Monday, August 08, 2016

பத்தமடைல பொண்ணு கட்ட மாப்ளை ஏன் தயங்கறாரு?

பொண்ணு குத்து விளக்கு மாதிரி.
ஓ.பளிச்னு இருக்குமா?
ம்ஹூம்.குத்து விளக்குக்கு எத்தனை திரி போடலாம் ?
5
இவளுக்கும் 5 லவ்வர்ஸ்

================

2 சார்.நீங்க மப்புல இருக்கும்போது லூசுத்தனமா பேசுவீங்களாமே ஏன்?

புல் டைட் ல இருக்கோமில்ல?பேலன்ஸ் பண்ண லூஸ் தனமா பேசுவேன்

===========

3 மே ஐ கம் இன் சார்.?

அப்டேட்டா இருங்கய்யா.
புரியலையே?
போன மாசமே மே மாசம் முடிஞ்சாச்சு.இப்போ நடப்பது ஜூன்.
ஓ.ஜூன் ஐ கம் இன் சார்?

=============

4 மிஸ்! வாழ்த்து.கடவுள் எப்பவும் உங்க கூடவே இருப்பார்.நான் சொல்றேன் அவர்ட்ட.

யோவ்.அப்போ கடவுளோட சம்சாரம் சண்டைக்கு வராதா?

================


5 சமைக்கும் போது தேங்காய் துருவலை எடுத்து வாயில் போட்டுக்குவேன்.

ஓஹோ.உங்க மம்மி உங்க வாய்லயே அடி போட்டிருப்பாங்களே?


=================

6 பிறருக்காக நாம் சமைக்கும் போது உணவின் சுவை இன்னும் மெருகேறும்.

அப்போ நான் அடுத்த ஆளா?ன்னு ஆத்துக்காரர் சண்டைக்கு வர்லையா?மேடம்


==============

7 மிஸ்! இன்றைய டிபன் னு நீங்க ஃபேஸ்புக்ல அப்டேட்டின போட்டோ ஹோட்டல் ல எடுத்தது போல் இருக்கு.உங்க சமையல் போட்டிருக்கலாமில்ல?

சமைச்சா போடமாட்டேனா?

==================

8 காத்திரமான புத்தகமென்றால் குறைந்தது எத்தனை கிலோ இருக்கவேண்டும்?"

ஜங்கிள் புக்.போல் அடர்த்தியா இருக்கனும் சார்
================

9 சார்.லோயர் பர்த் தான் இருக்கு.புக் பண்ணவா?

சார்.நாங்க ரொம்ப உயர்ந்த ஜாதி.அப்பர் பர்த் தான் வேணும்

================

10சார்.உங்க ஆபீஸ்ல அவார்டு ரிவார்டு தருவாங்களா?

உண்டான சம்பளம் ,இன்சென்ட்டிவ்,T.A,D.A.வையே ஒழுங்காத்தரமாட்டானுக


=============

11 சார்.உங்க எழுத்து ரொம்ப மொக்கையா இருக்கு?

மேதாவித்தனமா எழுதுனா ஏ சென்ட்டர் ஆடியன்சைத்தான் கவர் பண்ண முடியும்.தர லோக்கலா எழுதுனா பி,சி

============

12 மாப்ளைக்கு சுகர் இருப்பதால் அரிசி சாதம் தவிர்த்து கோதுமை உணவு சேர்க்கச்சொல்லுங்க.

சரி டாக்டர்.வீட்டோட மாப்ளை இனி WHEAT டோட மாப்ள

==============

13 இன்ஸ்பெக்டர்.ட்யூட்டில புதுசா ஜாயின் பண்ணி இருக்கீங்களா?

யா.ஏன்?
கன்ட்டெய்னர்ல என்ன இருக்கு?ன்னீங்ளே? லஞ்சப்பணம் தான்


===============

14 ஸார்.TheConjuring2 பாருங்க.செம திகில்.பார்த்த இடத்துலயே யூரின் போய்டுவீங்க.

ஓ.அப்போ பாத்ரூம்ல தான் படம் பார்க்கனுமா?

===============

15 சார்.உங்க ஐ பி அட்ரஸ் கண்டுபிடிச்ட்டோம்.

நோ யூஸ்.நான் தான் ஐ பி கொடுத்துட்டனே.10,பைசா.தேறாது


================

16 பால்கோவா 1 பாக்கெட் குடுங்க.
பசும் பால் கோவாவா? எருமைப்பால் கோவாவா?
ஏதோ 1 குடுய்யா.எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்கேன்.எதா இருந்தா என்ன?


==============

17 மிஸ்! உங்களுக்கு பாய் பிரண்டு இல்லையா?

ம்ஹூம்.ஹிந்து பிரண்ட் தான்


================

18 மேடம்.6,மாசத்துக்கு ஒரு டைம் உங்க ட்வீட்ஸ்.எல்லாத்தையும் அழிச்சிடறீங்க்ளே.ஏன்?
பிரம்மா அவதாரம் போர் அடிச்சா எமன் அவதாரம்.எடுப்பேன்


================

19 பத்தமடைல பொண்ணு கட்ட மாப்ளை ஏன் தயங்கறாரு?

பொண்ணுக்கு பாய் பிரண்ட்ஸ் அதிகம் இருந்துட்டா?

================

20 அடக்குனா அடங்குற ஆளா நீ?

டியர்.நிஜமா கபாலி பஞ்ச் சொல்றீங்களா?என்னை குத்திக்காட்றீங்களா?

===============

0 comments: