Wednesday, August 17, 2016

பிஜேபி அலையன்ஸ் வித் ரிலையன்ஸ்??

மது நோயாளிகளை மீட்க அரசு அறிவித்திருந்த இலவச எண் செயல்படவில்லை : நீதிபதி அதிருப்தி ! # நெம்பரும் பிளாட் ஆகிடுச்சா?


============2 வலுவான எதிர்க்கட்சியில் 2 பேருக்கு மட்டும்தான் பேச அனுமதியா?- ஸ்டாலின் காட்டம் # இரட்டை இலை ஆட்சி அல்லவா? அதான் சிம்பாலிக்கா 2


====================

===================


4  

மக்கள் நலக் கூட்டணி இன்னும் வலுப்பெறும்:  வைகோ  # கட்சியை விட்டு நூறு நூறு பேரா டெய்லி கிளம்பிட்டு இருக்காங்க , எப்டி வலுப்பெறும்?=================

அதிமுக செயற்குழு போட்ட 14 தீர்மானங்கள்.. பெரும்பாலானாவை "அம்மா"வைப் புகழ்ந்து! "மானம் கப்பல் ஏறாம பார்த்துக்குங்க"


==============6 கட்சி, குடும்பத்துக்குள் குழப்பம் இருப்பதாக கற்பனை செய்ய வேண்டாம்: ஸ்டாலின் # அண்ணன் தம்பி சண்டை பொய்.அப்பா வுக்கு மனசு வராதது பொய் ?==========7 மக்கள் நல கூட்டணிக்கு குட்பை.. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக! # முரசு கொட்டி வரவேற்பார்கள் தொண்டர்கள்
===========
8 ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை 2-வது முறையாக வகிக்க விரும்பவில்லை- ரகுராம் ராஜன்"# சுப்ரமணிய "சாமி போட்ட முடிச்சு?"
============
9 தி.மு.க.,வை அழிப்பதற்காகவே கட்சி நடத்துகிறார் வைகோ-வேளச்சேரி மணிமாறன்:# இதைகண்டுபிடிக்க இத்தனை வருசம் ஆச்சா?இப்போதான் MONEY கை மாறுச்சா?==================


10 இந்தியாவில் விளைச்சல் குறைவாக இருப்பதால், பருப்பு விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது-

 தமிழிசை # விளை நிலங்களை விலை நிலங்களாக பிளாட் ஆக்கி விற்றால் விளைச்சல் எங்கே இருந்து கிடைக்கும்?


=====================

11 கட்சித் தொண்டர்கள் மிகவும் உறுதியாகவும், முன்பை விட இன்னும் வேகமாகவும் செயல்படுகின்றனர்-வை.கோ # கட்சி மாறுவதில் தானே?


====================

12 சட்டசபை தேர்தல்... உள்ளடி வேலைகள், துரோகத்தை சகிக்க முடியவில்லை: செயற்குழுவில் ஜெ. ஆவேசம் # அதிமுக விலும் ஒரு அழகிரி இருக்காரா?


==============

13 பழ.கருப்பையா மீண்டும் திமுகவில் இணையனும்- கருணாநிதி # தலைவருக்கு எப்பவும் பழம் மேல ஒரு கண்.பழம் பெரும் தலைவர் பழம் பெறும் தலைவர் ஆக ஆசை


=============

14 ரூ. 2000 கோடி போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கினார் நடிகை மம்தா குல்கர்னி #,மம்தா ஜெயிலுக்குள் கர் இனி

=================


15 மோடியின் கல்வித் தகுதி விவரங்களை அளிக்க டெல்லி பல்கலைக் கழகம் மறுப்பு # இருந்தா தர மாட்டோமா?


==============

16 தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று முதல் மூடல்-ஜெ # மகிழ்ச்சி


===============

17 கடன் கட்டாதவர்களின் கணக்கில் இருக்கும் பணத்தை வங்கியே எடுத்துக்கொள்ளலாம்-கோர்ட் # ஏமாத்த நினைப்பவன் ஜீரோ பேலன்ஸ் தான் வெச்சிருப்பான்


==============

18 பேனர்களில் நிர்வாகிகளின் படங்கள் வேண்டாம்" -OPS # தேர்தல் தான் முடிஞ்சிடுச்சே.இனி எம் ஜி ஆர் படம் கூட வேண்டாம்


===============


19 உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட பாஜக ஆயத்தம்: தமிழிசை # இப்போ வேணா கேப்டன் கூட சேர வாய்ப்பு இருக்கு


===============

20 மத்திய அரசின் முக்கிய முடிவுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் செல்வாக்கு செலுத்தியதாக சர்ச்சை
# பிஜேபி அலையன்ஸ் வித் ரிலையன்ஸ்??

=============

0 comments: