Monday, January 07, 2013

டார்லிங்க் டார்லிங்க் டார்லிங்க் ( 1982 ) - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD6NEIOEyfBsfaRDXaES8BWLJC-nubp2y5lqvMT__rmq8wySLzb5Qlf4yS34sr5uiVK07Tm_Y5HYDn8yUsJnhmjStLlcXoW0sY4yciOaiEwHha1BXVtwZtphtoBuB8wHtnY_XMslawpGDw/s1600/darling+darling.jpgஸ்கூல்லபடிக்கும்போதேஅதாவதுஅஞ்சாங்கிளாஸ்படிக்கும்போதேஹீரோவுக்கு ஹீரோயின் மேல பப்பி லவ்  . மேல் படிப்பு படிக்க அந்த ஃபீமேல் ஃபாரீன்க்கு போயிடுது . இவர் இலவு காத்த கிளி போல  வெயிட்டிங்க் . 10 வருஷம் கழிச்சு திரும்பி வருது . ஆனா இவரைக்கண்டுக்கவே இல்லை . 

ஹீரோ ஹீரோயின் அப்பாவுக்கு ஜஸ்ட் ஒரு வாட்ச்மேன் பையன் தான் , ஸ்டேட்டஸ் பிராப்ளம் . ஹீரோயின் கிட்டே ஓபனா கேட்டும் அவர் ஒத்துக்கலை . பெற்றோர் பார்த்த மாப்ளை ஊருக்கு வர்றார். 


 படிப்படியா ஹீரோயின் எப்படி வில்லன் கிட்டே இருந்து தப்பி ஹீரோ பக்கம் சாய்கிறார் என்பதே கதை .இந்தக்காலத்துல இளைஞர்கள் தனக்கு கிடைக்காத பொண்ணு வேற யாருக்கும் கிடைக்கக்கூடாதுன்னு ஒரு உயர்ந்த எண்ணத்தோட தனக்கு நோ சொல்லும் பெண்ணின் முகத்தில்  ஆசிட் ஊத்திடறாங்க , ஆனா தனக்கு அவ இல்லைனு தெரிஞ்சும் ஹீரோ எப்படி எல்லாம் அவரை தாங்கு தாங்குன்னு தாங்கறார் என்பதைப்பார்க்கும்போது.........


ஹீரோவாக கே பாக்யராஜ். இவர் நடிப்பு பல இடங்களில் கலகலக்க வைக்கிறது , சில இடங்களீல் கண் கலங்க வைக்கிறது . தன்னை தாழ்த்திக்கொண்டு அனுதாப வாக்கு வாங்குவதில் தமிழ் சினிமாவில்  கே பாக்யராஜ் , வடிவேல் இருவரையும் அடிச்சுக்க ஆள் கிடையாது 


 ஹீரோயினாக பூர்ணிமா  , மிகவும் அமைதியான நடிப்பு . அண்டர் ப்ளே ஆக்டிங்க் ஹீரோவுக்கு அப்பாவாக வரும் கல்லாப்பட்டி சிங்காரத்தின் நடிப்பு செம காமெடி 


வில்லனாக சுமன் . சுமார் நடிப்பு .

http://i.ytimg.com/vi/6phMEF5WZ6I/0.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 1.பப்பி லவ் பீரியட்ல ஸ்கூல் ஸ்டூடன்ஸ் எல்லாரும் மார்ச் பாஸ்ட் போட்டு நடக்கும்போது இவங்க 2 பேர் மட்டும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி புன் சிரித்தபடி நடப்பதும் , அதைக்கண்டு மற்றவர்கள் வியப்பதும் என ஓப்பனிங்க்கிலேயே டச்சிங்க் சீன்2. நாய் செத்துப்போனதும் ஒரு பேச்சுக்கு அந்தப்பொண்ணு “ டெயிலி நாயின் சமாதிக்கு வந்து பூ வைக்கனும்” என சொல்ல அதை வேத வாக்காக்கொண்டு ஹீரோ 10 வருஷமா அந்த வேலையை செய்யறார். அப்போ அங்கே வரும் டூரிஸ்ட்கள் யாரோ முக்கிய நபர் இறந்ததாக நினைத்து கண்ணீர் விட அனைவரையும் அணைத்து ஆறுதல் சொல்லும் சீன் . கலக்கல் ( அதுல 4 பேர் லேடீஸ் . கதை வ்சனம் டைரக்‌ஷன் கே பாக்யராஜ் -னு இந்த சீனில் போடுவது டச்3. ஸ்டேஷன் மாஸ்டராக லிவிங்க்ஸ்டன் ,  வாட்ச்மேனாக ஆர் பாண்டியராஜனை இந்தப்படத்தில் நடிக்க வைத்தது4.  ஹீரோயின் ஹீரோ ஆசையாய்த்தரும் சோளக்கருதை குரங்குக்குதருவது அப்போது ஹீரோ முகம் இஞ்சி தின்ன குரங்காய் மாறுவது5. முதன் முதலாக வளர்ந்த பின் ஹீரோயினை பார்க்கும் முதல் பார்வையில் அவர் ஹிரோவிடம் லக்கேஜை எடுத்துக்க என்பதும் அதை ரிப்பீட்டாக காட்டி ஹீரோவின் சோகத்தை வலிமை ஆக்குவதும்


6. ஹீரோயின் , ஹீரோ இருவரும் பால்ய பருவத்தில்  ஜோடியாக எடுத்த ஃபோட்டோக்களை   ஆசையாக ஹீரோ காட்ட அதில் ஹீரோவை மட்டும் தனியா கட் பண்ணி ஆல்பம் ஆக்கும் காட்சி7. திரைக்கதை தடுமாறும்போது சரியாக வில்லன் சுமனின் எண்ட்ரி


8. வில்லனும் , ஹீரோயினும் ஹோட்டல்ல சாப்பிடப்போறாங்க , அப்போ ஹீரோயின் 20 ரூபா கொடுத்து  வெச்சுக்கோங்கறார், அடுத்த ஷாட்ல  பெட்டிக்கடை பக்கம் வண்டி நிக்குது , வில்லன் சிகரெட் வாங்க  சேஞ்ச் இல்லை, ஹீரோயினை கேட்டா அவர் கிட்டேயும் இல்லை , ஹீரோயின் ஹீரோ கிட்டே தனிமையில் “ உன் கிட்டே தந்த 20 ரூபா குடுத்தா மறுபடியும் தரமாடேனா?  என கேட்க  அப்போ ஹீரோ “ அதை ஒரு ஏழைப்பொண்ணுக்கு தானம் பண்ணிட்டேன் , சாப்பிட கேட்டாங்க “ எனும் செண்ட்டிமெண்ட் சீன் 9.  ஹீரோ விலனுக்கு ஷூ பாலீஸ் போட்டு விடும் காட்சி , வில்லன் வாமிட் எடுக்கும்போது க்ளீன் பண்ணும் காட்சி


http://tamil.way2movies.com/wp-content/uploads/2010/04/Bhagyaraj-And-Family-In-Treasure-Collection-13.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோயின் அப்போதான் ஃபாரீன்ல இருந்து வர்றாங்க . தோழிகளுடன் கார்ல போகும்போது “ போன வாரம் ப்ரூஸ்லீ படம் பார்த்தேன் , ஃபாரீன்ல இருந்த சீன் ஒரு ஃபைட் இங்கே இல்லை , இந்தியாவில் கட் பண்ணிட்டாங்க “ என்கிறார் . ( போன வாரம் என்பதை நேத்து நைட் என மாற்றி இருக்கலாம் )


2. ஹீரோயின் ஹீரோ பால்ய கால ஃபோட்டோக்கள் ஒரு பொக்கிஷம் , அப்போ 2 பேருக்கும் 10 வயசு கூட இருக்காது , அந்த ஃபோட்டோக்களை எதுக்கு ஹீரோயின் தன்னை மட்டும் செப்பரேட் பண்ணி கட் பண்ணனும்? காலேஜ் ஃபோட்டோவா இருந்தா ஓக்கே3. ஹீரோ தனது ஃபோட்டோக்களை எல்லாம் தன் ரூமில் தான் வைத்திருக்கிறார். ஒரு முக்கிய ட்விஸ்ட் காட்சியில் வில்லன் சுமன் ஹீரோயினிடம் “  எனக்கு இந்த ஃபோட்டோக்கள் அவன் கார்ல கிடைச்சது “ என்கிறார்4. வில்லனோட அப்பா  ஹீரோயின் கிட்டே பேசும் வசனங்கள்  எல்லாம் டிராமா மாதிரி இருக்கு


5. ஒரு பெரிய பணக்காரர் , ஜமீன் பரம்பரை பல தொழில் செய்பவர் ஹீரோயினின் அப்பா. ஏதோ ஒரு சீட்டுக்கம்பெனியில் அவர் மேனேஜர் பண்ணிய துரோகத்தால் டகார்னு நடுத்தெருவுக்கு வருவது ஓவர் .


6. பொதுவா ஒருத்தருக்கு லவ் வந்தா அந்த செகண்ட்ல அத வெளிபப்டுத்தனும் , ஹீரோயின் ஆ-ன்னா ஊ-ன்னா ஹீரோ கிட்டே காரை எடு , உன் கிட்டே கொஞ்சம் பேசனும் என கூட்டிப்போய்  லவ்வை சொல்வது , கண்டிபப்து எல்லாம் டிராமா மாதிரி இருக்கு


7. கராத்தே மாஸ்டர்  , ஹீரோயின் அண்ட் கோ  ரகளை ம், ஹீரோ ஃபைட் அக்மார்க்  நாடகம்


 8. படத்துல முக்கியமான திருப்பம் வரக்காரணமான ஒரு சீன் - ஹீரோயின் ஹோட்டல் ரூம்ல டிரஸ் மாத்துறா , அவரை மெரேஜ் பண்ணிக்கப்போற மாப்ளை சாவித்துவார,ம் வழியா ஒளிஞ்சிருந்து பார்க்கறார், ஹீரோயின் கோபமா கிள்ம்பிடறார்


 1. எந்த ஒரு ஆணும் இப்படி செய்ய மாட்டான். கிணத்துத்தண்ணியை ஆத்து வெள்ள்மா அடிச்சுட்டுப்போகும்?

2. அந்த கில்மா சிச்சுவேஷனைப்பயன்படுத்தி கில்மாக்கு ட்ரை பண்றதா காட்டி இருந்தாக்கூட ஏத்துக்கற மாதிரி இருக்கும்


3. அப்படி யோக்கிய சிகாமணியா இருக்கும் ஹீரோயின் ரூமில் லைட்ஸ் ஆஃப் பண்ணி டிரஸ் ட்சேஞ்ச் பண்ணிக்கலாமே?9. வில்லன் ஹீரோயின் கேரக்டர்ல சந்தேகப்பட்டு “ நிச்சயம் ஆகியாச்சு ,  இனி மேரேஜை நிறுத்துனா என் ஸ்டேட்டஸ் பாதிக்கும் “ அப்டினு சொன்ன பிறகு ஹீரோயின் மனசு மாறுவது போல காட்டி இருக்கக்கூடாது . வேற வழி இல்லாம ஆனா அந்த மடம் ஆகாட்டி சந்தை மடம்கற மாதிரி இருக்கு


http://i.ytimg.com/vi/eaN_GJZo6ck/0.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1. சின்ன வயசுலயே எனக்கு குதிரை ஏறனும்னு ஆசை , ஒரு வாய்ப்புக்குடுத்தா .. ஹி ஹி


2. ஏரோபிளைன் தரைல இருக்கும்போது விபத்து நடந்தா தப்பில்லை . 1000 அடி பறக்கும்போது விபத்து நடந்தாலும் ஆள் சில காயங்களோட பிழைச்சுக்கலாம், ஆனா 50,000 அடி உயரத்துல பரக்கும்போது விபத்து நடந்தா ? இப்போ நீ அப்டித்தான் பண்ணிட்டு இருக்கே.


3. எடுத்து வெச்சு முங்குனா என்ன? எறங்கி முங்குனா என்ன? குளியல் ஒண்ணுதானே?


4. சீட்டாட்டம் உனக்கு வர்லை, நீ எல்லாம் எங்கே கரை ஏறப்போறே? அதுல எல்லாம் ஒரு நெளிவு சுளிவு இருக்குடா

5.  சிரிச்ச முகம் , இளிச்சவாய முகம் 2க்கும் வித்தியாசம் என்ன தெரியுமா?


 10 வயசுல லவ் பண்ணே ஓக்கே , அது சிரிச்ச முகம் , ஆனா 10 வருஷமா நான் சொன்னேன்னு ஒரு நாய்க்குட்டிக்கு மலர் வளையம் வெச்சே பாரு அது  இளிச்சவாய முகம்


6. மொதலாளி , பாப்பா கூட எத்தனை பொண்ணுங்க வர்றாங்க? ஹி ஹி


 யோவ்!

 டிஃபன் ரெடி பண்ணக்கேட்டேன்7. ஹாய் , ஐ ஆம் ராஜா

 ஓ , ஐ ஃபர்கெட், ஓக்கே  லக்கேஜை எடுத்துக்குங்க8. ஒரு நாய்க்குட்டிக்கு 10 வருஷமா மலர் வளையம் வெச்சது உங்களுக்காகத்தாங்க

 ஓஹோ , ஓக்கே  இனிமே அந்த மாதிரி முட்டாள் தனம் செய்யாதீங்க9. கடன் வாங்குனா சம்பாதிச்சு கட்டுற யோக்கியதை இருக்கனும், அல்லது  பணக்கார இடத்துல சம்பந்தம் வெச்சுக்கும் யோக்கியதை வேணும்


10. இத்தனை நாளா உங்களை வெறும் லூசுன்னுதான் நினைச்சுட்டு இருந்தேன், இப்போதான் தெரியுது  விஷயம் தெரிஞ்ச லூஸ்னு


11.  என்னதான் அற்பனுக்கு வாழ்வு வந்து அர்த்தராத்திரில குடை பிடிச்சாலும்  காய்கறிக்காரன், பால்காரனுக்கெல்லாம் பாக்கியை டெயிலி செக் குடுத்து க்ளியர் பண்றது ஓவர்.12. நேத்துத்தான் எனக்கு ஒரு பையன் பிறந்தான், எனக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்குன்னு புருஞ்சுக்கிட்டேன்

 ஓஹோ , பக்கத்து பங்களா ஓனர்க்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்காம், அங்கே வாட்ச்மேனா ஜாயின் பண்ணி விட்டுடறேன்13. என் மேல நீங்க வெச்சிருந்த லவ்  , சின்சியாரிட்டி  எல்லாத்தையும் என்னால புரிஞ்சுக்க முடியுது , ஆனா உங்க முட்டாள்த்தனத்தைத்தான் என்னால புரிஞ்சுக்க முடியலை14.  வேற வழியே இல்லீங்களா? கொஞ்சம் முயற்சி பண்ணிப்பாருங்க , 10 வருஷ லவ் இது15 . காதல்ங்கறது தாஜ்மகால் மாதிரி , ஒத்துக்கறேன் ஆனா நீங்க ஷாஜகான் இல்லையே? சாதாரண கொத்தனார் , ஜஸ்ட் ரசிக்க மட்டுமே செய்யலாம்16.


16.  அடப்பாவி, அப்போ என் பணம்?

 திருப்பதி உண்டியல்ல போட்டுக்கிட்டதா நினைச்சுக்குங்க17. என்னைப்பத்தி உங்களுக்குத்தெரியாது , நான் தண்ணி அடிச்சா  கண்டபடி உளறுவேன்

 அதான் எனக்கும் வேணும்18. டேக் திஸ் ரிங்க்


 வேணாம்

 இது கோல்டும்மா

 தெரியும், இருக்கறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்படக்கூடாதுன்னு  நினைக்கறேன், எங்கண்ணன் மாதிரி நானும் ஆகிடக்கூடாதில்லை>?19டாக்டர், வாங்க. இவங்களுக்கு யூக்லிப்டஸ் தைலம் போட்டேன், நீங்க வந்து ஒரு ஊசி போட்டுட்டா எல்லாம் சரி ஆகிடும்.


 ஏன்? அதையும் நீயே போடறதுதானே?

20கல்யாணம் பண்ணிக்கப்போற என்னை நம்பாம அவனை நம்பி நைட் டைம்ல வெளில  போய் இருக்கே?


சி பி கமெண்ட் -  காதலர்கள் , பப்பி  லவ்வர்கள் , காமெடிப்ப்ரியர்கள் பார்க்க வேண்டிய ப்டம் 
http://i.ytimg.com/vi/GYK4YAZXDYI/0.jpg

4 comments:

மகேந்திரன் said...

அன்று பார்த்து ரசித்த படம்...
பொதுவாக இயக்குனர் பாக்கியராஜ்
படங்கள் என்றால் பார்ப்பதற்கு போரடிக்காமல்
செல்லும்...
அழகான விமர்சனம்...
கொட்டுகளும் .... பாராட்டுகளும் மிக அருமை...

RAMA RAVI (RAMVI) said...

பாக்யராஜ் படத்தில மனம் கவர்ந்த வசனங்கள் நிறைய இருக்கும்.அது போலவே இந்த படத்திலேயும் இருக்கு.

விமர்சனம் நன்றாக இருக்கு.

இவ்வளவு வருஷம் கழித்து இப்ப எழுதியிருக்கீங்க??

பூந்தளிர் said...

இது பழைய படம்தானேங்க. விமரிசனம் நல்லா இருக்கு.

Sivakasikaran said...

எனக்கு மிகவும் பிடித்த படம்.. விமர்சனமும் மிகவும் பிடித்த மாதிரி இருக்கிறது.. க்ளைமேக்ஸில் ஓவர் டுவிஸ்ட்.. அது ஒரு மாதிரி இருக்கும்.. மற்றபடி பாக்கி பாக்கி தான் :-)