Monday, August 22, 2016

அஞ்சா நெஞ்சர் அழகிரியைக்கேட்டா உண்மை சொல்லிடுவாரு

அமைச்சருடன் மோதல்.. கேரள விளையாட்டு கவுன்சில் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் அஞ்சு ஜார்ஜ் # பாலகுமாரன் சொல்படி 5 நிமிஷம் முடிவை தள்ளிப்போட்டிருக்கலாம்

==============

2 ரூ.5.66 லட்சம் கோடி வருமானம் தரும் மெகா ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் # கலைஞர் மைண்ட் வாய்ஸ், அய்யோ சொக்கா போச்சே

==============

3 வன்னியர் கட்சி இமேஜை உடைக்க பாமக மாஸ்டர் பிளான்! உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஆயத்தம் # வன்னியரே வெளியேறுன்னு கட்சியை காலி பண்ணிடுவாரோ?
==============

4 உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி - தேமுதிகவின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி - விஜய்காந்த் # வை கோ GO GO பாலிசியா?

==================
5


அரவிந்த் சுப்ரமணியம் குறித்த சு.சுவாமி கூறியது அவரது சொந்த கருத்து: அருண்ஜேட்லி # இப்படிக்கூறியது அருண் ஜெட்லியோட சொந்தக்கருத்து?
=================


6 மக்கள் நலக் கூட்டணியுடனான உறவை முறித்தது தேமுதிக # ம நகூ கை ந போ ? ( கை நழுவிப்போனது?)

==============

7 சென்னையில் தொடரும் கொலைச் சம்பவங்கள் !

பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை.# அமைதிப்பூங்கான்னு ஒரு பூங்காவனம் சொல்லுச்சே?===============

8 எஸ்.ஆர்.எம். குழுமத்தின் மோசடிகள் குறித்து தி.மு.க. வாய்திறக்க அஞ்சுகிறது - ராமதாஸ் # அஞ்சா நெஞ்சர் அழகிரியைக்கேட்டா உண்மை சொல்லிடுவாரு

===============

9 ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால்

புகார் அளிக்க வேண்டிய எண்கள்:

044- 24749001
044- 26744445 # 2 நெம்பருமே நாட் ரீச்சபிள்/எங்கேஜ்டுன்னா எங்கே புகார் தரனும்?


===========

10 தேமுதிக, தமாகா தனித்தே போட்டியிட்டாலும் உள்ளாட்சித் தேர்தலில் ம.ந.கூ தொடரும்: திருமாவளவன்# இவர் அறிக்கைக்கு தனி கோனார் நோட்ஸ்தான் போடனும்

------------------

11 அனைத்து ஊராட்சிகளிலும், தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். -திருவாடானை தொகுதிMLA கருணாஸ்:# தண்ணீர் கிடைக்குதோ இல்லையோ “தண்ணி” தட்டுப்பாடு இல்லாம கிடைக்குது


======================


12 கச்சத்தீவு விவகாரத்தில், என்னை பற்றி வசை புராணம் பாடுவதை, ஜெ நிறுத்திக் கொள்ள வேண்டும்.- கருணாநிதி: #கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது மத்தியில் காங் ஆட்சியில் அப்டினு அடிச்சு விட்ருங்க


=====================


13  தி.மு.க.,வின் எதிர்ப்பை மீறி காங்கிரஸ், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தான் உண்மை-
.திருமாவளவன் # ரைட்டு, திருமா  கூட்டணி குருமாக்கு அச்சாரம் போட்டுட்டாரு

=====================


14  மாம்பழத்தையும் காணவில்லை; தென்னந்தோப்பையும் காணவில்லை.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வெற்றிவேல் #தோப்பு எனும் சொல்லுக்கு தோற்பு என்றும் ஒரு பொருள் உண்டுன்னு சமாளிப்பாரோ?

======================

15  காஷ்மீர், இந்திய பகுதி என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது-காஷ்மீர் மாநில லாங்கேட் தொகுதி, சுயேச்சை எம்.எல்.ஏ., ஷேக் அப்துார் ரஷீத் # ஷாக் அடிக்க வைக்கும் பேச்சு


===================

16  விவசாயிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பில்லாமல், மின் கோபுரங்கள் அமைக்க வேண்டும்.-இ.கம்யூ., கட்சி மாநிலச் செயலர் முத்தரசன்#ஊருக்கு இளைச்சவன் ஏழை விவசாயி


==================

17  ஜெ மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது, ஒரு அரசியல் விபத்து-முன்னாள் அமைச்சர் பொன்முடி # கலைஞர் ஆட்சிக்கு வருவது பேராபத்துன்னு மக்கள் நினைச்ட்டாங்க போல


====================

18  மீத்தேன் திட்டத்துக்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் தான் தி.மு.க., ஆட்சியில் போடப்பட்டது; அனுமதி வழங்கவில்லை,'- ஸ்டாலின் # மீத்தேன் திட்டத்தில் கையெழுத்து போட்டதுக்கு மன்னிப்புக்கேட்டாரே ஒருத்தர்?


====================

19 5 ஆண்டுகளில் விலைவாசி பன்மடங்கு உயர்வு : சட்டசபையில் ஆதாரத்துடன் ஸ்டாலின் குற்றச்சாட்டு # திருமங்கலம் இடைத்தேர்தல்ல ஓட்டுக்கு 1000 ரூபா, 2016 பொதுத்தேர்தல்ல 250 ரூபா. குறைஞ்சிருக்கே?

====================


20 இன்று த.மா.கா., இப்தார் விருந்து : வாசன் - ஞானதேசிகன் கைகோர்ப்பு # ஞானம் வந்தாச்சுன்னு அறிக்கை விடுவாங்களோ?


====================

0 comments: