Thursday, August 11, 2016

சிவன் சொத்து தொட்டவன் குலநாசம் என்பதால் நயன் தாரா வை இனி யாரும் லவ்வ மாட்டாங்க

1  டியர், சாகறதுக்கு முன் என் கவிதையை வாசிக்கறேன், கேட்டுட்டு சாகறீங்களா?


வேணாம், போற உயிரு நிம்மதியா போகட்டு மே, ஜூன், ஜூலை


============

2 டியர், காதலிக்கும்போது சொர்க்கம் தெரியும்பாங்க, என் கண்ணுக்கு தெரியலையே?


காங்கேயம் வந்து காதலி, சொர்க்கம் தியெட்டரே தெரியும்===============

3 புளியமரத்தின் இலை..பூ..பிஞ்சி..அதன் காய்..பழம் எல்லாம் சாப்பிட்டிருக்கேன்

அப்போ ஒரு புளிய மரத்தை ஸ்வாஹா செய்த கதை எழுதுவீங்களா?

=========


4 கடல் கன்னி யோட.டீன் ஏஜ் லவ் வை குறும்படம எடுக்கறேன்.

டைட்டில் கடல் கன்னிப்பருவத்திலே?

==============

5 இனி ஜடைக்கு ரிப்பன் கட்டறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்

ஓஹோ.ரிப் ( RIP) டூ ரிப்பன்

===============

6 க்டல்லயே குளிச்சுட்டு இருக்கியே.கரைக்குப்போகும் ஐடியாவே இல்லையா?

கடல் கன்னி = கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரி ஆகனும்


=================

7 டாஸ்மாக் நடத்துவது யாரு?

அரசு
டாஸ்மாக் வந்து தண்ணி அடிச்சவன்.வீட்டுக்கு திரும்பிப்போறப்ப ட்ரங்க்கன் டிரைவிங்னு கேஸ் போட்டா என்ன நியாயம்?


=============

8 டியர்.தாழம்பூ வாசத்துக்கு பாம்பு வருமாமே?

அது தெரியல.மல்லிகைப்பூ வாசத்துக்கு மூடு வரும்


=============

9 இலக்கியவாதியா இருந்ததால மாப்ளைக்கு முதல் இரவே நடக்கலையா?ஏன்?

பொண்ணு ரூம் க்கு வந்ததும் விகடன் மார்க் 38 ன்னாராம்.கோவிச்சுகிச்சு

================

10 ரேஷன் கடைல நியாய விலைக்கடை ன்னு போர்டு இருக்கு

ஆமா
அப்போ மத்த கடைல எல்லாம் அநியாய விலைன்னு அரசே ஒத்துக்குதா?

==============

11 மக்கள் நல்லாருக்கனும்னு மக்களுக்கே அக்கறை இல்லை.
எப்டி?
மக்கள் நலக்கூட்டணிக்கு வரவேற்பே இல்லையே?

=============

12 சார்.500 ரூபாய்க்கு சில்லறை கிடைக்குமா?

ஸாரி.சாதா அறை யே 750 ரூபா.சில் அறை (ஏஸி ரூம்) 1500 ரூபா ஆகும்


==============

13 டியர்.நீங்க கடிக்கறதைக்குறைச்சுக்கிட்டா கல்யாணத்துக்கு ஓக்கே.
சரி.கவ்வலாமில்ல?


=================

14 ஜட்ஜ் = பீட்சா ஆர்டர் பண்ணி 10 மாசம் கழிச்சுதான் டெலிவரி பண்ணீங்களா?

கைதி = தங்களுக்குதெரியாத சட்டம் ஒன்றும் இல்லை.டெலிவரின்னாலே.10 மாசம்தா

=================

15 சார்.நீங்க உங்க மனசாட்சிக்கு பய்ப்படுவீங்களா?

நோ.அக்னி சாட்சியா தாலி கட்ன் சம்சாரத்துக்கு பயப்படுவேன்

==============

16 சிவன் சொத்து தொட்டவன் குலநாசம் என்பதால் நயன் தாரா வை இனி யாரும் லவ்வ மாட்டாங்க
எப்டி?
விக்னேஷ் சிவன் சொத்து ஆகிட்டார் இல்ல?


================

17 50 வருசமா இந்த வீட்டில் பூரி சுட்டு வித்துட்டிருக்கோம்

ஓஹோ.பூரி வீகச்சொத்து ன்னு சொல்ங்க


=================

18 ஜெ = ஜூன் கடைசில தீர்ப்பு வருது
மோடி =,ம்ம்.,பாத்துக்கலாம்
570 கோடி.,
ஜெ =,நன்றி.சந்திப்பு வெற்றி.அண்ணா நாமம் வாழ்க
,ம்ம் சரி பண்ணிடலாம்.

===============

19 சார்.ரத்த தானம் பண்ணும்போது எவ்ளோ ரத்தம் எடுப்பாங்க?
குடிகாரர் =,2 குவாட்டர் அளவு


===============

20 டாக்டர்.ஒரு யூனிட் இரத்தம் தானம் செய்யும் போது, 650 கலோரிகள் எரிக்கப்படுதாம்
ம் அப்போ வாக்கிங் போகாம டெய்லி தானம் ஓக்கே?


==============

0 comments: