Monday, August 01, 2016

இது நம்ம ஆளு VS இவன் வேற மாதிரி

1  தமிழகத்தின் அம்மா உணவகம் போன்று ஆந்திராவில் ‘அண்ணா கேன்டீன்’ வரும் ஆகஸ்டில் தொடக்கம் # அண்ணா வா? அதுக்கு கலைஞர் காப்புரிமை வெச்சிருப்பாரே?


=============2 சோனியாவுக்கு பதிலாக காங். தலைவராகிறார் ராகுல் காந்தி! -செய்தி # ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ், நமக்குப்பின் வந்தவங்க எல்லாம் தீபாவளி கொண்டாடறாங்க,அன்புமணி , ராகுல்=============
3 சட்ட விரோத பணம் ஜெ வுடையது என்பதற்கு என்ன ஆதாரம்? சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி # ரைட்டு சட்டம் தன் மடமையை செய்யும்னு தெரியுது
=============4 வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல!ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து # எவனாவது 500 ரூபா லஞ்சம் வாங்குனா அவனை உதைங்க, 500 கோடியை விட்டுடுங்க===========5 ஓட்டு-க்கு பணம்: ஜனநாயகம் அடிப்படையில் மக்கள் தான் முடிவு காணவேண்டும் - ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து # அப்புறம் எதுக்கு தண்டமா உங்களுக்கு சம்பளம்?


====================

6 தேர்தலில் தோல்வி அடைந்தாலும் மதிமுக. தொண்டர்கள் துவண்டு விட மாட்டார்கள் -வைகோ # தொண்டர்களா? எங்கே எங்கே? காட்டுங்க பார்ப்போம்

==============

7 ராமதாஸ் சொன்னது போல், உளுந்துார்பேட்டையில், விஜய காந்த் டிபாசிட் இழந்தார்.-, வக்கீல் பாலு: # பாமக 210 தொகுதிகளில் ஜெயிக்கும்னு கூடத்தான் சொன்னாரு


=====================


 தேர்தலுக்கு முன், 'தே.மு.தி.க.,வுக்கு, இது கடைசித் தேர்தல்' என, நான் சொன்னேன். அதே போல் தோல்வி -தமிழருவி மணியன்: # உங்களுக்கும் அதே நிலைமை தான், சொல்லாம செஞ்சிட்டீங்க


=============
காங்கிரஸ்MLAக்கள் தேசியவாதிகள். நாட்டு நலனில் அக்கறை உடையவர்கள், எதற்காகவும், காங்கிரசை விட்டு செல்ல மாட்டார்கள்-EVKS #  நாட்டுக்காக போகாட்டி என்ன? நோட்டுக்காக போய்ட்டா?


====================

10 நான் உயிருடன் இருக்கும்போதே, இறந்து விட்டதாக,வதந்தி பரப்பி திமுகவினர்  என்னை அழ வைக்கின்றனர்- செந்தில் # பேர்லயே தில் இருக்கு,எதுக்கு அழனும்?


=======================

11   புகையிலை பொருட்களுக்கு  தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும். -தமிழிசை # செல்வந்”தம்” போய்டும்னு நினைக்கறாங்க போல==================


12 மிகக் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்த அனைத்து தொகுதிகளிலுமே, மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும்-.திருமாவளவன் #இதுக்கு சட்டத்திலும் இடம் இல்லை, உங்களுக்கும் மக்கள் மனதில் இடம் இல்லை


=======================

13 வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தால் ஒழிய, பணப் பட்டுவாடாவை தடுக்க முடியாது.-வைகோ # அப்டி செஞ்சா திமுக , அதிமுக 2ம் அவுட் , உங்க ரூட்டு க்ளியர் ஆகிடும்


=========================

14 காங்கிரஸ் எழுச்சி பெறும்; 

மீண்டும் புதிய வரலாற்றை படைக்கும்.-சோனியா காந்தி # போபர்ஸ் ஊழல், ஹெலிகாப்டர் ஊழலை விட பெரிய வரலாறா இருக்குமா?

====================

15  ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு, அதில் மற்ற வேட்பாளர்களுக்கு ஆட்சேபனை இருந்தால், கோர்ட் மூலமே தீர்வு .-ராஜேஷ் லக்கானி # தீர்ப்பு வரும்போது அடுத்த தேர்தலே வந்துடும்


======================

16  கடிதம் எழுதினால் மட்டும் போதாது :ஜெ.,வுக்கு கருணாநிதி 'அட்வைஸ் # ஒவ்வொரு டைமும் மக்கள் நலனுக்காக மட்டுமே டெல்லி போனாரே கலைஞர் அது போல் நடக்கனுமா?


====================

17 


உள்ளாட்சி தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்: வைகோ # முற்றும்  போட்டுடலாம்னு கேப்டன் நினைக்கறாராமே?


===================


18 அமெரிக்கா -13 வயது மாணவனால் கர்ப்பமாகிய பள்ளி ஆசிரியை கைது # டீன் ஏஜ் ஸ்டார்ட் ஆன அடுத்த நாளே ஸ்டார்ட் பண்ணிட்டான் போல

=============

19 அ.தி.மு.க., பாணியில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்க திட்டமிடுகிறது தி.மு.க.,# தனித்து ஜெயிப்போம்னு தெம்பு வந்துட்டா கூட்டாளியை கழட்டி விட்டுடனும்,சாணக்கியத்தனம்


==============


20 மதன் செய்த மோசடிகளுக்கும் எஸ்.ஆர்.எம். நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை: பாரிவேந்தர் விளக்கம்# காரியம் ஆகும் வரை இது நம்ம ஆளு, பிரச்னை வந்தா இவன் வேற மாதிரி


=================

0 comments: