Sunday, August 14, 2016

THE CONJURING 2 படத்தை தமிழ் ல டப் பண்ணா என்ன டைட்டில் வைக்கலாம்?

1  சார்.ரத்த தானம் செஞ்சிருக்கீங்க்ளா?


அப்பப்ப.
முத்த தானம்?
காதலியோட அப்பா இல்லாதப்ப


==============

2 ஜட்ஜ் = காதலியை எதுக்கு ஆத்தில தள்ளி விட்டே?


கைதி =3 மாசமா முழுகாம இருக்கேன்னு புலம்புனா.============

3 பாட்டனி மிஸ் பாரிஜாதம் = கசப்புச்சுவை எல்லாமே உடல் நலனுக்கு நல்லதே.உதா - பாகற்காய் ,வேப்பிலை,சுண்டைக்காய்


டீச்சர்.பீர் கூடத்தான் கசக்குது.================

4 பொண்ணு எப்போ கர்ப்பம் ஆனாலும் அக்டோபர் மாசத்துலதான் குழந்தை பிறக்குமா?ஏன்


10 வது மாசத்தில் பேபி ன்னீக.அக்டோபர் தானே 10 வது மாசம்?


=================

5 ஆன்ட்டி.்.உங்க கழுத்தில் மாட்டி இருக்கும் ஆபீஸ் டேக் தரீங்க்ளா?


எதுக்கு?
ீ முடிஞ்சா நாளைக்கு anti tag போட்டு பாரு னு சவால் விட்டாக.


=======


6 என் செருப்பு திருடு போகாம இருக்கணும்னா நான் மதம் மாறனுமா ? :


தேவை இல்லை.கோவிலுக்குப்போகும்போது செருப்பு போடாம் போனாலே போதும்==========

7 சார்.நீங்க ஒரு நாவலிஸ்ட் னு பயோ ல இருக்கு.நாவல் லிஸ்ட் போடுங்க.


1 பெரிய கரு நாவல் பழம்
2,சின்ன நாவல் பழம்
ஹோல் சேல் டீலர்ங்க


===============

8 மிஸ்!,நீங்க ஜிப்ரான் இசை ரசிகையா?


யா.எப்டி தெரியும்?
வழக்கமா ஜாக்கெட்க்கு கொக்கி/பட்டன் தான் வைப்பாங்க.நீங்க ஜிப் வெச்சிருக்கீங்க்ளே?=============

9 THE CONJURING 2 படத்தை தமிழ் ல டப் பண்ணா என்ன டைட்டில் வைக்கலாம்?


கறுப்பு டா(திகில்ச்சி)=============

10 அரசியல்,சினிமா என்ன வித்தியாசம்?


ரஜினி,கமல் இருவருக்கும் நான் ரசிகன்னு சொல்ல முடியும்.ஆனா கலைஞர் ,ஜெ இருவருக்கும் தொண்டன் னு சொல்ல முடியாது============

11 டியர், உன் பிறந்த நாள் பரிசா ஒரு பூனைக்குட்டி கிஃப்ட் பண்ணவா?

 உன்னை CATடேனா முருகேசா?


======================

12 சார், நானூற்றி இருபது ரூபா கடன் வேணும்

 அய்யோ, ஃபோர் ட்வெண்ட்டியா இருப்பே போல?


=====================

13 
  • அரட்டை கேர்ள் சிம்பு ரசிகைன்னு எப்டி சொல்றே?

வானத்தை நேசிக்கும் குமரின்னு பயோ ல  இருக்கே? வானம் சிம்பு படம் தானே?


================================


14 ரோட்டுல அடிப்பட்டு கிடந்த ஒரு நாயை காப்பாத்த நினைச்சேன்.முடியல.

ஏன்?
FB ல ஸ்டேட்டஸ் போட்டு லைக்சை எண்ணிட்டிருந்தேன்.டூ லேட்.போய்டுச்

=============

15 சார் .உங்க ப்ரொடக்சன் யூனிட் ல எத்தனை பேரு இருக்கீங்க?
நானும் என் மனைவியும்
இதுவரை என்ன் என்ன தயாரிச்சு இருக்கீங்க?
இதோ இந்த 5 குழந்தைகளை


===============

16 குருவே! என் வாழ்க்கையில் எப்போதும் நல்லதே நடக்கனும்.அதுக்கு என்ன வழி?

தினமும் அதிகாலையில் புல் வெளியில் 4 கிமீ நடக்கனும்


=================

17 மோகினிக்கு ஒரு CALL பண்ணனும்.
பேய்க்கு கால் இல்லைன்னு சொல்லுவாங்களே.எப்டி சாத்தியம்?


==============
18 ஜட்ஜ் = சிலைக்கடத்தல் வழக்கில் சிக்கிய நீ ஏதாவது சொல்லனுமா?

கைதி = ஏகப்பட்ட சிலைகளைக்க்டத்தி இருக்கேன்.சிங்குலர்ல சிலைனு சொல்லிட்டீகளே?

============

19 டியர். மகிழ்ச்சியாய் இருப்பதால் அழகாய் இருக்கேனா?
அழகாய் இருப்பதால் மகிழ்ச்சியாய் இருக்கனா?
கண்ணாடி பாத்த பின்னாடி என் முன்னாடி வந்து சொல்


==============

20 டியர்.உங்களை நம்பி LAKE வரலாமா ?எப்டி கூட்டிட்டுப்போறீங்க?பைக்?கார்?

அ"லேக்"கா தூக்கிட்டு போறேன்.டோன்ட் ஒர்ரி


=================

0 comments: