Thursday, August 04, 2016

டியர்.அன்பு வெச்சிருக்கேன் னு அடிக்கடி சொல்வீங்க்ளே? ஆனா என் கிட்டே காட்னதே இல்ல?

ஒரு ரைட்டரா எனக்கு இந்தப்படம் பிடிக்கலை


அண்ணே, கடைசியா நீங்க சிலாகிச்ச படங்கள் 2 சொல்லுங்க
THE NEIGHBOUR''S WIFE ,INDECENT BEHAVIOUR


===============

2 மிஸ்! உங்களுக்கு 3 ஆள் இருக்காமே?

ஆமா, டெய்லி சாப்ட்டியா?ன்னு கேட்க ஒருத்தன்,குளிச்ட்டியா?ன்னு கேட்க ஒருத்தன்,, தூங்கிட்டியா?ன்னு கேட்க ஒருத்தன்
-- 


=============

ஒரு ஸ்டோரி டிஸ்கஷன் முடிச்ட்டு இப்போதான் ரிலாக்ஸா உக்காந்தேன்

ஓஹோ, என்ன ஸ்டோரி?

அதான் சொன்னேனே, டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம்னு, இனி தான் எழுதனும்


==============

4 30 வயசான பின்பும் எங்க அப்பா என்னை மர மண்டைன்னு திட்டறார்

அடடா. 20 வயசுல?
செடி மண்டைனு திட்டினாரு

=============

5 டியர், நம்ம 2 பேருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாதுன்னு எப்டி சொல்றே?

+2 படிக்கும்போதே நான் கெமிஸ்ட்ரில 25 மார்க்தான்

===============

6 குருவே! இறை புகழ் பாடினா முக்தி அடைய முடியுமா?

சிஷ்யா! பேசாம நீ இறைவி படத்தை திட்டு. செம ஃபேமஸ் ஆகிடுவே.

=============

7 மிஸ்! டிபி செமயா இருக்கே? எதுல எடுத்தது?

ஃபோன்ல தான்
ஓ, செல்ஃபியா?
இல்ல, என் ஃபோன் கேலரில இருந்து எடுத்தது

=============

8 டியர், என் நெம்பருக்கு ரீ சார்ஜ் பண்றேன்னீங்க, பண்ணலை?

நீ மட்டும் நான் எது கேட்டாலும் மற்றவை கனவில்!னு எஸ் ஆகிடு


==============

9 டியர், பெட்ரூம்க்கு வர ஏன் தயங்கறே?

மழைக்குக்கூட பள்ளியறைப்பக்கம் ஒதுங்குனதில்ல


==============

10 டியர்.எதுக்காக டிக்சனரி பரிசா தர்றீங்க?

நீ அகராதி பிடிச்சவ னு உங்க அப்பா சொன்னாரு================

11 டியர்.ஒரே நாள் ல ஆளே மாறீட்டீங்க.

கிறுக்குப்பய புள்ள.லைட் போட்டுப்பாரு.நான் மாப்ளைத்தோழன்.இடமாறுஜெயிச்ச பிழை


===============

12 சார்.பில்லா படத்தை ரீ மேக் பண்ணப்போறேன்.

அதான் ஏற்க்னவே ரீமேக்கியாச்சே.எதுக்கு ரீரீமேக்?


=================

13 டாக்டர்.என் புருசனுக்குப்பொறுமையே இல்லை.எப்டி கத்துத்தர?

அவசரப்படாதீங்க.பொறுமையாதான் கத்துத்தரனும்


=================

14 என் சம்சாரத்தோட சமையல் மாடர்ன் ஆர்ட் மாதிரி.

எப்டி?
சாம்பாரா?ரசமா?ன்னு பார்த்ததும் சொல்லிட முடியாது


==================

15 சுவாமி.கடல் நீர் மேல.நடந்து காட்றேன்னு சவால் விட்டீங்களாமே?

ஆமா.ஆனா கடல் மேல் இல்ல.கடற்கரை ஓரமா


==================

16 டியர்.அன்பு வெச்சிருக்கேன் னு அடிக்கடி சொல்வீங்க்ளே? ஆனா என் கிட்டே காட்னதே இல்ல?

உங்க வீட்டு மாடிலதான் அன்பு குடி இருக்கா?


===================

17 நுங்கு கொஞ்ச நேரம் fridge ல வச்சு எடுத்தா நல்லா easyஆ உரிக்க வருது.

ஆனா பிரிட்ஜ் ல வெச்ச எல்லாமே உடல் நலனுக்கு கேடுதான்==============

18 செல்லம் கொடுத்து குழந்தைகளைக்கெடுத்துடக்கூடாது.

அதை விட முக்கியம் செல் லைக்கொடுத்து கெடுத்திடக்கூடாது


==================

19 டாக்டர்.டெய்லி இளநீர் குடித்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்னீங்க.நடக்கலை.

பிறக்கும்னுதானே சொன்னேன்.நடக்கும்னா சொன்னேன்.்
2,வருசம் தவழும்

================

20 டாக்டர்.மருதாணி வெச்சா விரல் தான். சிவக்குது.உதடு.சிவக்க மாட்டேங்குதே.

அதுக்குத்தான் வெத்தலை (வெற்றிலை)இருக்கில்ல?


=================

0 comments: