Monday, August 29, 2016

தலைவரே! ஒரு நடிகர் குடும்பத்துக்கு சம்பந்தி ஆகறீங்களாமே?

டாக்டர். விக்கல் வரும்நேரம் மூக்கை அழுத்தி பிடிச்சா விக்கல் நின்னுடுமா?


யோவ்.மூச்சே நின்னுடும்.தண்ணியைக்குடி தண்ணியைக்குடி


================

2 ஜட்ஜ் -2 நாள் தான் டைம்.அதுக்குள்ளே கொலையாளியை பிடிக்கனும்


எஸ் சார்.எவனையாச்சும் பிடிச்சு கொலை செஞ்சதை ஒத்துக்க வைக்கறோம்


=========
3 புகாரை வாங்க 2000 ரூபா லஞ்சம் வாங்குனீங்களா?


எஸ் சார்.
குற்றவாளியைப்பிடிச்சீங்களா?
யா.அவன் 3000 ரூபா தந்தான்.விட்டுட்டோம்


=============

4 அந்தப்பொண்ணு கிட்டே ஏதோ சைகை காட்றியே ,என்னது?


டீச்சர்.எக்சாம் ஹால்ல பேசக்கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க?இது தான் சிக்னல் பிட்=============

5 மிஸ் உங்க கிட்டே கொஞ்சம் பர்சனலா பேசனும்


எதுக்கு?
பர்சனல் லோன் வேணும்னு கேட்டீங்களே?


==========

6 சாரி மிஸ்.எங்க கடைல சுடி க்கு போடும் துப்பட்டா இல்லை.

கடை பேர்லயே துப்பட்டா வெச்சுட்டு ஸ்டாக் இல்லைன்னா எப்டி?
புரில
ஷாப்பிங் மால் ல ஷால்


==============

7 மாஸ் ஹீரோன்னு பேர் வாங்க நினைச்சேன்.முடியல.


அப்புறம்?
டப்மாஸ் ஹீரோவா ஆக ட்ரை===================

8 டாக்டர்.பீட்ரூட் அல்வா டெய்லி சாப்ட்டா என் உதடு ரெட் ஆகிடுமா?


சாரி மிஸ்.சிவப்பாகாது.உவப்பாகும்.===============

9 மிஸ் மெலீனா!நீங்க அஜித் ரசிகையா?


யா .எப்டி தெரியும்?
உங்க பேரை இங்க்லீஷ்ல எழுதி வலமிருந்து இடமா படிங்க ( ME"LINA")============

10 கே பாக்ய ராஜ் படத்தை ஜி வி பிரகாஷ் ரீமேக்கினா என்ன டைட்டில் வைப்பாரு?


எனக்கு இன்னொரு சின்ன வீடு இருக்கு!


============

11 சார்.ஷூட்டிங் ல வேடிக்கை பார்க்க அனுமதி வேணும்.


சரி.ஆனா ஒரு கண்டிஷன்.எதையும் FB ல அப்டேட்டக்கூடாது.===============

12

 ஜட்ஜ் = சாட்சியைப்பற்றிய தகவல் உனக்கு எப்படி கிடைச்சது?

 கைதி = போலீசுங்க தான் லூசு மாதிரி  டெய்லி அப்டேட்டறாங்களே?


====================

13  எனக்கு பாம்புக்கடி , கொசுக்கடி இதெல்லாம் அடிக்கடி நிகழும், என்னை ஒண்ணும் செய்யாது

 மிஸ்! இந்த மாதிரி நீங்க கடிக்கறதை எங்களால தாங்க முடியலை


===================14 டியர்,என் வாழ்க்கையை புரட்டி
பார்த்தால்,அனைத்து பக்கத்திலும்,
உன் சுவடுகள் மட்டுமே


உங்க அப்பா என்னைப்புரட்டிப்போட்ட வடு மட்டுமே என்னிடத்தில்


===================


15  சார், நீங்க அவுட்டோர் ஷூட்டிங்னா வர மாட்டேங்கறீங்களே? ஏன்?

நான் ஃபீல்டு அவுட் ஆகிட்டேன்னு புரளி கிளப்பிடுவாங்கன்னுதான்


======================

16 சார் , உங்க ஜோக்ஸ் படிச்சா சிரிப்பே வர மாட்டேங்குதே , இப்போ நான் என்ன செய்ய?

எப்போ சிரிப்பு வருதோ அப்போ எடுத்து ஜோக்கை படிங்க, மேக் இட் சிம்ப்பிள்


===================


17 இன்ஸ்பெக்டர், குற்றவாளியை நெருங்கிட்டோம்னு மெசேஜ் அனுப்ச்சீ ங்களே? பிடிச்சாச்சா?
நோ சார், அந்த SMS டைப் பண்றப்ப கேப் ல ஓடிட்டான்

===================

18 பசிக்குதுமா சொன்னா தோசை சுட்டு சாப்பிடு சொல்லுது அம்மா
அப்புறம்? சுட்டீங்களா?
யா, பக் வீட் ஆண்ட்டி சுட்ட தோசையை சுட்டுட்டு வந்துட்டேன்


=================


19 மிஸ்,உங்க ஃபோட்டோவை டிபியா ஏன் வைக்கலை?

என் முகம் யாருக்கும் தெரியக்கூடாது

ஓஹோ, அப்போ டப்மாஸ் வீடியோ விட்டீங்களே? அது?

===============

20 தலைவரே!  ஒரு நடிகர் குடும்பத்துக்கு சம்பந்தி ஆகறீங்களாமே?

 ஆமா, அவரும் நல்ல நடிகர்,, நானும் நல்ல நடிகர், 2 பேரும் உற்வாவதில் என்ன தப்பு?


======================

0 comments: