Monday, August 01, 2016

அதிமுக ஜெயிக்காத ஏரியா மட்டும் கரண்ட் கட்

திமுக - காங் கூட்டணியை பிளவுபடுத்த உளவுத் துறை சதி-கருணாநிதி # தலைவரே! அழகிரி , சுந்தர் சி-ன்னாலாவது நம்பலாம்


==============2உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ., தனித்தே போட்டியிடும். அதுபோல, காங்கிரஸ் தனித்து போட்டியிடத் தயாரா ?-தமிழிசை # உங்களுக்கு கூட்டுக்கு ஆள் கிடைக்கலை,அதுக்காக கிடைச்சவங்களை தனியா வான்னா எப்டி?


===================

மக்கள் நலக் கூட்டணி ஜெயிக்கும் என, நான் நம்பவில்லை. அதேநேரத்தில், இவ்வளவு மோசமாக தோற்கும் என்றும், நான் நினைக்கவில்லை.-விஜயகாந்த் #160 சீட் ஜெயிக்கும்னு சொன்னது சும்மானாச்சுக்கா?

==================


ஜெவை விஜயகாந்த் ஆதரித்தார்; எதிர்க்கட்சித் தலைவரானார். அவரை எதிர்த்தார்; MLAகூட ஆக முடியல.-விந்தியா # ஃபார்முலா படி ஆதரிச்ச அப்போ எதிர்க்கட்சின்ன எதிர்க்கும்போது ஆளுங்கட்சி ஆகி இருக்கனும்


=================


 தே.மு.தி.க.,வின் ஓட்டு வங்கி தொடர்ந்து சரிந்து வருவதை புரிந்து கொள்ள வேண்டும்- தமிழருவி மணியன் # போற போக்கைப்பார்த்தா அடுத்த தேர்தல்ல ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஆகிடும் போல

========================

மற்ற கட்சி எம்.எல்.ஏ.,க்களை இழுக்க, ஆளுங்கட்சி முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன-EVKS # இதுக்கு விதை முதன் முதலா யார் போட்டாங்கன்னு காலை கிழக்கே பார்க்கவும்


===================


7  அடுத்த 15 ஆண்டுகளுக்கு மோடி தான் பிரதமர்: பாஸ்வான் # அப்போ 3  தேர்தல் செலவு மிச்சம்கறீங்க?


===================

8  மோடியை சந்திப்பதற்காக, ஜெயலலிதா விரைவில் டெல்லி பயணம் - செய்தி # ஜூன் மாசக்கடைசில சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வருது இல்ல?


====================


9  திருப்பரங்குன்றத்தில் போட்டியா? * விஜயகாந்த் மறுப்பு # ஏற்கனவே சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கு, ஒரு கேப் வேணாமாய்யா?


============================================

11 பிரசாரம் செய்ய சன்மானம் வாங்கிய குஷ்பு!: தமிழக காங்கிரசில் திடீர் சர்ச்சை # ஏய்யா! பதவியும் தர மாட்டீங்க, துட்டும் தர மாட்டீங்க, மனசுக்குள்ளே கலைஞர்னு நினைப்பா?


===================


12 


பள்ளிகளுக்கு அருகே 98% புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஆய்வில் தகவல் # ஸ்கூல் கேண்ட்டீனுக்கே விற்பனைக்கு வந்துடும் போல

===================

13 
====================

14 

ஷெல் எரிவாயு திட்ட விவகாரம்: தமிழக அரசின் நிலைப்பாட்டை ஜூன் 22 க்குள் தெரிவிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு # முதல்ல கோர்ட் தீர்ப்பு வரட்டும்.பக் பக்னு இருக்காம்


================

15 வளைத்து வளைத்து மின்வெட்டு.. பரிதவிக்கும் சென்னைப் புறநகர்கள்! # அதிமுக ஜெயிக்காத ஏரியா மட்டும் கரண்ட் கட் போல===================16 சென்னை விமான நிலையத்தில் சுற்றித்திரியும் புறாக்கள்: விமானங்கள் புறப்படுவதில் தாமதம் # புறாவுக்கே பெல் அடிச்சவர் ஆச்சே, அவரைக்கூப்பிடுங்க
===============
17

மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்வு: உடனடியாக அமல் # ஆபரேசன் பண்ணும்போது கை நடுங்காது?


================

18 

================


19 தமிழகத்தின் அம்மா உணவகம் போன்று ஆந்திராவில் ‘அண்ணா கேன்டீன்’ வரும் ஆகஸ்டில் தொடக்கம் # அண்ணா வா? அதுக்கு கலைஞர் காப்பீடு வெச்சிருப்பாரே?


==================

20 ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெ.வுக்கு எதிரான வாதங்களை வைக்க 2 மணி நேரம் அவகாசம் கேட்டது கர்நாடக தரப்பு # ஒரு சினிமாவே அவ்ளோ நேரம் இல்ல இப்ப எல்லாம்

=============

0 comments: