Monday, August 29, 2016

இவங்க எல்லாம் அமைதிப்பூங்கா ல கஞ்சா அடிச்ட்டு இருந்தானுங்களா?

வாட்ஸ்அப் புரொபைல் போட்டோவை திருடி மார்பிங் பேஸ்புக்கில் ஆபாசபடம் வெளியானது பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை க்ரைம் போலீசின் மெத்தனம்

=============

2 மல்லையாவின் கேஸ் சிலிண்டர்் மானியம் ரத்து - பாஜக அதிரடி # அட அதிபுத்திசாலிகளா!7000 கோடியை பறி கொடுத்துட்டு 700 ரூ வ முடக்கிட்டது அதிரடியாம்

===============

3 தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி பணம் என்பதை மாற்ற வேண்டும்-வைகோ சக்தியே நீங்கதானாமே?


==============

4 விஜய மல்லையாவின் ரேஷன்கார்டு ரத்து செய்யபட்டுள்ளது - மத்திய அரசு# பாஸ்போர்ட்டை முடக்கம் பண்ணாம கோட்டை விட்டுட்டு இந்த வெட்டி வேலை எதுக்கு

===========

5 தமிழக காங். தலைவராக பீட்டர் அல்போன்ஸை நியமிக்க கோரிக்கை # இது வரை வந்தவர் இனி வரப்போறவர் பீட் பண்ண முடியாதபடி செயல்பட வாழ்த்து


============

6 மாற்று கட்சியை சேர்ந்த பல ஆயிரம் பேர், ஜெ் முன்னிலையில் இன்று அ.இ.அ.தி.மு.க.வில் இணைகின்றனர். # ஜெயிச்ச பக்கம் சேரும் சந்தர்ப்பவாதிகள்


==========

7 வினுப்பிரியா தற்கொலை: ஃபேஸ்புக்கில் ஆபாச படத்தை அழிக்க போலீசுக்கு, ரூ. 2000 லஞ்சம் # அந்த போலீசை டிஸ்மிஸ் பண்ணி 5 வருசமாவது ஜெயில்ல போடனும்

============

8 வசூல் புகாரில் குஷ்பு சிக்கியதால்தான் இளங்கோவன் பதவி விலகினாரா?.. புது பரபரப்பு!# அதுக்கு சுந்தர் சி யே கவலைப்படலை

============

9 சென்னையில் 608 குண்டர்கள் கைது! # இவங்க எல்லாம் அமைதிப்பூங்கா ல கஞ்சா அடிச்ட்டு இருந்தானுங்களா?

===========

10 மின்வாரிய வேலைக்கு ரூ.10 லட்சம் லஞ்சம்: -செய்தி # மேடம்.ஓவர் லஞ்சமா இருக்கே?
மின் மிகை மாநிலம்னு அப்பவே சொன்னேனே?

===========
11 காற்று மாசுபடுவதால், ஆண்டுக்கு 65 லட்சம் பேர் மரணம்: அதிர்ச்சி தகவல் #2 ஸ்ட்ரோக் டூ வீலர் தடை செய்யப்படனும்.


===========

12 சென்னை-யில் இன்று மாவட்ட செயலாளர்களிடம் விஜயகாந்த் உருக்கம்: கட்சியை விட்டு யாரும் வெளியேற வேண்டாம் # தோல்வி தான் ஒருவரை பக்குவப்படுத்தும்

============

13 'தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்..!'- வினுப்பிரியா பெற்றோரிடம் கைகூப்பிய சேலம் எஸ்.பி # உலகிற்கு தெரிந்ததால் மன்னிப்பு கேட்கறார், இல்லைன்னா லஞ்சம் கேட்டிருப்பார்

==================
14 சிறந்த ஆட்சியை வழங்குவதே லட்சியம்: ஜெ பேச்சு # டாஸ்மாக் டார்கெட் ,சென்னை கொலை,சேலம் தற்கொலை தெரிவித்து விடும் ஆட்சியின் லட்சணம்
============
15  அமித் ஷா: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான, 10 ஆண்டு கால ஆட்சியில், 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது # அமித்”ஷாக்கிங்” நியூஸ்


============


16 பரம்பரை ஆட்சியை ஏற்படுத்தி  நாடு முழுவதும் ஊழல் மலிந்து கிடக்க காங்கிரசே காரணம்.-அருண் ஜெட்லி: # நம்ம ஆட்சில ஊழல் காஸ்ட்லி-னு பேர் எடுக்காம இருந்தா சரி


==================

17 அரவிந்த் சுப்ரமணியன் :இந்தியாவில் ஓட்டளிக்க தகுதி உடையவர்களில், வரி செலுத்துபவர்கள், 4 சதவீதம் மட்டுமே. ஆனால், நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளை பார்க்கும் போது, 23 சதவீதமாக இருக்க வேண்டும் #    கால்குலேசன்  எல்லாம்  நல்லா தான் போடறீங்க, ஆனா வசூலிக்காம கோட்டை விட்றீங்க

================

18 சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு அறிய பொதுமக்கள் ஆவல்:கருணாநிதி # அப்டியே அந்த 2 ஜி வழக்கு ஊழல், கலைஞர் டிவி 200 கோடி ஊழல் வழக்கு தீர்ப்பையும் சேர்த்துக்குங்க தலைவா


=================

19  மக்கள் நலக் கூட்டணியில் இருந்து, தே.மு.தி.க., வெளியேறியது மகிழ்ச்சியளிக்கிறது-தமிழிசை  # பிஜேபி உடன் கூட்டணிக்கு இசைந்திடுவார்னு தமிழிசை நினைக்கறார் போல


==============

20 


======================

0 comments: