Wednesday, August 31, 2016

கமல் நீட்டி முழக்கி சொல்வதை ரஜினி ஒரே சொல்லில் சொல்வாரா? எப்டி?

சார்.லிமிட்டட் மீல்ஸ் பார்சல் எப்டி கட்டுவீங்க?

சாதத்துக்கு ஒரு அளவு வெச்சிருக்கோம்.
ஓஹோ.அப்போ அன் லிமிட்டெட் மீல்ஸ்? அதுக்கு அளவே இல்லையே?==============

2 இன்னைக்கு 40 பேரை இன்ட்டர்வ்யூ பண்ணி செலக்ட் பண்ணனும்.5 மணி நேரம் தான் டைம்.முடியுமா?குலுக்கல் முறை ல 5 நிமிசத்துல செலக்ட் பண்ணலாமே?


================

3 டாக்டர் , கால் ல ஆணி. என்ன செய்ய?

 கவலைப்படாதீங்க. அக்குபஞ்சர் சிகிச்சைல அக்கு வேறா ஆணி வேறா எடுத்திடலாம்


====================

4  சார்.சாதா பெட்ரோல் ,ஸ்பீடு பெட்ரோல் என்ன வித்தியாசம்?ஸ்பீடு பெட்ரோல்னா வேகவேகமா பில்லப் செய்வோம்

===========

5 சார்.நீங்க எழுதறது மொக்கை னு உங்களுக்குத்தெரியுமா?தெரியாதா?தெரியுமே?நான் என்ன உலக இலக்கியம் படைக்கவா இங்கே வந்திருக்கேன்?


=============

6 டாக்டர்.கோதுமை அல்வா சாப்ட்டா நல்லதா?கெட்டதா?கோதுமை நல்லது.அஸ்கா சர்க்கரை கெட்டது.+ * - = -=================

7 சார்.உங்க கடைல வாங்கின திகில் நாவல்ல கடைசிப்பக்கம் இல்லையே?அதை எழுதும்போது யாரோ ரைட்டரைக்கொலை பண்ணிட்டாக========

8 சர்வர் = சார்.மசாலா தோசை ,ஆனியன் தோசை,ரவா தோசை எது வேணும்?ராதா இல்லாத படம் சாதா = சாதா தோசை 1 எடக்கு மடக்கா கொண்டு வாப்பா


=============9 தலைவரே! மதுவிலக்கு எப்போ முழுமையா அமல்படுத்தப்படும்?


அது “மில்லி”யன் டாலர் கொஸ்டீன்


================


10  இன்னைக்கு டாக்டர்கள் தினமாம், உன் ஃபிரண்ட்ஸ்க்கு வாழ்த்து சொல்லிட்டியா?’’


முதல் கட்டமா 4 நர்ஸ்ங்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்கேன்===============

11 சார், நீங்க உங்க மூளைக்கு வேலையே தர்றதில்லையாமே?

 ஆமாங்க, எனக்கு யாருமே வேலை தராதப்போ நான் மட்டும் ஏன் என் மூளைக்கு வேலை தரனும்?


==================

12   சார், ஃபிளைட்ல சினிமா போஸ்ட்ர் ஒட்டுனதால அரெஸ்ட் பண்ணீட்டாங்களா?

 ஆமா, ஆர்வக்கோளாறுல இன்றே கடைசி போஸ்டர் ஒட்டிட்டேன், பயணிகள் எல்லாம் பயந்துட்டாங்க


===================

13    சார், தயவு செஞ்சு உங்க சொந்த சம்சாரம் பக்கத்தில் இருக்கும்போது என் ஜொக்சை படிக்காதீங்க

 ஏன்?

 இடுக்கண் அருகே இருக்குங்கால் எப்டி சிரிப்பு வரும்?


===================


14  இன்ஸ்பெக்டர், கொலையாளியோட உண்மையான முகம் இது இல்லையாமே?

 இன்னும் அவன் சிக்கலை, அவனோட உண்மையான முகம் இப்பவே எப்டி தெரியும்?


=====================

15   சார், நீங்க ஏன் படித்ததில் பிடித்தது போடறதே இல்லை

 அட்லீஸ்ட் +2 வரை படிச்சிருந்தாலாவது போடலாம், கை நாட்டு எப்டி போட முடியும்?


==================

என்  சம்சாரம் என்னை கதை எழுத விட மாட்டேங்கறா

சும்மா கதை விடாதே, சண்டே அவங்க அம்மா வீட்டுல கொண்டுபோய் விட்டுட்டு வந்துடு
16 

=================================


17 கொலையாளியோட தெளிவான முகத்தை எப்போ பிரசுரிப்பீங்க?


அவனோட மப்பு தெளிஞ்சதும்====================


18 கொலையாளியை நெருங்கிட்டோம்னு சொன்னீங்க, ஏன் கைது பண்ணலை?

 நாங்க நெருங்குனோம், ஆனா அவன் ஓடிட்டான்


==================


19  கமல் நீட்டி முழக்கி சொல்வதை ரஜினி ஒரே சொல்லில் சொல்வாரா? எப்டி?

 யாரென்று தெரிகிறதா?இவன் தீ என்று புரிகிறதா? =  நெருப்புடா


================


20  நாத்திகவாதியான உங்க பையன் திடீர்னு கோயிலுக்குப்போறானே , ஏன்?

அவன் ரஜினி ரசிகன், அதான் “கபாலீ”ஸ்வரர் கோவிலுக்குப்போறான்


====================

0 comments: