Friday, August 12, 2016

கே பாக்யராஜ் படத்தில் டபுள் மீனிங் டயலாக் இருக்கு னு எஸ் ஜே சூர்யா புகார்

திருமா ஜாதி அரசியலை விட வேண்டும் - ராமதாஸ் # கே பாக்யராஜ் படத்தில் டபுள் மீனிங் டயலாக் இருக்கு னு எஸ் ஜே சூர்யா புகார் சொல்ற மாதிரி இருக்கு


===============2 உள்ளாட்சி தேர்தலில் வெற்றி யை நிர்ணயிக்கும் அளவுக்கு, த.மா.கா.,வின் எதிர்கால செயல்பாடு இருக்கும்.- வாசன்: # அப்போ ஆட்டத்துக்கே வர்லைங்கறீங்களா?===============================
3   தே.மு.தி.க.,வில் இருந்து பல மாவட்ட செயலர்கள். விரைவில் எங்களோடு ஐக்கியமாக உள்ளனர்-  சந்திரகுமார்: # மெயின் ஃபிலிமே ரிலீஸ் ஆகி அவுட் ஆன பின்  ட்ரெய் ல்ர்கள்   எதுக்கு?.-====================4  கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்தவர்கள், வெற்றி . பணம் இல்லாதவர்கள், தோல்வி

.-பிரேமலதா:  #  பர்சுக்கு , இலவசப்பரிசுக்கு முன் முரசு எடுபடலை?


==================
தமிழர்களின் உணர்வுகளை ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும்.-அன்புமணி ராமதாஸ்: # புரிஞ்சுதானே ஒரு ஓட்டுக்கு 250  ரூபா கொடுத்தாரு?=====================6  உள்ளாட்சி தேர்தலை, தே.மு.தி.க., -- த.மா.கா., -- மக்கள் நலக் கூட்டணி தைரியமாக சந்திக்கும்.-திருமாவளவன்:   # மனசில் தைரியமா இருந்தா போதுமா? வாக்கு வங்கி வீரியமா இல்லையே?=====================

தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதால், நாங்கள் சோர்ந்து விடவில்லை. நாங்கள் எங்கள் பாதையில் தனித்தே செல்வோம்.-அன்புமணி  # எங்கே செல்லும் இந்தப்பாதை  யார் அறிவாரோ?


=====================


நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம், . அகிலேஷ் யாதவ் அரசால் இந்த மாநிலத்தை நிர்வகிக்க முடியவில்லை-அமித் ஷா # அகி”LAZY யாதவ்?


================================


ஜெ அழைத்தால், உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைப்போம்.-தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் # கலைஞர் அழைத்தால் திமுக வுடன்?


======================

10 சமஸ்கிருதத்தை எதிர்த்து கிளர்ச்சி: கருணாநிதி எச்சரிக்கை # எங்கே தலைவரே, இப்பவெல்லாம் டிராமா எடுபடுவதே இல்லை

==========================

11 மோடியை முதல்வர் ஜெ தில்லியில் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசுகிறார்.# என்ன கண்டெண்ட்? கண்ட்டெய்னர் தான்


==================


12

அதிசய சொம்பு தருவதாக ஒரு லட்ச ரூபாய் மோசடி:5 பேர் கைது @ தருமபுரி # சொம்பு கொடுத்த ஆளுக்கு தர்ம அடி கொடுத்திருப்பாங்களே?


====

13  பா.ஜனதா தொண்டர்களிடம் இருக்க வேண்டிய 7 குணநலன்கள்’’ -் மோடி 14 லோகத்தில் தேடினாலும் கிடைக்காது


==================

14 ஜெ வின் டெல்லி பயணத்தால் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை -EVKS.#,இப்டி சொல்வதால் உங்களுக்கும் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை


==============


15 விசாரணை நடத்தாமலே குற்றவாளியாக்கப்பட்டுள்ளேன்: விஜய் மல்லையா அதிருப்தி # அண்ணனுக்கு.விசாரணை படத்தைப்போட்டுக்காட்டுங்க.ஒரு பயம் வரட்டும்

============

16 டெல்லியில் 5 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.600 கோடி அபராதம் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க மறுத்ததால்# FINE.பை த பை FINE கட்டிட்டாங்களா?


==============

17 கணவருக்கு தோஷம் இருப்பதால், பரிகாரம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி 160 பவுன் நகை மோசடி # தோஷம் போகலை.சந்தோஷம் தான் போச்சு

=============

18குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 61 பேர் மீது வழக்கு # டாஸ்மாக் ல தண்ணி அடிச்சவன் வீட்டுக்குப்போறது தப்பா?


============

19 சார்லி ரீமேக்கில் மாதவன்... விஜய் இயக்குகிறார்! # ஏ சென்ட்டர் பிலிம்.எடுபடுவது சிரமம்


==============

20 பொது இடத்தில் சிகரெட் பிடித்தால் வழக்கு பதிவு செய்க: அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு # போலீஸ்க்கு கொண்டாட்டம்.தம் பார்ட்டிகளுக்கு திண்டாட்டம்

================

0 comments: