Saturday, August 06, 2016

டியர்.உன் கல்யாணப்பரிசா 100 லிட்டர் நல்லெண்ணெய் தர்றேன்

டியர்.உன் கல்யாணப்பரிசா 100 லிட்டர் நல்லெண்ணெய் தர்றேன்

தாங்க்ஸ் செல்லம்.ஆயில் உள்ளவரை உங்களை மறக்க மாட்டேன்

===============

2 மிஸ்! உங்க இதயத்தின் ஓரத்தில் எனக்காக சின்னதா ஒரு இடம் ஒதுக்க முடியாதா?

நான் என்ன தியேட்டரா? கார்னர் சீட் தர

================

3 சார்.உங்க படைப்பு ஏற்கனவே.வாட்சப்ல வந்திருக்குனு சொல்றாங்களே?

ஆமா.என் பொண்ணு போன வாரம் தான் வாட்சப் டவுன்லோடுச்சு

==================

4 சார்.ஒவ்வொரு வரி எழுதுனதும் ஏன் ஸ்கெட்ச் பேனா வால அண்டர்லைன் பண்றீங்க?

என் எழுத்தை.அழகுபடுத்தறேன்


================

5 டியர்.எதுக்காக எங்கப்பா கிட்டே 10 லட்சம் ரூபா கடன் வாங்குனீங்க?
டெய்லி.1000 ரூபா ட்யூ கட்றேன்னு.இதான் சாக்கு.உன்னை மீட் பண்ணிக்கலாமில்ல?


==================

6 வழிபாட்டை நான் விரும்புவதில்லை.

எனக்கு பிடிக்கும்.வாங்கடா வாங்க என் வண்டிக்குப்பின்னால -ஒரு வழி பாட்டு


=================

7 என்னம்மா ?நாவல் பழம் ரொம்ப சின்னதா இருக்கு?

இது குறு நாவல் பழம் ங்க


===============

8 கோவை டூ காரமடை எந்த பஸ் போகும்?
102 ஏ.
அடடா.எனக்கு.16 வயசுதான் ஆகுது.எதுனா யூ பஸ் இருக்கா?==============

9 ஏய் மிஸ்டர்.எதுக்காக என் ட்வீட்ஸ் எல்லாத்தையும் லைக் பண்றீங்க?

இது என்ன பிரமாதம்?உன் தங்கை அக்கா னு பேமிலில எல்லாரையும் லைக் பண்றேன்


==============

10 சார்.ரஜினி யோட பில்லா அஜித் தோட பில்லா 2 க்கும் பல.வருசங்கள் இடைவெளி இருந்தது.அதுக்குள்ள சிம்புவோட பில்லாவா?

ரிலீஸ் ஆகறப்ப டைம் பாருங்க


===============


11 சார்.மேகி 10 ரூபச் பாக்கெட் இப்ப 12 ரூபாயாமே? ஏன்?

சாதகமா தீர்ப்பு சொல்லி தடையை விலக்கின குமாரசாமிம்க்கு கமிசன்


==========
12 கொலை நடந்த இடத்தில எதுனா தடயம் கிடைச்சுதா?
"தடம்" தான் கிடைச்சுது.கொலையாளி ஒரு இலக்கிய ரசிகனா இருக்கலாம்்


==================

13 எந்த நாவல் டைட்டில் சொன்னாலும் ரைட்டர் பேரை சொல்லிடுவேன்
எல்லாம் எனக்கு அத்துபடி.
அது படிச்சு வெச்சிருப்பீங்க.கதைல இருந்து டவுட் கேட்கறேன்


==============

14 இளைய சூப்பர்.ஸ்டார் பட்டம் பற்றி என்ன நினைக்கறீங்க?
தொ"டரியல்"=================

15 ஜோசியரே! தனுசு ராசிக்கு என்ன பலா பலன்?
வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக்குவாக.பட்டம் கொடுத்து மட்டம் தட்டுவாக

=================

16 ஒரு குரூப் அல்டிமேட் சொல்லுது அப்படினா அதுக்கு பேர் என்னங்க"?

சூப்பர்.ஸ்டார் ஸ்டாப்பிங்க் குக்கு முந்தின ஸ்டாப்.


==================

17 சார்.உங்க படம் ரிலீஸ் ஆன 8 தியேட்டர் மூடிட்டாங்களாமே?
நானே மூடு அவுட்ல இருக்கேன்.கடுப்பைக்கிளப்பாதீங்க

================

18 சார்.கமல் ரசிகரான நீங்க எப்படி அரசியல்ல மட்டும் ரசனை இப்டி ஆகிடுச்சு?
சிம்ப்பிள் லாஜிக்.அவர் மாதிரியே இவரும் நல்ல நடிகர்.


====================

19 யுவர் ஆனர்.வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்தா தவறில்லை தானே?
ஆமா.
இந்த கருத்து சொல்லி நீங்க எவ்ளவ் சொத்து சேர்த்தீங்க?


===============

20 சார்.நீங்க 100 படம் நடிச்சாச்சா?
நோ
நோ.
எல்லா சென்ட்டர்லயும் ஹிட் ஆகுதா?
அப்புறம் எதை வெச்சு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம்?
மினிமம் கேரண்டி வசூல் இருக்கா?
நோ

==================

0 comments: