Friday, August 26, 2016

சார் , நீங்க பேசிக்கலா ஒரு மியூசிக் கம்போசர் தானே?

டியர், இன்னைல இருந்து நான் ஸ்மார்ட் கேர்ள்

 இன்னைக்குதானே ஸ்மார்ட் சிட்டி பிராஜக்டே ஆரம்பிச்சிருக்காங்க? முடியறதுக்குள்ளே நீ பாட்டி ஆகிடுவே #கோவை பாவை


================

2 யோகா டீச்சர் =ஷில்பா ஷெட்டியோட யோகா நிகழ்ச்சில யோகாவோட சிறப்புகள் தெரிஞ்சுதா?

ஜொள் மாணவன் = நல்லா தெரிஞ்சிது டீச்சர்


==================


அவன் ஒரு டைப்பான ஆளு.

எப்டி?

பொண்ணுங்களை ரொமான்டிக்கா பார்ப்பான்.பசங்களை "ரெமோ"ன்டிக்கா பார்ப்பான்

==============

4 டெய்லி 3 டைம்போன் பண்ணி சாப்ட்டாச்சா?னு கேட்டா சந்தோசப்படுவேன்.

லூசே.அதுக்கு நைட் ஒரு டைம் போன் பண்ணி 3,வேளையும்.சாப்ட்டாச்சா?கேட்டுடலாமே?

===========

5 டியர்.என்னை லவ் பண்ணிட்டு பின் மறந்துட மாட்டீங்களே?

ச்சே.ச்சே.நான் யாரை லவ் பண்ணாலும் டைரில நோட் பண்ணிடுவேன்

============

6 கைதி.=,யுவர் ஆனர்.நான் கொலையாளி ஆக சினிமா தான் காரணம்

ஜட்ஜ்.= ஓஹோ.அப்போ ரமணா,அந்நியன்,இந்தியன் பட ஹீரோ போல் உன்னை போட்டுத்தள்ளிடறேன்

===========

7 கமிஷனர் =,சாரி சார்.ரயில்வே.ஸ்டேஷன் ல கொலை நடக்கும்னு எதிர்பார்க்கல

MP =,அடுத்த கொலை போலீஸ் ஸ்டேஷன்ல.நடந்தாதான் அலர்ட்டா இருப்பீங்க போல

===============

8 சாப்பாடு எவ்ளோ?

ஏஸி ஹால்ல சாப்ட்டா.100 ரூ.பேமிலி ரூம் ல சாப்ட்டா.80 ரூபா.சாதா ஹால் ல சாப்ட்டா 60 ரூபா.

வாசல்ல நின்னு சாப்ட்டா 40 ரூபாயா?

=============

9 அடுத்த கொலை ஏதோ ஒரு பார்க் ல பண்ணலாம்னு இருக்கேன்

ஏன்?

அப்பவாவது தமிழகம் அமைதிப்பூங்கா வா இருக்குனு சொல்லாம இருக்காங்களா பார்ப்பம்

==============

10 நாங்க ஆட்சிக்கு வந்தா பெண்களுக்கு டூ வீலர் தருவோம்.

முதல்ல செக்யூரிட்டி.பின்னே ஸ்கூட்டி

=============

11 தமிழ்.நாட்டின் தலை நகரம் எது?

அது சரியா தெரியல.ஆனா அடிக்கடி கொலை நடக்கும் நகரம் சென்னை

=============

12 கொலையாளியை பிடிச்ட்டீங்களா?

இன்னும் இல்லை.யாரும் எந்தக்கேள்வியும் கேட்டுடக்கூடாதுன்னு 150 ரவுடிகளை கைது பண்ணி இருக்கோம்

==============

13 என்ன சார்?இப்போ தான கல்யாணம் பண்ணறீங்களா?,நான் போன மாசமே பண்ணிட்டேன்

எனக்கு பொண்ணு கிடைக்கும்போதுதான் நான் மேரேஜ் பண்ண முடியும்?்

==============

14 சார்.கொலையாளியைப்பத்தி எதுனா க்ளூ கிடைச்சுதா?

அவன் ஒரு "ஆம்பள"யாத்தான் இருக்கும்.

நல்ல வேளை. விஷால் னு சொல்லலை

===============

15 ட்விட்டர்களில்/ fb ல மொள்ள மாரியை க்கண்டுபிடிக்கறது ஈசி.

எப்டி?

டாப் 5 பாலோயர்ஸ் லிஸ்ட் ல.5 பேரும் கல்யாணமான பொண்ணுங்க பேரா.வரும்

===============

16 நான் யாருக்குமே பயப்பட மாட்டேன்

 அப்டியா? அப்புறம் ஏன் இத்தனை பேரை பிளாக் பண்ணி வெச்சிருக்கீங்க?

எல்லாம் ஒரு பயம் தான்

======================

17  கொலையாளியைப்பத்தி எதுனா தகவல் கிடைச்சுதா?

 இன்னும் இல்லை சார்

 என்ன தான் தெரிஞ்சுது?

 இப்போ தான் கொலை செய்யப்பட்ட பொண்ணோட ஜாதி தெரிஞ்சுது


=================


18 டாடி, நான் ஒருத்தரை லவ் பண்றேன்

ஓஹோ, பையன் எப்டி?

அவன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

ஓஹோ, 3 பேரா? அதுல யாரோ ஒருத்தனை மட்டும் கூட்டிட்டு வா

===============

19 சார் , நீங்க பேசிக்கலா ஒரு மியூசிக் கம்போசர் தானே? எதுக்கு ஒரு ஹீரோ க்கு ஜிங்க் ஜக் அடிக்கறீங்க?

ஜால்ரா வும் இசை தானே?

=============

20 உங்க வாழ்க்கை ”பிரகாசமா”  ஒளிரப்போகுது

 அடப்பாவி, வாழ்த்தச்சொன்னா இப்டி சாபம் தர்றே? எல்லார் கிட்டேயும் திட்டு வாங்கச்சொல்றியா?


=====================

0 comments: