திரிஷ்யம் மெகா ஹிட் ஆனாலும் ஆனது ஆளாளுக்கு அதே டைப் கதைகளை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.இந்த திரிஷ்யம் மேனியா இயக்குநர் பாண்டிராஜையும்.விட்டு வைக்கவில்லை.தன் பங்குக்கு ஒரு உப்புமா கிண்டி இருக்கிறார்.
பசங்க (2009),வம்சம்(2010),மெரீனா(
ஸ்பாய்லர் அலெர்ட்
மிடில் கிளாஸ் குடும்பத்தைச்சேர்ந்த நாயகன் தன் மனைவி ,இரு மகள்களுடன் சிக்கனமான வாழ்வு வாழ்ந்து வருகிறான்.
வில்லன் ஒரு ரவுடி.அந்த ஏரியாவில் போதைப்பொருள் விற்பவன்.நாயகனின் மகளிடம் லவ் பிரப்போஸ் செய்கிறான்.அவள் மறுக்கவே விலகிப்போகாமல் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறான்.
பொறுத்துப்பொறுத்துப்பார்த்த நாயகன் இவனைக்கொன்று போட்டால் தான் அடங்கிப்போவான் போல என தன் குடும்பத்தாரிடம் கூற அடுத்த நாள் காலை மர்மமான முறையில் கொலையுண்டு கிடக்கிறான் வில்லன்.
இந்தக்கொலைக்கேசை விசாரிக்க் ஒரு போலீஸ் ஆபீசர் களம் இறங்குகிறார்.இதற்குப்பின் நிகழும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை.
நாயகன் ஆக ஜெயராம்,நாயகி ஆக ஊர்வசி நடித்திருக்கிறார்கள்.பஞ்ச தந்திரம் படத்துக்குப்பின் நீண்ட இடைவெளிக்குப்பின் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.ஜெயராம் அடக்கி வாசிக்கும் நடிப்பு.ஊர்வசி சில இடங்களில் பிரமாதமான நடிப்பு,பல இடங்களில் ஓவர் ஆக்டிங்க். ஆனாலும் ரசிக்க வைக்கிறார்.
மகள்களாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி,ஆனந்திகா இருவரும் கலகலப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.இருவரும் அக்கா,தங்கையாக இருந்தும் எப்போது பார்த்தாலும் அடித்துக்கொள்வது ரசிக்கும்படி இருக்கிறது.
போலீஸ் ஆபீசர் ஆக மிஷ்கின் காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.செண்ட்டிமெண்ட் சீனில் மிளிர்கிறார்.
வில்லன் ஆக சாண்டி மாஸ்டர்.இவர் டான்ஸ் மாஸ்டர் என்பதற்காக ஒரு பாட்டு ,டான்ஸ் கொடுத்திருப்பது அநியாயம்.
காமெடியன் என்ற பெயரில் யோகிபாபு மொக்கை போடுகிறார்.சரி,நமக்குப்பழகி விட்டது.
சிங்கம்புலியை,பகவதி பெருமாளை ,சென்றாயனை வீணடித்து இருக்கிறார்கள்.
பாக்சின் இசையில் 5 பாடல்கள் ஓக்கே ரகம்.பின்னணி இசையும் பரவாயில்லை.
ஜார்ஜ் சி வில்லியம்சின் ஒளிப்பதிவு கச்சிதம்.பிரதீப் ஈ ராகவின் எடிட்டிங் கில் படம் 138 நிமிடங்கள் ஓடுகிறது.பின் பாதி இழுவை.
கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் பாண்டிராஜ்
சபாஷ் டைரக்டர்
1. முதல் 30 நிமிடங்களில் நாயகனின் குடும்பத்தில் நடக்கும் காமெடிகள் யதார்த்தம்
2 இழவு வீட்டு சீக்வென்ஸ் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
3 மிஷ்கினின் என்கொயரி ரசிக்க வைக்கும்படி சில இடங்களில் இருக்கிறது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பின் பாதி திரைக்கதை பலவீனம்.வில்லனின் நண்பன் ,காதலி,அக்கா,அம்மா,பெரியம்மா,
2 நாயகனின் குடும்பம் போலீசில் மாட்டிக்கொள்ளுமோ என்ற பதைபதைப்பே நமக்கு ஏற்படவில்லை.அது திரைக்கதையின் பலவீனம்
3 ஒரு மகள் வில்லனுடன் பழகுவது ,இன்னொரு மகள் இன்னொரு பொறுக்கியுடன் பழகுவது எரிச்சல் வர வைக்கிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - டி வி ல போட்டாப்பார்க்கலாம்.தியேட்டரு
| Parimala and Co | |
|---|---|
![]() Theatrical release poster | |
| Directed by | Pandiraaj |
| Written by | Pandiraaj |
| Produced by | |
| Starring |
|
| Cinematography | George C. Williams |
| Edited by | Pradeep E. Ragav |
| Music by | FoxN |
Production companies | |
Release date |
|
Running time | 138 minutes[1] |
| Country | India |
| Language | Tamil |
| Box office | ₹6.70 crore[2] |
