Monday, January 07, 2013

சி.பி செந்தில்குமார் -ன் ஜோக்ஸ்

1. உங்க கட்சித்தொண்டர்கள் பச்சை கலர் டிரஸ் தான் போடனும்னு வாய் மொழி உத்தரவு இட்டீங்களாமே? 


 பச்சைப்பொய் ---------------------


2. அவன் சரியான சினிமாப்பைத்தியம்னு எப்படி சொல்றே? 


 கேட்கறவன் கேனயனா இருந்தா கரண்டை கண்டு பிடிச்சது காஜல் அகர்வால், கரண்ட் கட்டை கண்டு பிடிச்சது சோனியா அகர்வால்னு சொல்வே போல ங்கறாரே?-------------------------


3. மாப்ளை டெம்ப்பரவரி  ஜாப் என்பதால் பொண்ணு தர மாட்டேண்ட்டீங்களாமே? ஆமாய்யா, தமிழக மினிஸ்டர்னா நித்ய கண்டம் , பூரண ஆயுசு------------------------


4. இருட்டும் திருட்டும் பேர் போன இடம் எது? இண்ட்டர்வியூவுல இவ்ளவ் ஈசியாவா கேள்வி கேப்பாங்க? தமிழ்நாடு சார்-------------------


5. அமைச்சரே! மாதம் மும்மாரி பெய்கிறதா? 


 மன்னா! தினம் முப்பது முறை கரண்ட் போகிறது ----------------------------


6. நாட்டை விற்க அனுமதிக்க மாட்டேன்னு தலைவர் சொல்றாரே? 


 அடமானம் வைக்க ஐடியா போல -------------------------


7. சிறுககட்டி பெருக வாழ் ங்கறதை தலைவர் தப்பா நினைச்சுட்டார்  போல 


 எப்டி சொல்றே? 


சிறுசை கட்டி பெருசு நீ வாழ்!னு எழுதி வெச்சிருக்காரே? ----------------------


8. தலைவர் விஜய் ரசிகர்னு எப்படி சொல்றே? 


 மின் வெட்டு பிரச்சனை எப்போ தீரும்?னு மக்கள் கேட்டதுக்கு ஐ ஆம் வெயிட்டிங்க்னாரே? ---------------------


9. ஜட்ஜ் - கிரானைட் ஊழல்ல நீ ஈடுபடலை என்பதற்கு ஆதாரம் இருக்கா? 


 கைதி - யுவர் ஆனர் எனக்கு மாலைக்கண் வியாதி இருக்கு, நான் எப்படி கிரா “நைட்” ஊழல் புரிய முடியும்? ------------------


10. உட் கட்சிப்பிரச்சனையை சரி பண்ணனும்


 தலைவரே! முதல்ல உங்க குடும்பப்பிரச்சனையை சரி பண்ணுங்க , பெரிய அக்கப்போர் -------------------------------


11. அவரு சரியான டுபாக்கூர் பார்ட்டின்னு எப்படி சொல்றே? 


தமிழகத்தில்   விஸ்வரூபம் எடுத்திருக்கும் மின் வெட்டு பிரச்சனையை சமாளிக்க  காணாமப்போன கரண்டை தேடி கமல் போகும் ஃபாரீன் டூர் என்கொயரிதான் விஸ்வரூப படக்கதை----------------------


12.  உங்க படத்துக்கு மாட்றான்னு ஏன் டைட்டில் வெச்சிருக்கீங்க? 


 வில்லன் ஹீரோ கிட்டே மாட்றான். அதான் 


----------------------


13. ஐ பி எஸ் மாப்ளையே வேணாம்னு உங்க பொண்ணு சொல்லிடுச்சா? ஏன்? 


 யு பி எஸ் பிராடக்ட் பண்ற கம்ப்பெனி ஓனரைத்தான் மேரேஜ் பண்ணிக்குமாம்------------------------


14. தலைவரே!இப்போ எதுக்கு ஆலோசனைக்கூட்டம் போட்டிருக்கீங்க?

 இப்போ , இன்னைக்கு நிலவரத்துக்கு யாரெல்லாம் மினிஸ்டரா இருக்கோம்னு தெரிஞ்சுக்க 
-----------------------------


15. நாய் , பூனை வளர்க்காம உங்க வீட்ல பெட் அனிமல்ஸா எருமை, பசு வளர்க்கறீங்களே? 


 கட்சிக்கட்டுப்பாடுதான் அம்மாங்க்ற சத்தம் தான் வீட்டை நிறைக்கனுமாம்


-----------------------


16. டாடி, சிங்கத்துக்கு அருகம்புல் ஜூஸ் தரலாமா? 


 என்னடா உளர்றே? 


 பின்னே ? புரட்டாசி மாசம்னு சாக்கு சொல்லி வெறும் இட்லி மட்டும் சாப்பிடக்குடுத்தா எப்படி? ---------------------------


17. அதிரடியா ஆடறது  டோனியா? ஷேவாக்கா? 2 பேரும் இல்லை அமைச்சரை அடிக்கடி அதிரடியா மாற்றும் ஜெ தான் --------------------------------18. எப்படியாவது எனக்கு ஒரு வேலை வாங்கிக்குடுங்க , அது போதும்

 ஓஹோ அப்போ சம்பளம் வேணாமா? வேலை மட்டும் போதுமா? --------------------------------


1 comments:

பூந்தளிர் said...

எல்லா ஜோக்குக்கும் சிரிப்பு வரலேங்க.