Tuesday, August 09, 2016

திருமா திருப்பதி போய் இருப்பாரோ?

மந்கூ சுடுகாட்டில் புதைக்கப்பட்டு விட்டது: - EVKS # அடுத்தவர் தோல்வியைக்கொண்டாடுபவர்கள் தங்கள் பழைய தோல்விகளை நினைச்சுப்பார்க்கனும்


==============2 மந்கூ சுடுகாட்டில் புதைக்கப்பட்டு விட்டது-EVKS # ஈழத்தமிழர்களை யும் சரி,அவர்களுக்கு குரல் கொடுப்பவர்களையும் சரி புதைக்கமுடியாது.விதைக்கலாம்
==============3 நடிகர் போண்டாமணி ஜெ முன்னிலையில் அதிமுக.வில் சேர்ந்தனர் # மணி MONEYயோடு சேர்ந்தது
===============4 என்னிடம் கை நீட்டி காசு வாங்கியவர் தானே நீங்கள்... ராமதாசுக்கு பாரிவேந்தர் பதிலடி ! # கை யோடு சூரியனோடு கூட்டு.வெச்சப்ப பழக்க தோஷத்துல============5 உறவுக்கு மறுத்த பெண் காண்டாமிருகம்.. கடுப்பாகி குத்திக் கொன்ற 2 ஆண் காண்டாமிருகங்கள்! " #,செம காண்டாகிடுச்சு போல
===============6 இளங்கோவன் அரசியல் நாகரீகம் கற்றுக்கொள்ளட்டும்: தமிழிசை # கையளவு மனசு,கடல் அளவு ரவுசு

================7 தலைவர்களுக்கு பா.ஜ.,வில் பஞ்சமில்லை: ராஜ்நாத் சிங் # எல்லா கட்சிகள் லயும் தொண்டர்களுக்குத்தான் பஞ்சம்.மிஸ்டு கால் ல சேர்த்தும் மிஸ் ஆகிடுது
===8 கேரளாவில் பருவ மழை 'ஜோர்' தமிழகத்தில் 'தூறல் நின்னு போச்சு # மரம் வெச்ச மகராசி அள்ளி முடியறா.மொட்டை அடிச்ச ரோசி துன்ப.வகையறா

==============9 பிரதமருக்கு புகழ்ச்சி தேவையில்லை: ரவிசங்கர் # தமிழ்நாடா இருந்தா பாசத்த்லைவருக்கு பாராட்டு விழா நடத்தி இருப்பாங்க
==============10 மல்லையா பண மோசடி செய்யும் குற்றவாளி என அறிவிக்க அமலாக்கத்துறை கோரிக்கை #,கொடுத்த 7000 கோடியையும் வசூல் பண்ண வழி பார்க்காம 71/2 கூட்டிட்டு

================
11 சோனியா காந்திக்கு எதிரான வழக்கு: நீதிமன்றத்திற்கு வெளியே சமரசமாக முடிக்கப்பட்டது# கறை படிந்த கை மேலும் கறை படிந்த்து
================12 திருப்பதி மலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்; பக்தர்கள் பீதி # திருமா திருப்பதி போய் இருப்பாரோ?===============13 23000தபால்ஓட்டுகள் செல்லாதவை-செய்தி # ஸ்டாம்ப் ஒட்டாம கவர் அனுப்பிட்டாங்களா?==================14 சமஸ்கிருத மொழியைத் திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் - வைகோ.# இவருக்குப்பிடிக்காத மொழி 1 சமஸ்கிருதமொழி 2 கனிமொழி
==============15 மோடியிடம் ரூ.1.50 லட்சம் கோடி கேட்க ஜெ., முடிவு# கன்ட்டெய்னர்ல அனுப்புவாரோ?
================16 வெளிநாடுகளில் இருந்து 5 ஆயிரம் டன்கள் பருப்பு வகைகளை இறக்குமதி செய்கிறது மத்திய அரசு # விவசாய தேசத்துக்கு இது பின்னடைவு============

17 குறிப்பிட்ட சில தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் முடங்கியதால் தான், வாராக் கடன் அதிகரித்துள்ளது.-அருண் ஜெட்லி # மிடில் கிளாஸ் கரெக்டா கட்டிடுவான், மல்லையாக்கள் ஓடிடுவான்


=================


18  தி.மு.க.,வுடன், காங்கிரஸ் இருக்கும் வரை, தி.மு.க.,வுக்கு இறங்கு முகமே-பொன்.ராதா # அப்போ நாட்டின் நலனுக்கு ஏறுமுகமே.


=====================


19 கடந்த இரு ஆண்டுகளில் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களால் பயனேதும் இல்லை.-மனீஷ் திவாரி # விதை விதைச்சதும் பழம் கிடைக்குமா? செடியாகி மரம் ஆகி கனி ஆக வேணாமா?


==================

20  இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக, அ.தி.மு.க., விஸ்வரூபம் எடுத்திருக்கிறது-நாஞ்சில் சம்பத் # அப்பவும் நல்ல கட்சின்னு சொல்ல முடியல


=======================

0 comments: