Tuesday, August 16, 2016

சார் ! நீங்க கேவலமான ஜோக்ஸ் எழுதறதா சில பெரிய மனுஷங்க எல்லாம் சொல்றாங்களே? நிஜமா?

சார், டேபிள் ஃபேன் 1 குடுங்க

 அதெல்லாம் இங்கே இல்லீங்க

 பெருசா போர்டு மட்டும் வெச்சிருக்கீங்க? “ஃபேன்”சி ஸ்டோர்னு, ஒரு ஃபேன் கூட இல்லையா?

=================

2 தலைவரே! சட்டசபைக்கு ஏன் போகலை?

 93 வயசாகிடுச்சு இல்ல? முடியல
 நம்மாலதான் எதுவுமே முடியலையே? எதுக்கு தேர்தல்ல நிக்கனும்?

சம்பளம் வருதில்ல? காசு துட்டு பணம் மணி மெனி


==================

நேத்து ஏதோ ஒரு கருத்து யோசிச்சிருந்தேனே. மறந்திடிச்சு


எதையும் மறக்கக்கூடாது அப்பப்ப டைரில நோட் பண்ணி வெச்சுக்கனும்னு யோசிச்சிருப்பீங்களோ?

==================


4 ரஞ்சித், ரஞ்சிதா என்ன ஒற்றுமை?

 2 பேருமே ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்காக , வளர்ச்சிக்காக படம்  ரிலீஸ் பண்ண்வங்க


================


டாக்டர், இட்லி சப்பிடும்போது நாக்குல காயம் ஆகிடுச்சு

 மேடம், இட்லி ரொம்ப சாஃப்ட் ஆச்சே?

  வெட்டி பந்தாவுக்காக ஃபோர்க்ல குத்தி சாப்ட்டேன்


===============
பாதாம் கீர் எவ்ளோவ்?


பர்ஸ்ட் கீர் 25,ரூபா..செகன்ட் கீர் 50 ரூபா
புரியல.
2 குவாலிட்டிங்க்.ஓனர் ஒரு பைக் மெக்கானிக்
=============

7 தமிழ் இலக்கண டீச்சர் = புணர்ச்சி விதிகள் பத்தி சொல்லு.


லொள் மாணவன் = முதல்ல நீங்க என்ன பொசிஷன் னு சொல்லுங்க்=============

8 எட்டுத் தொகை பத்துப் பாட்டு 2 சிலபசும் படிச்சாச்சா?
இல்ல. பதினேண் கீழ் கணக்கு படிச்ட்டேன்.8+10 =18

==============

9 தலைவரே!,தேர்தலுக்குப்பின் தொகுதிப்பக்கம் போனீங்களா?

நோ.
சட்டசபைக்கு?
நோ.
இப்போ ஏடிஎம் எதுக்கு வந்தீங்க?
சம்பளம்.எடுக்க்


===============

10 மன்னா! போர் நடக்குது.எல்லா வீரர்களும்.யுத்தத்துக்கு ஆய்த்தம் ஆகிட்டாங்க.நீங்க.வர்ல்?


எனக்கு இன்னொரு போர் இருக்கு


==============

11 சார்.டிவிடி எவ்ளோ?

50 ரூபா.
முத்தின கத்திரிக்கா தானே?கொஞ்சம் கம்மி பண்ணலாமில்ல?


===============

12 பாட்டி.4,அடி பாயும் னு பட டைட்டில் .ஏன்?


தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி.16,அடி பாயுமாம்.அப்போ பாட்டி.4 அடி தானே?===================

13 மளிகைக்கடை அண்ணாச்சி, சீரகம் 100 கிராம் கொடுங்க


நம்ம கிட்டே எல்லாமே ஏ ரகம், தான், பி ரகம் சி ரகம் கிடையாதே?================

14 டாக்டர், கால் சுளுக்கி வலிக்குது


மேடம், ஸ்கூட்டி தானே ஓட்டுவீங்க? எப்டி கால் சுளுக்கும்?
ஆமா, பிரேக் போடும்போது காலை தரைல உரசுனேன்================


15 தீபாமேத்தா + நந்திதா தாஸ் நடிச்ச மீரா நாயர் -ன் ஃபயர் படத்தை இப்போதான் பார்த்தீங்களா?
ஏன்?
நெருப்புடா-ன்னு ரொம்ப ஃபீல் பண்ணீங்களே?

===================

16  சார், திருப்பதி லட்டு பிளாக்ல கிடைக்குதாம், வேணுமா?

 வேணாம்ங்க ,  எந்த லட்டா இருந்தாலும் மஞ்சளா இருந்தா தான் பிடிக்கும்


==================

17  திருப்பதி லட்டை ரெடி பண்றது ஆண்கள் தான்னு எப்படி சொல்றே?

 லேடீஸ் ரெடி பண்ணினா அதை திருமதிபதி லட்டுன்னு தானே சொல்வாங்க?


====================


18   சார் ! நீங்க கேவலமான ஜோக்ஸ் எழுதறதா சில பெரிய மனுஷங்க எல்லாம் சொல்றாங்களே? நிஜமா?

 வளமான ஜோக்ஸ் 1 லட்சம் எழுதி இருக்கேனே? அதை படிக்கச்சொல்லுங்க


=====================


19 தலைவரே! உங்களால தான் அந்த கட்சியோட வாக்கு வங்கி அதல பாதாளத்துக்கு போய்டுச்சாமே?

 ஹிஹி , செய் கூலி உண்டு, சேதாரமும் உண்டு


=============================


20  தலைவரே! அரசு குடுத்த கார் வேணாம், சொந்தக்காரே போதும்னீங்க?
ஆமா
ஆனா வேட்பு மனு தாக்கல்ல எனக்கு சொந்தக்கார் இல்லைனு சொன்னீங்க? 2 ல எது பொய்?


====================

0 comments: