Tuesday, August 30, 2016

கலைஞருக்கு கருக் கருக்

1

'பிரிட்டனும் மஹாராஷ்டிராவும் ஒன்றே!': ராஜ் தாக்கரே ஆவேசம் #   என்னய்யா இது> பிரிட்டானியா பிஸ்கெட்  பிரிட்டனில் தயாராவதுன்னு சொல்ற மாதிரி  இருக்கு?


================ பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வின் ஜாமின் கோரிக்கையை நிராகரித்த டில்லி கோர்ட், #   ஆம் ஆத்மி ஷேம் ஷேம் ஆத்மி


==============

வறுமையை ஒழிப்பதே நோக்கம்: வெங்கையா நாயுடு # ஏழைகளை எல்லாம் நாடு கடத்தப்போறீங்களா?


=====================


மா.செ.,க்கள் மீது கடும் கோபம் :விஜயகாந்த் விசாரணை ஆரம்பம்  #  புலன் விசாரணை யில் கேப்டன் பிரபாகரன் மனக்கணக்கு பலிக்குமா?


========================


5  மக்களை பாதுகாப்பதில் அதிமுக அரசு தோல்வி: ராமதாஸ் தாக்கு # இல்லியே."குடி"மக்கள் பாதுகாப்பா தானே சரக்கு அடிச்ட்டு இருக்காக?


============6 சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நிர்பயா நிதி 62கோடி # இனி பயம் இல்லாமல் பெண்கள் நகரில் நடமாடலாம்============
7

கன்டெய்னரில் ரூ.570 கோடி பறிமுதல் வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை :உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில் # சிபிஐ மோடியின் கட்டுப்பாட்டில், மோடி ஜெ-க்கு நண்பர் , 1+1=2


=============================


8  பெண் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் கொலைகாரனை அடையாளம் காட்டிய ரெயில் நிலைய ‘கேன்டீன்’ ஊழியர் # கேஸ் முடியும் வரை சாட்சி பற்றிய தகவல்கள் பகிராமல் இருப்பது நலம்

======================


9 திருப்பத்தூர் அருகே ஏரியைத் தூர் வாரியபோது பெண் தொழிலாளிக்கு பழங்கால தங்க நகைகள் கிடைத்தன. # இனிமேலாவது எல்லார்  ஏரியாவிலும் ஏரி யை தூர் வாருனா தங்கம் /நீர் கிடைக்கும் ஏரியாவா மாறும்

=======================10  ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத் உள்பட 11,967 பேர் அதிமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர.....# அப்போ ஒரு முன்னோட்டமாத்தான் முன்னேற்பாடா காங் தலைவர் பதவி  ராஜினாமா?

=======================
1  சந்திரகுமார்: அ.தி.மு.க.,வை மறைமுகமாக வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது தான், விஜயகாந்தின் எண்ணம். # திமுக வை நேரடியாக  வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது தான், உங்க  எண்ணம்.?


===================


 தமிழிசை : தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட இருக்கிறது  # 2021 மே ல பேச  வேண்டியதை ஏன் இப்பவே பேச ஆரம்பிச்ட்டீக?


===================


3  டி.கே.ரங்கராஜன்  தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை எழுந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை # தமிழகம் அமைதிப்பூங்காவாகத்திகழ்கிறதுன்னு இன்னும் கீறல் விழுந்த ரெகார்டையே போட்டுட்டு இருக்காதீங்க  அப்டிங்கறார்


==================

. ஐந்து ஆண்டுகளில் முன்னேறிய ஒரே துறை, 'டாஸ்மாக்' மட்டும் தான்.-அன்புமணி # உங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்னு  சொல்வாங்க பாருங்க


=================


5  . வணிக வங்கிகள், நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்கள், சிறு தொழில் துவங்குவதற்கு கடன் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்-வெங்கையா நாயுடு # 7000 கோடி கேட்டா எந்த டாக்குமெண்ட்டும் இல்லாம லோன் கொடுக்கும் பேங்க்குகள் 1 லட்சம் லோன் கேட்டா 2 லட்சத்துக்கு டாக்குமெண்ட் கேட்குது

