Friday, August 05, 2016

பொரி வியாபாரி மாசம் 25,000 சம்பாதிக்கறாரு. !!எஞ்சினியரு?

எதிரிக்கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாகவே செயல்படுவோம்: ஸ்டாலின் # அப்பாவிடம் இல்லாத நல்ல குணம் பொறுமை, சகிப்புத்தன்மை உண்டு இவரிடம்================
மக்கள் நலக் கூட்டணி குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டதால், மக்களிடம் சரியான முறையில் போய் சேரவில்லை.--ஜி.ராமகிருஷ்ணன்  # அதான் போய்ச்சேர்ந்துடுச்சா?
==================கடுமையான உழைப்பிற்காக இந்தியர்கள் பாராட்டபடுகிறார்கள்: கத்தாரில் மோடி பேச்சு # அதுக்கான ஊதியம் தரப்படாமல் விரட்டப்படுகிறார்கள்=============4 கேப்டனை சென்னை மேயராக நிறுத்துவோம்-வைகோ # இத்தோட நிறுத்திக்குங்க- கேப்டன்
============5 மோடி ஜெ. வீட்டிற்கே சென்றது கூட்டணிக்கான முதற்கட்ட சமிக்ஞை போலும்: கருணாநிதி # அப்போ அவரு கோயிலுக்குப்போனாக்கூட ஆண்டவனுடன் கூட்டணியா?னு கேட்பீங்களா?


================

6

மோடிக்கு ஜெ. கடிதம்: எழுதுங்க... எழுதுங்க... எழுதிக் கொண்டே இருங்க- ராமதாஸ் # புலம்புங்க புலம்புங்க புலம்பிகொண்டே இருங்க

============

7 சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்த கேரள அரசு தயார் # கருத்துக்கணிப்பு எப்பவும் தப்பான முடிவைத்தான் சொல்லும்
===============

8 பொறியியல் படிப்பை பொரி விற்கக்கூட தகுதியற்றதாக மாற்றிய பெருமை திராவிடகட்சிகளுக்கே!- ராமதாஸ் # பொரி வியாபாரி மாசம் 25,000 சம்பாதிக்கறாரு.


=================


9 உள்ளாட்சி தேர்தலிலும் தனித்து போட்டி: திருச்சியில் #சீமான் பேட்டி # கடைசி வரைக்கும் வாழாவெட்டியாவே இருப்போம் மொமென்ட்===========10 தூய்மையான புதுச்சேரி என்ற இலக்கை அடைய கிரண்பேடி புதிய அறிவிப்பு # டாஸ்மாக்ல டெய்லி குளிச்சவங்களுக்கு மட்டும் சரக்கு சப்ளையா?


===============

11 கடனைக் கட்டத் தவறும் தொழிலதிபர்களுக்கு அருண் ஜேட்லி கடும் எச்சரிக்கை! # பணக்காரன்னா வெறும் வாய்ல முழம் போடுங்க, சலாம் போடுங்க

==============

12 கோடம்பாக்கத்தில் வழக்கறிஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை # சினிமா ஷூட்டிங்க்னு நினைச்சு அசால்ட்டா இருந்துட்டாங்க போல

============

13 வங்கிக் கடன் மோசடி செய்தவர்கள் நிம்மதியாக உறங்க முடியாது: அருண் ஜெட்லி.# கடன் கொடுத்தவர் தான் தூக்கம் வராம தவிப்பார்


================

14 வங்கிக் கடன் மோசடி செய்தவர்கள் நிம்மதியாக உறங்க முடியாது் ஜெட்லி.# மல்லைய்யா டெய்லி 8 மணி நேரம் தூங்கறாராம்.பேங்க் மேனேஜர்சுக்குதான் பிரச்ன்


===================

15 6 ஆண்டுகளில் தெருநாய்களை கட்டுப்படுத்த ரூ.20 கோடி செலவு
# கண்ட கண்ட.நாய்ங்க எல்லாம் மக்கள் வரிப்பணத்தை வீண் பண்ணுதுங்க


================

16 சென்னிமலை மடத்தில் 8 முகம் சிவன் சிலை மீட்பு: மடாதிபதியிடம் போலீசார் விசாரணை # மடாதிபதிக்கு அஷ்டமத்தில் சனி


==================

17 இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக உலக வங்கி அறிவிப்பு: # 7000 கொடி மல்லய்யா அபேஸ் பண்ணியுமா?


================


18 தேவையில்லாமல் என் பெயரைப் பயன்படுத்தினால்.. இளங்கோவனுக்கு அன்புமணி எச்சரிக்கை # எச்சரிக்கை மணி அடித்தார் அன்புமணி

=================

19 ம.ந.கூ- தேமுதிக- தமாகா கூட்டணி உடைகிறது.விரைவில் விஜயகாந்த், வாசன் அறிவிப்பு # தென்னந்தோப்பில் முரசு கொட்டி அறிவிக்கப்படும்

==============

20 நான் விவசாயம் செய்ய போகிறேன்: விஷால்#லட்சுமிமேனன் ,வரலட்சுமி கூட கடலை போடப்போறேன் என அர்த்தம் கொள்க்


==============

0 comments: