவர் சார்ஜ் ஆனாலும் ஓவர் டிஸ்சார்ஜ் ஆனாலும், பல வருடங்கள் நீடித்து வரும்.
தற்போது தமிழ்நாட்டில் பல இடங்களில் பதினைந்து மணி நேர மின்வெட்டு நிகழ்வதால் இன்வெர்ட்டர், பேட்டரி எல்லாம் பயனில்லாமல் போகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க, 200 W 300 W சோலார் பேனல்களை வீட்டுக் கூரையின் மீது பொருத்திவிட்டால், இன்வெர்ட்டர் பேட்டரியை சிறப்பாக சார்ஜ் செய்து பயன்படுத்தலாம். இதனால் கிரைண்டர், ஃபேன், டீ.வி, இன்டர்நெட் போன்றவற்றைக்கூட தடையின்றி உபயோகிக்க முடியும்.
10W, 6W போன்ற சி..பி லைட்டுகளை பாத்ரூம், பூஜை அறை, பால்கனி போன்ற இடங்களிலும், கடை, ஓட்டல் அறைகளிலும் திறம்படப் பயன்படுத்தலாம். இவை தவிர, 20W எல்ஈடி ட்யூப் லைட்களும் வீட்டு உபயோகத்துக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
சோலார் பல்புகள் மார்க்கெட்டிங்கில் நீங்கள் சந்திக்கும் சவால்கள்?
சாதாரண குண்டு பல்புகளின் விலையுடன், இந்த சோலார் பல்புகளை ஒப்பிட்டுப் பார்ப்பதால், முதலில் வாடிக்கையாளர்களுக்கு விஞ்ஞானப்பூர்வமாக பலவற்றையும் விளக்கிதான் விற்க வேண்டியுள்ளது.
இது ஒரு ஒன்-டைம் இன்வெஸ்ட் மெண்ட்! கரண்ட் பில் எகிறாது. சுற்றுச் சுழலுக்குப் பாதுகாப்பானது" என்றெல்லாம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். தற்போது தமிழக அரசாங்கமும் நிறைய விழிப்புணர்வு திட்டங்கள், கடனுதவி, மானியம் போன்ற வற்றை வழங்குகிறது. மக்கள் அவற்றைச் சிந்தித்துச் செயல்படுத்த வேண்டிய காலக் கட்டம் வந்துவிட்டது.
தமிழகப் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
சூரிய ஒளி மூலம் செயல்படும் ஏதேனும் ஒரு பொருளையாவது வாங்கிப் பயன்படுத்துவேன் என்று ஒவ்வொரு வரும் உறுதி எடுத்துக்கொண்டால் குறைந்த பட்சம் 800 மெகாவாட் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும்.

1 comments:

தமிழ் காமெடி உலகம் said...

நல்ல பயனுள்ள பதிவு.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/