Sunday, August 21, 2016

டியர்.நான் கோபமா இருக்கும்போது என் கன்னம் சிவக்குதா?ன்னு பார்த்து சொல்லுங்க.

மிஸ்.கோபமா இருக்கும் காதலனை சமாதானப்படுத்த கோபமா?ன்னு ஒரு பேப்பர்ல எழுதிக்காட்டச்சொன்னேனே?


அவனுக்கு படிக்கத்தெரியாது================

2 டியர்.நான் கோபமா இருக்கும்போது என் கன்னம் சிவக்குதா?ன்னு பார்த்து சொல்லுங்க.


நீ என்ன சாய் பல்லவியா?மருதாணி வெச்சாலே சிவக்காது விரல்


================

3 டாக்டர்.2,வருசமா என் தலைல பேன் குடி இருக்கு.காலி பண்ண என்ன வழி?


வாடகையை டபுள் ஆக்கிப்பாருங்க=============4 டியர்.ஏன் என் கிட்டே பேசறதில்ல?நீ 1000 கிமீ தள்ளி இருக்கே.எப்டி உன் "கிட்டே"பேசமுடியும்?

=============

5 10 வது கூட படிக்காத மாப்ளை எப்டி பேங்க் மேனேஜர் ஆனார்?

கட்சியோட வாக்கு வங்கியை கவனிக்கும் வோட் பேங்க் மேனேஜராம்

=================

பாரீஸ் கார்னர், லஸ் கார்னர் ல சினிமா தியேட்டர் கட்னா நல்லா போகும்

ஏன்?
கார்னர் சீட் ? ,லவர்ஸ்ஸ்பெஷல் தியேட்டர்னு விளம்பரம் பண்ணலாமில்ல?


====================

7  எல்லா தேர்தல்லயும் நின்னு ஜெயிச்சவன்னு பேர் எடுத்தவன் நான்

 அப்டியா? போப் ஆண்டவர் தேர்தல்ல நின்னு ஜெயிச்சிடுங்க பார்ப்போம்


====================

8 தலைவர் ஒரு நேர்மையான ஊழல்வாதின்னு எப்டி சொல்றே?

எந்த வேலைக்கு எவ்ளோ ஊழல்னு  ப்ரைஸ் லிஸ்ட் கொடுத்துடுவார்


===================


9 உனக்குப்பக்கத்துல எப்பவும் இஞ்சிமொரப்பான், இஞ்சி மிட்டாய் வெச்சிருக்கியே ஏன்? ஜீரணக்கோளாறா?

ஆர்வக்கோளாறு. இஞ்சிNEAR  ஆகிடலாமில்ல?


====================

10   நேத்து வாக்கிங் போகும்போது என் தங்கச்சியைக்கட்டிப்பிடிச்சீங்களாமே?ஏன்?

 உன் சொந்தஙகளை அரவணைச்சு நடக்கனும்னு நீதானே சொன்னே?====================

11  மிஸ்! ஐ லவ் யூ!

 அப்டியா? என் அம்மா கிட்டே தில்லா  சொல்ல முடியுமா?

சொல்லிடுவேன், உன் அப்பா 1ம் சொல்ல மாட்டாரா?

====================

12 டியர், ஐ லவ் யூ. நீயும் சொல்லு

உம்

என்னாதிது?

 நீ உம் சொல்லுன்னு நீங்க தானே சொன்னீங்க?


=======================

12 பசங்களை தூக்கி எறிஞ்சு பொண்ணுங்க பேசுனாக்கூட பசங்க கவலைப்படறதில்லை, ஏன்?

 எப்டியோ பொண்ணுங்க பேசினா சரினு நினைக்கறாங்க போல  

======================


13 தலைவர் டெய்லி காலைல சுண்டல் சாப்பிடறாரே? எதுக்கு?

 பதவியில் இருந்தா சுரண்டல், இல்லைன்னா சுண்டல் இதுதான்  அவர் கொள்கை 


====================


14  ஜட்ஜ் = சப் இன்ஸ்பெக்டரை  தாக்குனியா?

 கைதி = ஆக்சுவலா நான் தாக்குனது கமிஷனரை. அவங்க கவுரவம் பாதிச்சிடும்னு அப்டி சொல்றாங்க


==================15  தலைவரே! நோட்டா பற்றி என்ன நினைக்கறீங்க?

 அப்டின்னா  என்ன?கள்ள நோட்டா?

====================

16 உங்க  கிட்னில கல் இருக்கு

அய்யய்யோ, அடிக்கடி தட்”கல்” ல புக் பண்ணி ட்ரெய்ன் ட்ராவல் பண்ணுவேன்,அதனாலயோ?

=================

17  மக்கள் எளிமையா வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்னு ஏன் தலைவரே அறிக்கை விடறீங்க?

 அப்போ தானே அரசியல்வாதிக நாம ஆடம்பரமா வாழ முடியும்?


=======================

18 டியர், உங்க கூட சண்டை போட ஆசையா இருக்கு, எப்போ ஃப்ரீ?

இரு, எங்கம்மாவை அனுப்பறேன், அவங்க ஆல் டைம் ஃப்ரீ


=======================


19  டியர், முதுகு காட்டி நின்னு அந்தப்பக்கமா  என்னமோ சொல்றியே? ஏன்?

 ஐ லவ் யூ சொல்லிட்டு எங்கே திருப்பி சொல்லு பார்ப்போம்னீங்க, அதான் திரும்பி நின்னு சொல்றேன்


=====================


20   வியாபாரம் பண்ணும்போது சிரிச்ச முகமா இருக்கனும், நீங்க மட்டும் ஏன் சிடு சிடுன்னு ?

இஞ்சி “மொரப்பா” விற்கறேன், அதான் முறைப்பா விற்கறேன்


=======================

0 comments: