Saturday, August 27, 2016

சித்தராமய்யா முத்த கிருஷ்ணய்யா

 வெளிநாட்டு பயணம் செய்யும் அமைச்சர்கள், . சாதாரண கோட், சூட் அணிந்து ஓட்டல் சர்வர் போல தோன்றக் கூடாது.- சு.சாமி # ஏன்? சர்வர் எரர்   காட்டுதா?


===================

 வெளிநாட்டு பயணம் செய்யும் அமைச்சர்கள், . சாதாரண கோட், சூட் அணிந்து ஓட்டல் சர்வர் போல தோன்றக் கூடாது.- சு.சாமி #  மக்களின் சர்வர் ( சேவகர்)னு காட்டிக்கக்கூடாதா?

==================


சமாஜ்வாடி கட்சிக்கு குற்றப்பின்னனி உடையோர் தேவையில்லை: அகிலேஷ் # குற்றத்தில் முன்னணியில் உள்ளோர்      ஓக்கேவா?

=================


4  சுப்பிரமணியன் சாமிக்கு வாய்ப்பூட்டு போட ஆலோசனை # திண்டுக்கல் கூட்டிட்டு வந்துடுங்க


======================================

6  ரயில் நிலையத்தில் கொலை நடக்கும்.என எதிர்பார்க்கவில்லை - கமிஷனர் # கொலை பண்ண எதுனா மண்டபம் கட்டி வெச்சிருக்கீங்களா?EXPECT THE UNEXPECTED


============7 மாயமான மதனை கண்டுபிடிக்க போலீசுக்கு உயர்நீதிமன்றம் 2 வாரம் அவகாசம் # முடியலைன்னா? மேலும் 2 வாரம் அவகாசம் தரப்படும்==========8 காங்கிரஸ் வாக்குகளால்தான் திமுகவுக்கு வெற்றி: ப.சிதம்பரம் கருத்து #,அளந்தது கை அளவு ,அளக்கப்போவது கடல் அளவு.சும்மா அடிச்சு விடுங்க============9 தொகுதிக்கு சென்று மக்களை சந்தியுங்கள்: திமுக எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் உத்தரவு #,தலைவர் வழி ல அவங்கவங்க மனைவி மக்களை சந்திக்கப்போறாங்க==============10 தமிழக காங். மீண்டும் உடைகிறது.... இளங்கோவனுக்கு ஆதரவாக 38 மாவட்ட தலைவர்கள் ராஜினாமா?# கை ல கடைசில சுண்டு விரல் கூட மிஞ்சாது போல


=============

11 சன் டிவியில் திங்கள் இரவு முதல் நாகினி... இச்சாதாரி நாக கதை # சார். வீட்ல குடும்பத்தோட இருக்கோம், கில்மாப்படம் எல்லாம் போடாதீங்க

=============

12    இளங்கோவனின் ராஜினாமாவை ஏற்றார் சோனியா... # ராஜினாமா பண்ணச்சொன்னதே சோனியாவாத்தான் இருக்கும், எத்தனை சினிமா பார்த்திருக்கோம்

==================

13

கணக்கில் காட்டாத வருவாயை வெளியிட கடைசி வாய்ப்பு: மோடி  #இந்த  இன்றே கடைசி போஸ்டரை ஒரு நாள் ஒட்டுனாத்தான் மதிப்பு சும்மா சும்மா ஒட்டிட்டே இருக்கக்கூடாது ஜி======================


14 நாட்டில் இந்துத்துவா பயங்கரவாதம் அதிகரித்து விட்டதாக காரணம் காட்டி, 2012ல், எமர்ஜென்ஸியை பிரகடனப்படுத்த சோனியா முடிவு
செய்திருந்தார்.-சு சாமி: # அதை அப்பவே சொல்லி இருக்கலாமே? கோமால இருந்தீங்களா?


=====================

15 தமிழக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்க வாய்ப்பில்லை.-திருமா # அப்பாடா, இப்பவே தோல்விக்கான காரணத்தைத்தேடி கண்டுபிடிச்சாச்சு

=====================

16 : ஜெ 'தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது' எனக் கூறி உள்ளார். கடந்த சில தினங்களாக, தமிழகத்தில், ஆறு கொலைகள் நடந்துள்ளன- கனிமொழி #  கொலையானவர் குடும்பத்துக்கு  “ஆறு”தல் சொன்னா போதுமா?

=====================


===============
18 பெங்களூரில் நடந்த பொது நிகழ்ச்சி யில், தாலுகா பஞ்சாயத்து உறுப்பினர் கிரிஜா, முதல்வர் சித்தராமையாவை முத்தமிட்டதால், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் #  இனி சித்தராமய்யா முத்த கிருஷ்ணய்யா என அன்போடு அழைக்கப்படுவார்

========================

19 பஞ்சாப் மாநில காங்., மேலிட பொறுப்பாளரான, ஆஷா குமாரி ,வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்#குற்றப்பின்னணி அள்ளோர் முன்னணியில்

=======================
20 போலீஸ் அதிரடியால் வெளிமாநிலங்களுக்கு ரவுடிகள் ஓட்டம்! ஒரே நாளில் நடத்திய வேட்டையில் 1,150 பேர் சிக்கின # நெத்தில ரவுடின்னு பச்சை குத்தி விட்டுட்டா ஜனங்களுக்குப்பாதுகாப்பு

============================

0 comments: