Friday, January 04, 2013

TABLE NO 21 - சினிமா விமர்சனம்

http://media1.santabanta.com/full1/Bollywood%20Movies/Table%20No%2021/table-no-21-6a.jpg
பாரதிராஜா தன் மகன் மனோஜை ஹீரோவா போட்டு சரண் இயக்க ஒரு படம் எடுத்தாரே அல்லி அர்ஜூனா அந்தப்படத்தோட அடிப்படைக்கருவான ரேகிங்க் கொடுமைகள் ,  டி வி ல இப்போ  ஃபேமஸ் ஆகி வரும் ரியாலிட்டி ஷோ சீரழிவு சொல்வதெல்லாம் உண்மை பேக் டிராப்ல  சொன்னா அதுதான் டேபிள் நெம்பர் ஒன் ஹிந்திப்படத்தின் கதை

மேரேஜ் ஆகி 5 வது திருமண நாள் கொண்டாடும் புது மணத்தம்பதி  ஒரு ஹோட்டல்ல வித்தியாசமான போட்டில கலந்துக்கறாங்க . அது ஒரு ரியாலிட்டி ஷோ , லைவ் புரோகிராம். 8 கேள்வி கேட்பாங்க , அதுக்கு பதில் சொல்லனும். சரியா சொல்லிட்டா   21 கோடி ரூபா  பரிசு .

 முதல் கேள்வியே செம கில்மாவா இருக்கு. உங்க மனைவியை பப்ளிக் ப்ளேஸ்ல எல்லாரும் பார்க்க லிப் டூ லிப் கிஸ் அடிப்பீங்களா? அடிப்பேன்னு சொல்லி அடிச்சு ஒரு கோடி அடிக்கறார் ஹீரோ.

2 வது  கேள்வி உங்க கணவர் உங்களை முழுசா அறிஞ்சவரா? அதுக்கு அந்த உத்தம பத்தினி “ நோ” -னு சொல்றார். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்  யாரும் அறியாத ஒரு  கறுப்புப்பக்கம் இருக்குங்கற பொது விதிப்படி  . ஹீரோயினை ஒரு பிளேட்ல தேள், பல்லி, பூரான் மாதிரி ஊர்வன ஜந்துக்களை உயிரோட சாப்பிட சொல்றாங்க். புருஷன் சொல்றான். என் சம்சாரம் பற்ரி எனக்குத்தெரியாதா? அவ சுத்த  சைவம்கறான். ஆனா அவ  ஈட்டிங்க் . வின் 2 கோடி 


http://movies.infoonlinepages.com/gallery/var/albums/Events/T/Table-No.21/Stills-1/First%20Look%20Launch%20Of%20Table%20No%2021%20Movie%205.JPG?m=1353741295

3வது கேள்வி - உங்க மனைவிக்காக நீங்க எந்த தியாகமும் பண்ணத்தயாரா? எஸ். ஒரு கூண்டுல மனைவியை அடைச்சு டைம் குடுக்கறாங்க  அந்த டைம்க்குள்ளே ஹீரோ அரை பாட்டில் பிளட்டை அவர் உடம்புல இருந்து எடுத்து பாட்டில்ல சேர்த்தனும். டைமிங்க் மிஸ் ஆனா  ஆள் அவுட். பர பரப்பான இந்த கேம்ல ஹீரோ வின்


 இதுல தம்பதிகள் செம காண்ட் ஆகி விலகிடறோம்கறாங்க . அக்ரிமெண்ட்படி விலகமுடியாதுங்கறார் வில்லன். போய்யா நீயும் ஆச்சு , உன் போட்டியும் ஆச்சுன்னு 2 பேரும் அழகிரி மாதிரி கிளம்பறாங்க . அவங்க கைல  என்னமோ வாட்ச் மாதிரி 1 கட்டி இருக்காங்க ஆல்ரெடி . வில்லன் எல்லையை தாண்டுனா டேஞ்சர். சோ அவங்க  ரிட்டர்ன் ஆகி மறுபடி கேம் 4 வது ஸ்டெப்ல மனைவியை மொட்டை அடிக்கச்சொல்றான். வழக்கமா பொண்ணுங்கதான் பையனுக்கு மொட்டை அடிப்பாங்க , இதுல உல்டா  வின்


5 வது கேள்வி உங்க மனைவியை எப்பவாவது  கை நீட்டி அடிச்சிருக்கீங்களா? ஆமாங்கறார். இப்போ மனைவிகிட்டே நீங்க பளார்னு ஒரு அறை விடுங்க அப்டிங்கறார். விடா பாரு ஒரு அறை பளார்.. கதி கலங்கிடுச்சு 


 6 வது கேள்வி  பப்ளிக் ப்ளேஸ்ல ஃபைட் பண்ணி இருக்கீங்களா?  இல்லை. இப்போ பண்ணுங்கங்கறார்.  பபளிக் ப்ளேஸ்ல ஒரு காரை உடைச்சு போலீஸ் கிட்டே மாட்டி ஒரு ஃபைட் . வந்து பார்த்தா மனைவியை காணோம். ஸ்ட்ரப்டீஸ் எனப்படும் டான்ஸ்க்கு வலுக்கட்டாயமா அவளை கொண்டு போய் இருக்காங்க . போய் ஃபைட் போட்டு மீட்டாச்சு . வின் 


 7 வது கேள்வி  . உங்க கணவருக்கு நீங்க எப்பவாவது துரோகம் பண்ணி இருக்கீங்களா?   அவ பொய் சொல்ல வழி இல்லை . லை டிடெக்டிவ் மிஷின் காட்டிக்குடுத்துடும் . ஆமாங்கறா . அங்கேயே தம்பதிகளுக்குள் சண்டை . ஆனா போட்டில வின்


 8 வது கேள்வி . இதுவரை யாரையாவது கொலை பண்ணி இருக்கீங்களா? இல்லை.. இப்போ பண்ணுங்க  அப்டினு ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறாங்க .


 அவன் யாரு? எதுக்கு இந்த தம்பதியை இப்படி டார்ச்சர் பண்றான்? கொலை செய்யக்கூட்டிட்டுப்போனது வில்லனோட மகனையே. எதுக்காக ? இதெல்லாமே க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸ்..


ஹீரோவா ராஜீவ். பாவம் அவருக்கு லவ் சீன் எல்லாம் நல்லா ஒர்க் அவுட் ஆகுது . க்ரைம் , பயம் , ஃபைட் , ஆக்ரோஷம் எல்லாம் சரியா வர்லை 


 ஹீரோயின் Tena Desae, . வசீகரமான முகமோ , சொல்லிக்கொள்ளும்படியான தேகமோ இல்லை. 50 மார்க்  தேறும் . மொட்டை அடிக்கும்போது ஓரளவு நடிக்க ட்ரை பண்ணி இருக்கு பாப்பா . 


 வில்லன் நடிப்பு ரகுவரன் , பிரகாஷ்ராஜ் மாதிரி பிரமாதப்படுத்தலை . சொன்னதை செஞ்சுட்டு போய்ட்டார்.. 


http://www.apnatimepass.com/table-no-21-movie-poster-12.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்1.  படம் 108 நிமிடங்கள் ஓடுது .  நல்ல விறு விறுப்பு . க்ளைமாக்ஸை யூகிக்க முடியலை ,. குட் 


2. க்ரைம் த்ரில்லர்ல  சமூக அக்கறை , மெசேஜ் சொல்லாமல் சொல்வது நல்ல திரைக்கதை உத்தி 
3. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல ஹீரோயினுக்கு ஸ்விம்மிங்க் டூ பீஸ் டிரஸ்ல  ஒரு கர்ச்சீப்பும் , 2 ரிப்பனும் மட்டும் காஸ்ட்யூமா குடுத்து கேமராவால் அள்ளிக்கிட்டது http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/12/Tena-Desae-sizzles-in-Sari-at-a-photoshoot.jpg


 இயக்குநருக்கு சில கேள்விகள்
1. முன் பின் அறிமுகம் இல்லாத ஆள் கூப்பிடதும் தம்பதிகள் ஹெலிகாப்டர்ல தேவாங்கு மாதிரி கிளம்பறாங்க்ளே? எப்டி? 2.  புரோகிராம் லைவ்ல ஓடுது. உலகம் பூரா மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. கண்ணியமான உடை அணீயாமல் எல்லாரும் பார்த்துக்கோங்கன்னு கடையை விரிக்கறது மாதிரி மனைவி போட்டு வரும் டிரஸ்சை கணவன் அனுமதிப்பது எபப்டி? 3. மனைவிக்கு ஏதோ விலை மதிப்பில்லாத முத்து மாலையை பரிசு அளிக்கிறார். அது பார்த்தா  சென்னிமலை தேர்க்கடைல 10 ரூபாய்க்கு வாங்குன பாசி மாலை மாதிரி இருக்கு. அட்லீஸ்ட் ஒரு நெக்லஸ் மாதிரி கவரிங்க்லயாவது காட்டி இருக்கலாம் 4.  கேம் நடக்கும்போது பதில் சொன்ன அடுத்த நிமிஷமே 2 கோடி ரூபா அவங்க பேங்க் அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகுது .  அது எப்படி முடியும்?  சும்மா  எஸ் பி  அக்கவுண்ட்ல 50,000 ரூபா க்கு மேலே போட்டாலே பேன் கார்டு , லொட்டு  லொசுக்கு ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் இருக்கும்போது எந்த டீட்டெயிலும் கேட்காம ஆன் லைன்ல 2 கோடி ரூபா அக்கவுண்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியுமா?  ( பேங்க் மேனேஜர் கம் நண்பரிடம் கேட்டேன் முடியாதுங்கறார்) 5. ஹீரோ ரத்தத்தைப்பார்த்தாலே மயக்கம் வரும் ஆள் அப்டினு ஃபிளாஸ்பேக்ல வருது . ஆனா அவரே  தன் கைல ஊசி  குத்தி பாட்டில் நிறைய ரத்தம் எடுக்கறாரு. மெடிக்கல் லைன்ல இருப்பவங்க தவிர வேறு யாரும் அப்படி செல்ஃப் பிளட் டொனேட் பண்ண முடியாது . கிறு கிறுனு வருமே..  6. எல்லாரும் பார்க்கும் இந்த லைவ் புரோகிராம்ல கொலை பண்றது , துன்புறுத்துறது இதை எல்லாம் பார்த்து யாரும் கேள்வி கேட்கலையா? போலீஸ் எல்லாம் என்ன பண்ணுது? என்பதற்கு யூகமாக ஒரு பதில் க்லைமாக்ஸ்ல கிடைக்குது , ஆனா அதை முறைப்படி விளக்கவே இல்லை 


