Sunday, August 28, 2016

தலைவரே! அம்மா கணக்கு எடுபடலை

பேச்சு காதலாக மாறுமென்று தெரிய வந்தால் பேச்சை நிறுத்திவிடுங்க


பேச்சு காதலை வளர்க்குமா?இது தெரிஞ்சிருந்தா டெய்லி டிஎம் ல பேசி இருப்பேனே?


===============

2 தலைவரே! அம்மா கணக்கு எடுபடலை.


மிக்க மகிழ்ச்சி
ரொம்ப சந்தோஷப்படாதீங்க.அமலா பால் நடிச்ச படத்தைப்பத்தி சொல்லிட்டிருக்கேன்


==========
3 தலைவரே! மெட்ரோ பட விநியோக உரிமையை எதுக்கு வாங்குனீங்க?


மெட்ரோ ( ரயிலுக்கு)க்கு நாங்கதான் அடித்தளம் அமைத்தோம்னு ஜம்பமா சொல்லிக்கலாமில்ல


=============
4 ஒரு பஞ்சாயத்துத்தலைவியான நீங்க ஒரு மாநில முதல்வரை மேடைல எதுக்கு கிஸ் பண்ணீங்க?


போச்சு.இதுக்கு ஒரு பஞ்சாயத்தா?


=============

5 பிசிக்ஸ் மிஸ் பிந்து மாதவி = மாஸ் க்கு டெபனிசன் சொல்லு


டீச்சர்.சொல்லிடு வேன்.அப்புறம் நம்ம க்ளாஸ் ரூம் ரணகளம் ஆகி ரசிகர் சண்டை மைதானமாகிடும்

===============

6  டியர்.கோயில்ல உன்னைப்பார்த்ததும் என் இதயத்தை தொலைச்ட்டேன்.


கிறிஸ்டீனியா = "சர்ச்" பண்ணி பாருங்க.என் கிட்டே தான் இருக்கும்================

7 என்ன விட அதிக மார்க்

வாங்குனவனுக்கே இன்னும்
வேலை கிடைக்கல
ஓ.2 பேரும் என்ன மார்க்?
எனக்கு 18% அவனுக்கு 20% மார்க்


============

8 தலைவரே! இடைத்தேர்தல் வந்திருக்கு.வாழ்த்துங்க


திருமங்கலம் உண்டாகட்டும்
மக்கள் உன்னை கொண்டாடட்டும்============

9 சார்.இன்னும் படம் ஏதும் கமிட் ஆகலைன்னு சிலர் கிண்டல் பண்றாங்களே?


நான் கமிட் ஆகிட்டா சொன்ன தேதிக்கு எந்தத்தடை யும் இல்லாம ரிலீஸ் ஆகிடும்===========

10 சார்.புதுப்படத்துல உங்க தாடி கெட்டப் சரி இல்லைனு சொல்றாக?


கெட்டப் மாத்தறவங்களுக்கு 1000 கவலை.ஒரே கெட்ட்ப் னா ஒரே கவலை==================

11 கொலைக்கான தடயம் எதுனா கிடைச்சுதா?


சாரி சார்
மாமூல் எங்கே கிடைக்கும்கற. சிந்தனைல இருந்துட்டேன்


=========

12 மாப்ளை ஒரு அறிவு ஜீவி.ஏன் யோசிக்கறே?


ஜீ வி ன்னாலே பயமா இருக்கு டாடி.எதுனா கேள்வி கேட்டா பிளாக் பண்ணிடுவாராம்===========

13 ஓனரை விட லேபருக்கு ஒரு சிறப்பு உண்டு.


என்ன?
"ழ்"கரம்"ள்"கரம் "ல்"கரம் மூன்றும் வரும் வார்த்தை தொழிலாளி


============


14 இந்த செப்புத்தகடு உங்க வீட்ல இருந்தா செல்வம் கொழிக்கும்


எவ்ளோ?
5000 ரூபா
இதை ஏன் விற்கறீங்க?உங்க வீட்லயே வெச்சா செல்வம் கொழிக்குமில்ல?


============

15 விநாயகருக்கு கொழுக்கட்டை படையல் போடுவது போல் முருகருக்கு எதை படைக்கலாம்?


சர்க்கரை"வள்ளி"க்கிழங்கு==================

16 மீராவின் கூந்தலில் சூடி இருக்கும் மல்லிகைப்பூ நான் வைத்து விட்டது என்பதை கண்ணன் எப்டி சொல்வார் ?


மீரா ஜாஸ்"MINE"


===============

17 சார்.உங்க ஹோட்டலுக்கு திராவிட பவன் னு ஏன் பேர் வெச்சிருக்கீங்க?

ஆரிய பவனுக்கு எதிரே இருப்பதால்

=============

18 ஜட்ஜ் =7000 கோடி ஏமாத்துன அந்த கேடியை பிடிச்ட்டீங்களா?

நோ யுவர் ஆனர்.அவனோட ரேசன் கார்டை ஒளிச்சு வெச்சுட்டோம்.எப்டி நம்ம புத்திசாலித்தனம்?

============

19 காலேஜுக்கு எல்லாரும் GUN டைம்க்கு வந்துடறாங்க.நீ மட்டும் ஏன் லேட்?

விஜய் ரசிகர்கள் வேணா GUN (துப்பாக்கி)டைம் க்கு வரலாம்


=============

20 டாக்டர். கிட்டத்தட்ட 1 மணி நேரமா விக்கல் நிக்கமாட்டிது

தினமும் வெறும் வயிற்றில் 1 லிட்டர் நீர் அருந்தி வந்தால் வாழ்நாள் பூரா விக்கல் வராது

================

0 comments: