Thursday, January 24, 2013

கோர்ட்டில் கமல் அவசர வழக்கு, இன்றே ரிசல்ட் தெரியும் - கமல் பேட்டி

http://www.teluguone.com/tmdbuserfiles/kamal-hassan-andrea-stills.jpgகமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படம் நாளை (25-ந்தேதி) வெளியாக இருந்தது. இப்படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் படத்தை ரிலீஸ் செய்ய இரண்டு வாரத்திற்கு அரசு தடை விதித்துள்ளது.
 
இந்த தடை உத்தரவை நீக்க கோரி கமல் சார்பில் இன்று சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக கருதி உடனே விசாரிக்க வேண்டும் என்று கமல் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ். ராமன் கேட்டுக் கொண்டார்.
 
இதனை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. இன்று பிற்பகல் நீதிபதி கே. வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.


கமல் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' ரூ.90 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. கதாநாயகிகளாக பூஜா குமார், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். '3 டி ஆரவ்' ஒலி தொழில் நுட்பம் இதில் புகுத்தப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.
 
கடந்த 11-ந்தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டார். 10-ந்தேதி டி.டி.எச்.களிலும் ஒளிபரப்பாக இருந்தது. டி.டி.எச்.சில் பார்க்க ஒரு இணைப்புக்கு ரூ.1000 கட்டணம் வசூலித்தனர்.
 
டி.டி.எச்.களில் வெளியிட தியேட்டர் அதிபர்கள் எதிர்த்ததால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை. பின்னர் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கமலுக்கும் பேச்சுவார்த்தை நடந்து.
 
அதில் ஜனவரி 25-ந்தேதி ரிலீஸ் செய்ய உடன்பாடு ஏற்பட்டது. 500 தியேட்டர்களில் படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டது.
 
இரு தினங்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு துவங்கியது. ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தன. இந்த நிலையில் 'விஸ்வரூபம்' படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
 
இதையடுத்து முஸ்லீம் இயக்கத்தினருக்கு படத்தை கடந்த 21-ந்தேதி கமல் திரையிட்டு காட்டினார். படத்தில் முஸ்லீம்கள் பற்றியும், அவர்களின் தொழுகை முறைபற்றியும் தவறாக சித்தரித்து இருப்பதாக இஸ்லாமிய தலைவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
 
விஸ்வரூபம் படத்தில் பின்லேடனுக்கு அடுத்து தலைவராக உள்ள அல்கொய்தா தீவிரவாதி முல்லா உமர் கோவை மற்றும் மதுரையில் தலைமறைவாக இருந்ததாக காட்சி இருப்பதையும் எதிர்த்தனர்.
 
'விஸ்வரூபம்' படத்தை திரையிடக்கூடாது என்று போலீஸ் கமிஷனரிடம் முஸ்லீம் அமைப்பினர் மனு அளித்தனர். படத்தை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர்.
 
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் அலுவலகம் எதிரில் இந்திய தேசிய லீக் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தி கமலின் கொடும்பாவியை எரிக்க முற்பட்டனர்.
 
இதையடுத்து சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் 'விஸ்வரூபம்' படத்தை திரையிட 2 வாரங்களுக்கு தடை விதித்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர். இதுபோல் மற்ற மாவட்டங்களிலும் படத்துக்கு 2 வாரம் போலீசார் தடை விதித்தனர்.
 
இதுபோல் ஊர்வலம் போராட்டங்கள் நடத்த தடை விதித்து தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
 
இது குறித்து சென்னை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது 'விஸ்வரூபம்' படத்தை திரையிட வேண்டாம் என்று தியேட்டர் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இப்படத்துக்கு எதிராக சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றார்.
 
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது போலீஸ் தடை உத்தரவு காரணமாக தமிழ்நாடு முழுவதும் 'விஸ்வரூபம்' படத்தை தியேட்டர்களில் இரண்டு வாரத்துக்கு திரையிடமாட்டோம் என்றார்.
 
கமல் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு இன்று 'விஸ்வரூபம்' படத்தை திரையிட்டு காட்டுகிறார். தமிழகத்தில் படத்துக்கு தடை விதிக்கப்பட்ட தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
இதையடுத்து அவர் அவசரமாக சென்னை திரும்புகிறார். மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் திட்டமிட்டபடி படத்தை நாளை திரையிடலாமா அல்லது நிறுத்தி விடலாமா என்பது குறித்து இன்று மாலை அறிவிக்கிறார்.
 
வேறு மாநிலங்களில் படத்தை திரையிட்டால் தமிழகத்துக்கு திருட்டு வி.சி.டி. வந்து விடும் என அஞ்சப்படுகிறது. எனவே படத்தை 2 வாரங்களுக்கு திரையிடாமல் கமலஹாசன் நிறுத்தி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி - மாலை மலர் 
 
 

Kamal Haasan Talks About Vishwaroopam Being Banned

 



a



disci - தடை விதித்த தமிழக அரசுக்கு கமல் பதிலடி , மக்கள் அதிரடிhttp://www.adrasaka.com/2013/01/blog-post_294.html

2 comments:

R. Jagannathan said...

நான் உயர்நிலைப் பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவனை திட்ட ஒரு வாக்கியம் சொல்வார் - 'உங்கப்பன் எந்த நேரத்தில கோமணத்தை அவுத்தானோ, நீ என் உயிரை வாங்கறே!' என்பார். அதுதான் ஞாபகம் வந்தது. இனி படத்தை ஆரம்பிக்கும் போது கமல் சரியாக எல்லா சாமிக்கும், அல்லாவுக்கும், ஜீசசுக்கும் பூஜை பண்ணுவார் என்று நம்புகிறேன்!

8h8dnwrs4t said...

கமல் ஒழுக்கமில்லாதவர். அவருக்கு பத்ம விருது பெற தகுதியில்லை. அவர் கோடி கோடியாக பணம் சம்பாதிக்க முஸ்லீம் சமுதாயத்தையே கேவலமாக சித்தரித்து படம் எடுப்பது அயோக்கியத்தனம்.

உங்களுக்கு தைரியம் இருந்தால் இந்து பாசிச வெறியர்களான மோடி, பால் தாக்கரே, அத்வானி, வாஜ்பாயீ போன்றவர்களை விமர்சனம் செய்து படம் எடு. குரங்கையும் கல்லையும் வணங்குவதால் மூளை இப்படி தான் மழுங்கி விட்டது.