Monday, August 15, 2016

சிம்ம வாகனியை ட்விட்டர்ல ஓட்டிட்டு இருக்கற மயில்.வாகனன் நீ தானே?

மிஸ்!,நீங்க எந்த ஏரியா?


திரும்புன திசை எல்லாம் நீர்ப்பரப்பு மிக்க ஏரியா இருக்கும் AREA


===============

2 ஜட்ஜ் =,7 பேரை கல்யாணம் பண்ணி ஏமாத்துனீங்களா?


திருப்பூர் லேடி = கல்யாணம் செஞ்சது உண்மை.தான்.ஆனா யாரையும் ஏமாத்தலை.புல் மீல்ஸ்.சாப்ட்டாக===============

3 டாக்டர்.என் தலைவலி போன இடமே தெரில.


இல்லையே.உங்க சம்சாரம் ஜவுளிக்கடைக்கு போச்சே?


===============

4  டெய்லி ஜாகிங்க், ரன்னிங் போகச்சொன்னேனே? போனீங்களா?மேடம்


 டாக்டர், நான் தான் ஃபேமிலியை ரன் பண்ணிட்டு இருக்கேன், போதாதா?


=======================


என்னது? ஆப்பிள் சாதம் செய்யறியா?புதுசா இருக்கு?

 தக்காளி கிலோ 85 ரூபா, ஆப்பிள் 65 ரூபாதான், 20 ரூபா மிச்சம் இல்ல?


============================


6  அடுத்தவங்க வாய்ல மட்டும் விழாம வாழும் வாழ்க்கை  வேணும்


அப்போ உன் வாழ்க்கைல லிப் கிஸ்ஸே கிடையாதா?


==================7  தலைவரே! எல்லாரும் கறுப்புக்கலர் யூஸ் பண்றப்ப  நீங்க மட்டும்  வெள்ளை நிறக்குடை யூஸ் பண்றீங்களே, ஏன்?

 வெண்கொற்ற குடையின் கீழ்  ஆட்சி செய்த மன்னர் பரம்பரை நாங்க,அதான்


====================


8  நீங்க எதுக்காக 3 சம்சாரம் கட்டிக்கிட்டீங்க?

  இணை, துணை  எல்லாத்துக்கும் 3  சுழி  ண  தானே வருது? அதான். தமிழ் வாழ்க!


======================


9  இன்னைக்கு சாயங்காலம் வரை உங்களை நினைச்சுட்டே இருக்கறது மாதிரி 1 சொல்லுங்க

நீ என் மீது சாயும் காலம் எல்லாம் எனக்கு சாயங்காலம் தான்


=============================


10 அரசியல்வாதி ஆன நடிகர் எல்லாம் தேர்தலில் தோத்தபின்நடிக்க போனா, அவர்களை நம்பியிருந்த தொண்டர்கள் என்ன செய்வாங்க?

வாழ்க்கைப்பாடம் படிக்கப்போவாங்க


===================


11 மிஸ்! ஃப்ரீயா இருக்கும்போது கால் பண்ணுங்க, ஒரு மேட்டர் சொல்லனும்

 என்ன மேட்டர்னு SMS  பண்ணுங்க

 அப்டி பண்ணிட்டா பேச மாட்டீங்க


=====================


12  அங்கே  என்ன கூட்டம்? என்ன பஞ்சாயத்து  ஓடிட்டு இருக்கு?

 பஞ்சாயத்து தலைவி ஓடிப்போய்டுச்சாம் 


==============


13 தமிழ் மிஸ்.தன்யா = கலிப்பா ,வஞ்சிப்பா உதாரணம்.சொல்

லொள் மாணவன் = சுமங்"கலி", புஷ்பா


===============

14 HM = டீச்சரை வர்ணிச்சு கில்மாக்கவிதை எழுதுனியா?

யா.ஆசிரியப்பா உதாரணத்துடன் விளக்குன்னாரு==============

15 அரசியல்வாதிக்குப்பிடித்த தமிழ் கேள்வித்தாள் பகுதி எது?

'கோடி " ட்ட இடத்தை நிரப்புக


===============

16 சர்வர் = பேப்பர் ரோஸ்ட்.சாப்பிடறீங்களா?

நான் என்ன கழுதையா? ஆனியன் ரோஸ்ட் கொண்டு வாங்க

=============

17 என் வெப் சைட் உலக அளவில் 256 வது இடத்தில் இருக்கு.உங்க சைட் எங்கே இருக்கு?

என் சைட் அவ அப்பா கஸ்டடில இருக்கு.ஹும்

==============

18 சார்.மிஸ் புஷ்பலதா வை பார்க்கனும்

அடடா.அவங்க ஆபீஸ் க்கு லீவ்.புஷ்பா வும் லதா வும் இருக்காங்க.ஒட்டுக்கா நிக்க வெச்சு பாத்துக்கறீங்களா?

============

19 டிராபிக் போலீஸ் = லைசென்ஸ் காட்டு

சார்.நடந்துதானே வர்றேன்?
சிம்ம வாகனியை ட்விட்டர்ல ஓட்டிட்டு இருக்கற மயில்.வாகனன் நீ தானே?

==============

20 சார்.வில்லன் கொலை பண்ணதைப்பார்த்த ஹீரோ சொப்பன சுந்தரி அட்ரசை.விசாரிச்ட்டு இருக்காரே?
அநியாயம் எங்கே நடந்தாலும் குட்டி கேட்பாரு
===============

0 comments: