Thursday, September 01, 2016

சரவணபவனில் தோசை ஆர்டர் பண்ணக்கூட ஹிந்தி தெரியணும்?

1  சுவாதியை கொலை செய்த குற்றவாளியை நெருங்கிவிட்டோம், விரைவி ல் கைது செய்வோம் - காவல்துறை # கோர்ட் கொடுத்த 2 நாள் கெடு முடிஞ்சு 5 நாள் ஆச்சு

==================

2

இணைய குற்றங்கள் குறித்து புகார் அளிக்க எளிதான வழிமுறை தேவை:தமிழிசை # சைபர் க்ரைம் பிரிவுக்கு பெண் அதிகாரிகளை நியமிச்சா பெண்கள் புகார் அளிக்க வசதி


======================


தேமுதிக, மதிமுக, தமாகாவைச் சேர்ந்த நிர்வாகிகள், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர் # நம்ம கட்சி ஒரு கதம்பம் மாதிரி, பல கட்சி ஆளுங்களை இங்கே பார்க்கலாம்

====================


உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி : டி. ராஜேந்தர் # அரசியல் உலகில் அஞ்சாதவன் அசராதவன் அடங்காதவன் இவரு தான்


===============5 காதலர்களை மிரட்டி பணம் பறித்தவர்களை மடக்கி பிடித்தனர் போலீசார்.# அவங்க மிரட்டி வாங்குனதை இவங்க மிரட்டி வாங்கிட்டாங்களா?==============6 பிரியங்கா களமிறங்குகிறார்; காங்கிரஸ் கட்சியின் உ.பி. பிரசார குழு தலைவராகிறார்..# மோடி செல்வாக்குக்கு சரியான மாற்று இந்த லேடி==============7 உம்மன்சாண்டி ஆதரவாளர்கள் என்னை மிரட்டி வருகிறார்கள்-் சரிதாநாயர் # அடிக்கிற கைதான் அணைக்கும்.அணைத்த கை தான் அடிக்கும்
==============8 தமிழகத்தில் ஒரு பெண் முதல்வராக இருந்தும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. -TR # ஆண் முதல்வரா இருந்தப்போ ஆண்களுக்குப்பாதுகாப்பு இல்லையா?============9 சரவணபவனில் தோசை ஆர்டர் பண்ணகூட ஹிந்தி தெரியணும்:s.v.sekar

# நாங்க கையேந்தி பவன் ல இட்லி சாப்டுட்டுப்போறோம்.என்ன இப்போ?

============


10 கொலைகளைத் தடுக்க இளைஞர் படை! உருவாக்குகிறார் சரத்குமார் # இதுக்கு சட்டத்தில் இடமில்லையே.நாட்டாமை சார்

==============


11 மதுரையில் அரசுபேருந்தை காணவில்லை. கடத்தபட்டதா என விசாரணை..# அருகாமை டாஸ்மாக் வாசலில் தேடவும்

============

12 மாயமாகும் 'கருப்புப் பணம்'.. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 33% குறைந்தது..! மர்மம் துலங்குது.பணம் இங்கேதான் புழங்குது

============

13

13

திமுகவின் தோல்விக்கு எனது ராஜதந்திரமே காரணம் என கூறவில்லை: வைகோ விளக்கம் # அதிமுக வின் வெற்றிக்கு இவர் தான் காரணம்னு தான் சொன்னாராமா?2ம் 1 தான்================

14  

பலாத்கார பாதிப்பு பெண்களுடன் செல்ஃபி: ராஜஸ்தான் மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி விலகல் # செல்ஃபி எடுப்பது உடல் ஆரோக்யத்துக்கு,பதவிக்கு,பேட்டரி 3 க்கும் கேடு தரும்

======================================


16  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் தரிசனம் செய்ய யாதவருக்கு மீண்டும் வாய்ப்பு # வரிசையில் நிற்க முடி”யாதவர்க்கும்”   வயதானவர்க்கும் முதல் தரிசன வாய்ப்பளிக்கவும்


==================


17 கடனை, 4.48 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தியது தான், ஜெ அரசின் முதல் சாதனை.-கலைஞர் # நம்ம ஆட்சில கடனே இல்லாம தமிழ் நாடு  சுபிட்சமா இருந்துதா?


==================


18 சுவாதி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நெல்லையில் கைது. # போலீஸ்க்கு அல்வா கொடுக்கலாம்னு நினைச்சான், ஜெயில்ல களி குடுக்கப்போறாங்க


==================

19  நாராயணசாமியை முதல்வராக நியமித்து, ஓட்டளித்த மக்களுக்கு காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது-பொன்.ராதா # துரோகம் செய்வது காங்கிரஸ்க்கு “கை “ வந்த கலை ஆச்சே?


===============

20  

 மோடி ஒரு முறை அணியும் ஆடையை, மறு முறை அணிவதில்லை.-அரவிந்த் கெஜ்ரிவால் # ஆமா, துவைச்ச பின் தான் அணிவாராம்

=====================

0 comments: