Thursday, January 17, 2013

சி.பி செந்தில்குமார் -ன் கேவலமான ஜோக்ஸ் பாகம் 6

Photo
1. டாக்டர்! இந்த டானிக் எப்போ எல்லாம் சாப்பிடனும்?

 உங்க உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு. டைம் கிடைக்கும்போதெல்லாம் சாப்பிடனும், அதாவது கரண்ட் கட் ஆகும்போதெல்லாம் சாப்பிடனும்------------------


2.  அத்தான்! ஆஃபீஸ்ல என்னைப்பற்றி நினைப்பீங்களா? 

 உன்னை நினைச்சுடக்கூடாதுன்னு நினைப்பேன் --------------------------


3. உங்க கணவரை டைவர்ஸ் பண்ண மூல காரணம் என்ன? 


 அவருக்கு தீர்க்க முடியாத மூலம்.அதான் 


-------------------------------------


4. நம்ம  காதல் அத்தியாயம் முடிவுக்கு வந்துடுச்சு 


 அய்யய்யோ, இது என்ன புதுக்கதை?


-------------------


5. உங்க வீட்ல டெயிலி முடக்கத்தான் கீரை பொரியலா? ஏன்?


 அப்டியாவது என் மனைவி வாய்ல இருந்து அத்தான்கற வார்த்தை வரட்டும்னுதான்---------------------------
3 pathu ruba....pona varadhu pozhuthu pona kidaikathu.....

VANGO VANGO VANGO :P:P
Photo: 3 pathu ruba....pona varadhu pozhuthu pona kidaikathu.....

VANGO VANGO VANGO :P:P


6. டிக்கெட் எடுக்காமல் டி டி ஆரிடம் மாட்டிய தலைவர் - 3 தடவை தொடர்ச்சியா தேர்தல்ல தோத்தா டிக்கெட் கிடையாதுன்னு ராகுல் சொன்னாரே?---------------------------


7. எங்க ஆஃபீஸ்ல எல்லா பொண்ணுங்களும் துடிப்பா வேலை செய்வாங்க 

எங்க ஆஃபீஸ்ல எல்லா பொண்ணுங்களும் சதைப்பிடிப்பா வேலை செய்வாங்க----------------


8. நடிகைட்ட வேலைக்கு சேர்ந்த நீ அவங்களையே கிண்டல் பண்ணி ஓட்டிட்டு இருக்கியே? 


 அவங்களைப்பற்றி உனக்குத்தெரியாது, 10 வருஷமா கார் ஓட்டுனா அவங்க காரை கார் டிரைவருக்கே பரிசா குடுத்தவரு. அவங்களை ஓட்டுனா அவங்களையே பரிசாத்தர வாய்ப்பு இருக்கே? 


---------------------


9. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளில் முறைகேடு  நடந்திருக்குன்னு எப்படி தலைவரே சொல்றீங்க? அவங்க 10 சுரங்கம் டேக் ஓவர் பண்ணிக்கிட்டு எனக்கு 4 தான் குடுத்தாங்க------------------


10. மூணாவது அணி அமைக்க தலைவர் ஏன் முயற்சிக்கலை?


மூணுன்னா நாமம் தான்னு யாரோ பயமுறுத்திட்டாங்களாம்---------------------
Photo: Gud morng fre 
tel me


11. குடும்பப்படம்னீங்க, ஆக்‌ஷன் மூவி போல?


அதாவது படத்தோட டைரக்டர் அப்பா , பையன் ஹீரோ, ஹீரோயின் மருமக இப்படி---------------------


12. புதுசா வந்த சட்டப்படி என் சம்பளத்துல 20 % என் சம்சாரத்துகிட்டே குடுத்துடுவேன், மீதி 80 % ?மாமியார் பிடுங்கிக்குவாங்க :-0---------------------


13. நந்தி விருது ஏன் உங்களுக்கு கிடைக்கலை?


நந்தி மாதிரி இன்னொருத்தர் குறுக்கே வந்து வாய்ப்பை தட்டி பறிச்சுட்டார் 
----------------------


14. சாம்பார் , சட்னி இருந்தும் எதுக்கு இட்லிக்கு பொடி கேட்கறீங்க? 


பொடி வெச்சு பேசரதுல மட்டும் இல்லை பொடி வெச்சு சாப்பிடறதுலயும் மன்னன்ன்னு பேர் எடுக்க ------------------------


15. சென்னைல ஏன் மின் வெட்டு கம்மியா இருக்கு? 


 ஓஹோ,. இப்போஒ உங்க பிரச்சனை உங்க ஊர்ல ஏன் மின் வெட்டு அதிகமா இருக்கு அப்டிங்கறது இல்லை, சென்னைல ஏன் கம்மினு தான்?
-----------------Photo


16. காவேரி நதியின் சிறப்பு  என்ன?


 தன்னிஷ்டப்படி ஓடுனா அது சாதா நதி , சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி ஓடுனா அது காவேரி நதி ------------------------


17. டெங்கு காய்ச்சலால் பீதி வேணாம்னு தலைவர் சொல்றாரே? 


 ம் ம் அவருக்கு என்ன? அவனவனுக்கு பயத்துல பேதி போகுது
--------------------


18. தலைவர் நாத்திகவாதி என்பதால் எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதை ஒத்துக்க மாட்டேன்கறார்எழுத்தறிவை வித்தவன் தலைவன் அப்டினு சொல்லுங்க, ஒத்துக்குவார்
---------19. நாங்கள் ஆட்சிக்கு வந்தா மின் தடையே இருக்காது


 2ம் நடக்கற மாதிரி தெரியலையே? -----------------20. மினிமம் , மேக்சிமம் என்ன வித்தியாசம்?சென்னையில் மின் வெட்டு MIN வெட்டு மற்ற இடங்களில் MAX வெட்டு -----------------
Photo: Gud eve frds


21. சி எம் ஆனா தமிழக மக்களை சந்தோஷமா வெச்சிருக்க என்னால முடியும்னு தலைவர் எந்த தைரியத்துல சொல்றார்?  சி எம் ஆக மாட்டோம்கற தைரியத்துல தான் 


-----------------------


22.  மன்னா! ஈமுக்கோழிகள் கேட்பாரற்று ஏகப்பட்டது கிடக்கிறது, ஓசியில் கிடைக்கிறதுஈமுக்கோழிப்படை உருவாக்கினால் என்ன? 
--------------------------


23. நாட்டு நடப்பு தெரிஞ்சவர்னு எப்படி சொல்றே?


ஐ பி எஸ் படிச்சிருந்தாலும் ஆத்திரக்காரன்னா  புத்தி மட்டு. யு பி எஸ் இல்லைன்னா  வீட்ல எப்பவும் கரண்ட் கட் ---------------


டி வி ஷோ டைம் டேபிள்

> இன்று ஒரு தகவல். Today A Message.

பச்சைக்குறி காட்டப்பட்ட இந்த பெரியவரை நாம் போற்ற வேன்டும்,ஏனென்றால்,மதுரை அண்ணா பேருந்துநிலையம் அருகில் இவர் ஒரு சிறிய ஓட்டல் வைத்துள்ளார்,அவரிடம் சாப்பாடு வெரும் ரூபாய் 10 மட்டுமே(சாதம்,சாம்பார்,கூட்டு,ரசம்)இதில் அடங்கும்...

மேலும் இந்த வயதில் அவருடைய வீட்டில் இருந்து தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.சில மாதங்களுக்கு முன்புவரை இதே சாப்பாட்டை ரூபாய் 6க்கு விற்பனை செய்தார்,கடுமையான விலைவாசி ஏற்றத்தால் தற்பொழுது ரூபாய் 10க்கு விற்பனை செய்து வருகிறார்...

நான் நேரில் பார்த்தேன், பலதரப்பட்ட மக்கள் அவரிடம் பயனடைகிறார்கள்,அந்த பெரியவரிடம் கேட்டபோது;"லாபம் அதிகம் கிடைக்காது,இங்க வர்ரவுங்க நிறைய பேரு கஷ்டப்படுரவுங்கதான்,அவுங்களோட சேர்த்து என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது அவ்வளவுதான்" என்று கூறுகிறார்...

இந்த பெரியவரை பாராட்டுவோம்...!
Photo: Like here first -->> இன்று ஒரு தகவல். Today A Message.
பச்சைக்குறி காட்டப்பட்ட இந்த பெரியவரை நாம் போற்ற வேன்டும்,ஏனென்றால்,மதுரை அண்ணா பேருந்துநிலையம் அருகில் இவர் ஒரு சிறிய ஓட்டல் வைத்துள்ளார்,அவரிடம் சாப்பாடு வெரும் ரூபாய் 10 மட்டுமே(சாதம்,சாம்பார்,கூட்டு,ரசம்)இதில் அடங்கும்...

மேலும் இந்த வயதில் அவருடைய வீட்டில் இருந்து தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.சில மாதங்களுக்கு முன்புவரை இதே சாப்பாட்டை ரூபாய் 6க்கு விற்பனை செய்தார்,கடுமையான விலைவாசி ஏற்றத்தால் தற்பொழுது ரூபாய் 10க்கு விற்பனை செய்து வருகிறார்...

நான் நேரில் பார்த்தேன், பலதரப்பட்ட மக்கள் அவரிடம் பயனடைகிறார்கள்,அந்த பெரியவரிடம் கேட்டபோது;"லாபம் அதிகம் கிடைக்காது,இங்க வர்ரவுங்க நிறைய பேரு கஷ்டப்படுரவுங்கதான்,அவுங்களோட சேர்த்து என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது அவ்வளவுதான்" என்று கூறுகிறார்...

இந்த பெரியவரை பாராட்டி SHARE பண்ணுவோம்...!

3 comments:

Easy (EZ) Editorial Calendar said...

எப்படி உங்களால மட்டும் இப்படி யோசிக்க முடிகிறது......எங்களுக்கும் கொஞ்சம் சொல்லி தாங்க.....நாங்களும் உங்களை போல ஜீனியஸ் ஆகிடுவோம்.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

விஸ்வநாத் said...

18. அருமை உண்மை

'பரிவை' சே.குமார் said...

நகைச்சுவைகள் அருமை...

பெரியவர் பாராட்டுக்குறியவர்....


வாழ்த்துக்கள்.