=========================


6  அன்புமணி  'டாஸ்மாக்' கடை நேரத்தை, 2   மணி நேரம் குறைத்திருப்பதாக சொல்கின்றனர். ஆனால், திருட்டுத்தனமாக, காலை, 7:00 மணியிலிருந்தே வியாபாரம் செய்கின்றனர் # ஏழுக்கே  ஏழரை ஸ்டார்ட் ஆகிடுதா? சபாஷ்

===================

=========================
8  ரம்ஜான் லீவ், ஸ்ட்ரைக், ரெகுலர் லீவ் உட்பட ஜூலை யில் 11 நாள் ஆல் பேங்க் லீவ் # வங்கிக்கொள்ளையர்கள் கவனத்துக்கு அறிக்கை விடறாங்க போல

=======================

9  தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருக்கும் வாராக் கடன் நிலவரம் கட்டுக்குள் உள்ளது - அருண் ஜேட்லி # மல்லய்யா ஸ்வாஹா வுக்குப்பின்னுமா இந்த சப்பைக்கட்டு?

==================


10 ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் 8 கேமராக்கள் ..அதிரடி பிளான் # அந்த 8 கேமராக்களும் பத்திரமா இருக்கா?ன்னு கண்காணிக்க ஒரு மாஸ்டர் கேமரா பொருத்தனும்

=================


1  'தே.மு.தி.க., அறக்கட்டளை' பெயரில் வசூலிக்கப்பட்ட 500 கோடிகுறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.-சந்திரகுமார் # இதே போல் திமுக கிட்டே கேட்ருங்க பார்ப்போம்

===================

 தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினாலும், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் evks காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவார்.-குஷ்பூ # அப்போ ரூட் க்ளியர், நீங்க தான் அடுத்த தலைவர்னு சந்தோஷமா?

===================

3  . தெலுங்கு தேசம் கட்சி என்பது, திருடர்களின் இருப்பிடமாகி விட்டது; -ரோஜா # கட்சின்னா திருடர்கள் இருப்பதும், திருடர்கள் எல்லாம் கட்சில சேர்வதும் சகஜம் தானே?


==================

4   'மேக் இன் இந்தியா' என்பது, ஆந்திராவைப் பொறுத்தவரை, 'டேக் இன் இந்தியா' ஆகிவிட்டது -ரோஜா # நடிப்பை விட்டாலும் டேக் 1 டேக்2 இதெல்லாம் இன்னும் மறக்கலை போல


========================


5   கட்சியை விட்டு நீங்கள் யாரும் போகாதீர்கள்; உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.-விஜய்காந்த் #ஒளிமயமான எதிர்காலம் க்ட்சி மாறினால் தெரிகிறது, இங்கேயே இருந்தால் கிலி மயமான எதிர்காலம் தான்’


=======================

6  கணக்கில் காட்டாத வருமானத்தை காண்பித்து, நிம்மதியாக துாங்குவதற்கு இதுவே கடைசி வாய்ப்பு.-ஜெட்லி # நிம்மதியா தூங்கிட்டா விழிப்புணர்வு எப்படி வரும்?


===================================

8  ஜெகன்மோகன் ரெட்டியின் ரூ.750 கோடி சொத்து பறிமுதல் # கலைஞருக்கு கருக் கருக்னு இருக்குமே?

=======================

9  காஷ்மீர் பிரச்னைக்கு நேரு தான் காரணம்: அமித் ஷா # இந்து -முஸ்லீம் மோதலுக்கு காந்தி தான் காரணம்னு இப்டியே பழியை போட்டுட்டே இருங்க

====================

10  குறைகள் மீது 10 நாட்களுக்குள் மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும்-அதிகாரிகளுக்கு  மோடி 'கெடு'-# அப்போ 9 நாள் மெத்தனமா இருப்பாங்க

=======================

0 comments: