Thursday, August 18, 2016

சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை லோன் ட்யூ கட்டலைன்னு சீஸ் பண்ணிட்டாக?

ஜோக் எழுதறதுக்கு முன்னாடி இது ஜோக்குன்னு எழுதுங்க, அப்போதான் புரியும்

அப்போ அது சஸ்பென்ஸ் ட்வீட் கேட்டகிரிலயே இருக்கட்டுமே? என்ன இப்போ?


=================


2 சார், நீங்க எழுதுன ஏ ஜோக்கால எனக்கு மூடு அவுட் ஆகிடுச்சு

அடடா, என்ன சார் செஞ்சீங்க?

யூ ட்யூப்ல போய் கில்மாப்படம் 2 பார்த்தேன்

=================


3 சார், நான் கவுரமான குடும்பத்துல இருந்து வந்தவன், ஏ ஜோக்ஸ் போட்டதை வன்மையா கண்டிக்கறேன்

அப்டியா?இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

பவுர்ணமி ராத்த்ரியில் ரதிதேவி படம் பார்க்கறேன்===================

4 சார், வாட்சப்ல த்ரிசா வீடியோ வந்தப்போ என்ன செஞ்சீங்க?

25 டைம் பார்த்தேன்

ஹன்சிகா க்ளிப் வந்தப்போ?

30 டைம்

அப்போ சரி அப்போ சரி, நீங்க நல்லவர் தான்
=================


5 பூமாலை நிகழ்ச்சியை ஏன் உங்க டி வில வடை மாலை நிகழ்ச்சியா மாத்திட்டீங்க? 


 ஆஞ்ச”நேயர்” விருப்பம்ங்க

==================


பணம் இருக்குங்கற திமிரை காட்டாத.


சாரி சார்.இனிமே தக்காளி சாதம் டிபன் பாக்ஸ் ல கொண்டு வந்தா கமுக்கமா சாப்பிட்றேன்

============

7 தலைவரே! சொந்தக்கார் இல்லைனு சொன்னீங்களா?


நான் சொன்னது சொந்தக்கா(ர)ர் (ரிலேசன்),இது சொந்தக் கார் CAR


=============

8 சார்.நீங்க நுனிப்புல் கூட ஒழுங்காய் மேயாத ஆள்!னு சிலர்.சொல்றாங்களே?
அடிக்கரும்பு தான் இனிக்கும்னு இவங்களே தான் சொன்னாங்க.அதான் பாதில ..


==============

9 டெய்லி 100 டைம் ஸ்ரீரா மஜெயம்  எழுதினா உங்களுக்கு ராமர் மாதிரி கணவர் அமைவார்


ஓஹோ, ஆனா ராமரே நல்ல கணவர் கிடையாதே?


=================

10  டியர், என் சொந்தம் வந்தா வெறுக்கறே, உன் சொந்தம் வந்தா மீன் வறுக்கறே, ஏன்?

 லூசு புருசா, எங்க  சொந்தம் அசைவம், உங்க சொந்தம் பக்கா சைவம்


=====================


11 டியர், சினிமா க்கு வர்றியா?

உன் கூட வந்தா படம் பார்ப்பியா?என்னையா?
கண் படம் பார்க்கும், கை விரல் வசனம் டைப்ப, உதடுக்கு மட்டும் உன்னுடன் பணி


==============


12 சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை லோன் ட்யூ கட்டலைன்னு சீஸ் பண்ணிடறாங்க.அப்போ சொ சு என்ன சொல்லும்?


எனக்கு இன்னொரு காரு இருக்கு


=============


13 ஜட்ஜ் = போதைப்பொருள் வழக்குல எப்டி மாட்னீங்க?
மம்தாகுல்கர்னி = என்னைப்பாத்தாலே போதை ஏறுதுன்னு ஒரு கபோதி கம்ப்ளைண்ட் குடுத்துட்டான்


================


14 சினிமா தியேட்டருக்குள்ளே ஸ்டவ் அடுப்பு எரிச்சு எதுக்கு சமைக்கறீங்க?
OUTSIDE FOOD NOT ALLOWED னு போர்ட் இருக்கு

============15 டாக்டர்.கொய்யாப்பழம் சாப்ட்டா சரக்கடிச்ச ஸ்மெல் வராதாமே நிஜமா?
அடங்க்கொய்யால.திவசமே வரும்கறேன்.வாசம் வரும் னு கவலை?


===============


16 தலைவரே!,தந்தையர் தினம் வந்தாச்.இந்த முறையாவது மகனுக்கு பட்டாபிஷேகம் நடத்துவீங்களா?
2021ல்.ஜெயிச்சா நான் சிஎம்.தோத்தா மகன் எ க தலைவர்

============


17 டாக்டர்.தக்காளி.சாப்ட்டா இதயத்துக்கு நல்லதாமே?
ஆமா.ரேட் கேட்காம சாப்பிட்டா நல்லது.

==============

18 இன்ட்டர்வ்யூவில்

உங்க முன் அனுபவம் பற்றி சொல்லுங்க
கோவை அனு , சேலம் அனுராதா ,பொள்ளாச்சி அனுபல்லவி இவங்களை எல்லாம் பாலோ பண்றேன் சார் FB ல

=================
19 ஆபீசுக்கு 1 நிமிசம் லேட்டா வந்தாலும் அனுமதிக்க மாட்டேன்.

ஐ ஜாலி.லீவ் வேணும்னா லேட்டா வந்தா ஆட்டோமேடிக்கா கிடைக்கும்

=============
20 டாக்டர்.அடிக்கடி செல்பி எடுத்தால் வயதான தோற்றத்தைத் தருமாமே நிஜமா?

ஆமா.செல் சிட்டுக்குருவிக்கும்,செல்பி மனிதனுக்கும் கேடு தரும்

===============

0 comments: