Tuesday, January 01, 2013

கோழி கூவுது ( 2012) - சினிமா விமர்சனம்


http://2.bp.blogspot.com/-yDWi2EIF3hc/T8d7jNsUkPI/AAAAAAAAGjY/shAXkVxiFgQ/s1600/Sreeja+In+Kozhi+Koovuthu+Movie+Wallpapers+New+Latest+Images+(10).jpga

கோழியைக்கண்டாலே அருவெறுப்பாய்ப்பார்க்கும் ஒரு குடும்பத்தில் கோழிக்குஞ்சை கொஞ்சினாலே பிடிக்காத பெற்றோருக்கு மகளாகப்பிறந்த ஹீரோயின்  கோழிக்குஞ்சுகளை விற்று வியாபாரம் செய்யும் ஹீரோவை காதலிக்கிறாள். அவங்க காதல் ல வெற்றி பெற்றாங்களா? இல்லை கூவிக்குச்சா? இதான் கதை


நாமக்கல் மாவட்டத்தில் கோழிகளைப்பிரதானத்தொழிலாக வைத்திருக்கும்  மண் மனம் சார்ந்த பதிவு என்ற வகையில் இது  தனித்துவம் உள்ள படம் தான் ஆனாலும் முன் பாதி முழுக்க நமக்குப்புதிய தளத்தை , கோழிக்குஞ்சுகள் வியாபாரிகள் நுணுக்கமான வாழ்க்கைமுறைகளைப்பதிவு செய்த இயக்குநர் பின் பாதியில் வணிக நோக்கம் கருதி சுப்ரமணிய புரம்  உட்பட பல வெற்றிப்படங்களின் கலவையான திரைக்கதையில் பயணித்த படியால் முழு வெற்றி பெற முடியவில்லை


ஹீரோவாக அசோக். காதலியின் முன் ,  ஊர் மக்களிடம் அடி வாங்கும் காட்சியில் கூனிக்குறுகும்போதும் , காதலுக்கு அவர் ஓக்கே சொன்னதும்  ஆடுகளம் தனுஷ் மாதிரி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும்போதும் சபாஷ் போட வைக்கிறார்.


http://tamil.cinesnacks.net/photos/movies/Kozhi-Koovuthu/kozhi-koovuthu-images-070.jpgஹீரோயின் புது முகம் ஸ்ரீ ஜா ரோஸ் . பேருக்கு தக்கபடி அவர் ரோஸ் கலர் இல்லை என்றாலும் மாநிற மரிக்கொழுந்து மாதிரி மின்னுகிறார். நல்ல உருண்டையான முகம். ஒப்பனை அதிகம் இல்லாமலேயே நம் உள்ளம் கவர் கள்வி ஆகிறார். ஆனால் கிராமத்து இளைஞர்களுக்கு  மட்டுமே பிடிக்கும் முக லட்சணம் மற்றும் உடல்வாகு .


 படத்தில் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி பாராட்டு பெறுபவர்கள் மூவர்

 ஹீரோயினின் சித்தப்பாவாக வரும் போஸ் வெங்கட் , நடிப்பு பட்டாசு . படம் முழுக்க வில்லன் வேலை , க்ளைமாக்ஸில் குணச்சித்திர நடிப்பு


ஹீரோவின் அம்மாவாக  அமரர் ரகுவரன் மனைவி ரோகினி . பண் பட்ட நடிப்பு சரன்யாவுக்கு டஃப்  ஃபைட் கொடுப்பார் என நம்பலாம் .


ஹீரோயினின் அப்பாவாக வருபவர் வருங்கால விஜயகுமார்


 மயில் சாமியும் அவ்வப்போது மொக்கை போடுகிறார்
http://www.cinespot.net/gallery/d/982539-1/Kozhi+Koovuthu+Movie+Stills+_86_.jpg இயக்குநர் பாராட்டு  பெறும் இடங்கள்1. நிதானமாக கதை சொல்லும் பாங்கு , நாமக்கல் மாவட்ட கலாச்சாரம்  பதிவு செய்தது , எந்த இயக்குநரிடமும் அசிஸ்டெண்டாக ஒர்க் பண்ணாமல் நேரடியாக இயக்குநர் ஆகி இருக்கும் தமிழ் சினிமாவின்  5 வது இயக்குநர் ( 1. மணிரத்னம்  2 ஆரண்யகாண்டம்  இயக்குநர்  3 காதலில் சொதப்புவது எப்படி? இயக்குநர் 4  பீட்சா இயக்குநர்)2. ஹீரோயினுக்கு தெப்பக்குளத்தில் ஒரு குளியல் சீன் வைத்தது  (  ரொம்ப சுத்த பத்தமானவர்னு காட்டனுமாம் )


3. ஹீரோவுக்கு பஞ்ச் டயலாக் , ஃபைட் எதுவும் வைக்காதது
http://www.tamilnow.com/movies/misc/kozhi-koovuthu-movie-shooting-spot/kozhi-koovuthu-movie-shooting-spot-stills-2376.jpg
இயக்குநரிடம் சில கேள்விகள்


1. சுடிதார் , மிடி , ஜீன்ஸ் பேண்ட் ரெடிமேடா எடுத்துட்டு வந்தாதான் வீட்டுக்கு வந்ததும் அதை போட்டுப்பார்ப்பாங்க , ஆனா படத்துல ஒரு சீன்ல ஹீரோயினுக்கு  புடவை வாங்கிட்டு வந்து அதை போட்டுப்பார்த்து சரியா இருக்கா? சொல்லுன்னு ஒரு சீன் வருது . புடவைல கூட XL , XXL  அப்டினு சைஸ் வந்துட்டுதா? என்ன? 


2.  ஊர்ல  1008 ரவுடிங்க இருக்கும்போது  போஸ் வெங்கட் தனது நீண்ட நாள் பகையாளீயை எப்படி நம்பி ஹீரோவை கொலை செய்யும் பணிக்கு நியமிக்கிறார்?3. ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவராக வரும் ஹீரோயினின் அப்பா ஜோசியர் சொன்னாரேன்னு தன் மகளை ஒதுக்கி வைப்பது நம்பும்படி இல்லை , பல காட்சிகளில் அவர் மகள் மீது பாசம் உள்ளவராகத்தான் வர்றார். 


4. ஹீரோயின் ஒருத்தனை லவ் பண்ற விஷயம் வீட்டில் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு ஆனா அப்பாவுக்கு மட்டும் தெரியல , அது எப்படி? அவர் என்ன ஃபாரீன்லயா இருக்கார்? அதே வீட்டில் தானே? 


5. போஸ் வெங்கட் தனது கொலை முடிவில் இருந்து மனம் மாறியதும்  அடியாளை தேடி கிள்ம்பறார் , 2  ரீல் தேடி முடித்த பின் அவருக்கு ஃபோன் பண்ண ட்ரை பண்றார் , அதை ஏன் முதல்லியே செய்யலை?


http://tamil.cinesnacks.net/photos/movies/Kozhi-Koovuthu/kozhi-koovuthu-images-065.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்

1. கடன் கொடுத்த எந்த நபரும் உருப்பட்டதா சரித்திரம் இல்லை


2. நாட்டான் கோழின்னா நாட்டுக்கோழின்னு அர்த்தம்


3. சாமி! ஒரு வேளை சாப்பாட்டுக்காக அப்பப்ப ஏதாவது சின்ன சின்ன தப்பு பண்ணுவோம், கண்டுக்காத4. நான் சொன்னது பலிக்கலை  என் பேரு ராமராஜன் இல்லை

 டேய், உன் பேரு குமரேஷன் தானே?

 அதான் நானும் சொன்னேன், என் பேரு ராமராஜன் இல்லைன்னு , கம்முன்னு இரு5. கோழிக்குஞ்சு என்ன சாப்பிடும்?

 கொத்து புரோட்டாவும், சில்லி சிக்கனும்6 ஈமுக்கோழி தான் இப்போ ஃபேஷன்.. உன் சம்சாரம் பேரு கோமதி ,  கோமு  கோழிப்பண்ணைன்னு ஆரம்பி7கோழிக்குஞ்சுக்கு எதுக்கு பிரியாணி அரிசு போடச்சொல்றே?


 கோழிகுஞ்சு பெரிசாகி எப்படியும் அதை பிரியாணி ஆக்கப்போறோம், அதுக்க் இப்ப இருந்தே ட்ரெயினிங்க்8 இந்தக்கோழி உசிரோட இருக்குங்களா?


 உசுருக்கு கேரண்டி தர நாங்க என்ன கடவுளா?


9.  உன்னை வந்து வெச்சுக்கறேன்யா//


 என்னை ஆல்ரெடி 2 பேரு வெச்சிருக்கானுங்க ,பொடி போ


10. பசின்னு ஒண்ணு உருவாக்கப்படாம இருந்திருந்தா  யாரும் யாரையும் ஏமாத்தவே மாட்டாங்க.11.  வெட்கத்தையும் அவமானத்தையும் பார்த்தா   ர்ங்க வீட்ல எல்லாரும் பட்டினியைத்தான் பார்க்க வேண்டி இருக்கும்12. அன்றாடங்காய்ச்சிகளுக்கு அட்வைஸ் ஏறாது


13. சோறு போடும் நிலத்தை கூறு போடக்கூடாது 


 http://www.tamilnow.com/movies/gallery/kozhi-koovuthu/kozhi-koovuthu-3611.jpg14.  பார்த்து பார்த்துக்காலை வெச்சா நாத்து நடற பாத்தில கூட காலை வைக்க முடியாது


15. லவ் பண்றவன் என்னைக்கு  பேசி இருக்கான்? கூட இருக்கற ஃபிரண்ட்ஸ் தான்  பேசுவாங்க.16. கோபம்கறது தீ மாதிரி , பத்த வெச்சவனையும் சேர்த்து அழிக்கும்

17.  ஏப்பா, 3 பேருக்கும் டீ தாப்பா

 3 பேருக்கும் பால் தான்


 டீ யா?  பாலா?


 போகப்போக நீயே தெரிஞ்சுக்குவே


18. கொடுத்த பணத்தை திருப்பி வாங்கறதுக்குக்கூட கை நீட்ட மாட்டான் இந்த அய்யனார்


19. அம்மா கிட்டே சொல்ல முடியாத அளவுக்கு அசிங்கத்தை பண்ணிட்டு வந்து நிக்கறியா?


20. கோழி விக்கறவன் கூடை பின்ற பொண்ணாப்பார்த்து ஆசைப்பட வேண்டியதுதானே?


21. பிடிக்காததைச்செய்யத்தான் யோசிக்கனும், பிடிச்சதைச்செய்ய ஏன் யோசிக்கனும்?


22. பக்கத்துப்பட்டி ஆடு பாதை மாறிப்போனா என்ன? வாய்க்கால்ல போனா என்ன?ன்னு அசால்ட்டா விட்டூட்டீகளோ?


23. நாங்க 2 நாள்ல சாகற கோழிக்குஞ்சுகளையே ஒரு வாரம் உயிர் வாழ வைக்கற ஆளுங்க , கூடவே இருக்கும் நண்பனை போட்டுத்தள்ளுவோம்னு எப்படி நினைச்சீங்க?  எதிர்பார்க்கும் விகடன் மார்க் - 40 


 எதிர்பார்க்கும் குமுதம் ரேட்டிங்க் -  சுமார் 


 ரேட்டிங்க்  6 / 10 http://www.cinepicks.com/tamil/gallery/kozhi-koovuthu/kozhi-koovuthu-photos-8766.jpg சி.பி கமெண்ட் - முதல் பாதி மண் மணம் பின் பாதி  திரைக்கதையில் இயக்குநரிட்ம் குழப்ப மனம்.காதலர்கள் மட்டும் பார்க்கலாம். ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணா தியேட்டரில் 7 பேருடன் இந்த ஏழரையை பார்த்தேன் . 1 comments:

பூந்தளிர் said...

விமரிசனம் நல்லா இருக்கு. இனிய ஆங்கில புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்.