7.  ராக்கிங்க் பண்ணும் காட்சியில் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்க்குள்ள , அவங்களுக்கே உரிய குறும்புத்தனம் , ஜாலி எல்லாம் மிஸ்சிங்க் , எஒம்ப கொடூரம் மட்டுமே காட்டி இருக்காங்க. பரிதாபத்தை வரவழைக்க , ரொம்ப செய்ற்கை .


8. வில்லனோட டார்கெட் ஹீரோதான் . ஹீரோயினை மொட்ட்டை ஆக்குனது . அந்த விடுதில அவளை அலங்கோலப்படுத்துனது தேவை இல்லாதது . அதுதான் தேவைன்னா க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்ல ஹீரோவை வில்லனா காட்டுனதுக்குப்[பதிலா ஹீரோயினை வில்லியா காட்டி இருந்தா செமயா இருந்திருக்கும் http://mimg.sulekha.com/tena-desae/images/stills/tena-desae-04.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்

 1. டெயிலி ஃபிளைட்ல போனா அது உல்லாச வாழ்க்கை ஆகிடுமா? 2. இந்த முத்து மாலை வாங்க பணம் ஏது?  லாட்டரி விழுந்தது , ஜாக் பாட் அடிச்சேன் 


 பொய் 

 சேவிங்க்ஸ்ல இருந்துதான் எடுத்தேன்

 எனக்காக  சேவிங்க்ஸ்ல இருந்து ஏன் செலவு பண்ணி வேஸ்ட் பண்றீங்க பணத்தை? இருந்தாலும் ஐ லைக் இட் ( அதானே? ) 3. டிராயிங்க் சூப்பரா  இருக்கு 


 சும்மா அள்ளி விடாதீங்க , அது காலியா இருக்கு 

 கலைக்கண்ணோட பார்க்கனும் 4.  கேம்ல ஜெயிச்சா எவ்ளவ் ? 

 எவ்ளவ் வேணும் ? 


 ஒரு கோடி?


 21 கோடி தர்றேன் வாவ் 5. வெரிகுட் , ஃபர்ஸ்ட் கிஸ் மாதிரியே பிரமாதமா கொடுத்தே 6. இந்த உலகத்தை வழி நடத்திச்செல்வது எது தெரியுமா?  பயம் தான் . யார் யாரை  எப்படி மடக்குவாங்க அப்டிங்கற பயம் தான்


http://media.santabanta.com/newsite/cinemascope/bitimages/tena-desae.jpg
சி.பி கமென்ட் - க்ரைம் த்ரில்லர்கள் பார்க்கலாம். லேடீஸ் , மாணவ் மாணவிகள்  மன ரீதியான பாதிப்புக்கு ஆளாவர்கள் என்பதால் பார்க்க வேண்டாம்  ( இதுல என்ன பியூட்டின்னா இது ஒரு விழிப்புணர்வுப்படம் டூ காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்) . ஈரோடு அண்ணாவில் படம் பார்த்தேன் . மொத்தமே 7 பேர்தான் தியேட்டர்ல


 ரேட்டிங்க்  =    3 / 5ஆனந்த விக்டன் எதிர்பார்ப்பு மர்க் - 40 ( ஹிந்திப்படம் எனவே விமர்சனம், மார்க் போட மாட்டாங்க )


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கேhttp://arkwhisper.com/wp-content/uploads/2012/12/deepika_padulone_hot.jpg

0 comments: