Sunday, August 28, 2016

கட்சில இருப்பதே 30 பேர், அதுல 3 பேரை நீக்கிட்டா எப்டி?

முன்னணி ஹீரோயினாகும் நிக்கி கல்ரானி.# பெரிய ஹீரோயின் ஆகிட்டா நிக்கி பாறாங்கல் ராணி ஆகிடுவாங்களோ?


============2 ஸ்வாதி வழக்கில் ரயில்வே போலீசும் ,காவல்துறையும் இணைந்து செயல்படாதது ஏன் ?: ஐகோர்ட் கேள்வி # தனித்தனியா இதுக்கு பதில் சொல்வாங்க்===========3 முகேஷ் எம்எல்ஏ.வை காணவில்லை’ புகாரை வாங்கிய எஸ்ஐ இடமாற்றம் # இது "சரிதா"னா?பின்னணியில் இருப்பது சரிதா தானா?
==============4 ஜெ ஆட்சியமைக்க உதவியது விஜயகாந்த்.. வி.சி.சந்திரகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு # அப்போ வை கோ வுக்கு என்ன ரோல்?
==============5 நல்ல கலைஞர்களை சமூகம் கொண்டாட மறுக்கிறது: வசந்தபாலன் உருக்கம் # கலைஞர் னாலே தீயசக்தி னு ஜனங்க மனசுல ஜெ பதிச்சிட்டதாலா?============


6 நாட்டில் இந்துத்துவா பயங்கரவாதம் அதிகரித்து விட்டதாக காரணம் காட்டி, 2012ல், எமர்ஜென்ஸியை பிரகடனப்படுத்த சோனியா முடிவு
செய்திருந்தார்.-சு சாமி: # அதை அப்பவே சொல்லி இருக்கலாமே? கோமால இருந்தீங்களா?


=====================

  7தமிழக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்க வாய்ப்பில்லை.-திருமா # அப்பாடா, இப்பவே தோல்விக்கான காரணத்தைத்தேடி கண்டுபிடிச்சாச்சு

=====================

8 : ஜெ 'தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது' எனக் கூறி உள்ளார். கடந்த சில தினங்களாக, தமிழகத்தில், ஆறு கொலைகள் நடந்துள்ளன- கனிமொழி #  கொலையானவர் குடும்பத்துக்கு  “ஆறு”தல் சொன்னா போதுமா?

=====================


===============
10  பெங்களூரில் நடந்த பொது நிகழ்ச்சி யில், தாலுகா பஞ்சாயத்து உறுப்பினர் கிரிஜா, முதல்வர் சித்தராமையாவை முத்தமிட்டதால், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் #  இனி சித்தராமய்யா முத்த கிருஷ்ணய்யா என அன்போடு அழைக்கப்படுவார்

========================

11 பஞ்சாப் மாநில காங்., மேலிட பொறுப்பாளரான, ஆஷா குமாரி ,வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்#குற்றப்பின்னணி அள்ளோர் முன்னணியில்

=======================
12 போலீஸ் அதிரடியால் வெளிமாநிலங்களுக்கு ரவுடிகள் ஓட்டம்! ஒரே நாளில் நடத்திய வேட்டையில் 1,150 பேர் சிக்கின # நெத்தில ரவுடின்னு பச்சை குத்தி விட்டுட்டா ஜனங்களுக்குப்பாதுகாப்பு
==================13  சந்திர குமாரின் மக்கள் தேமுதிக விரைவில் திமுகவில் இணைய உள்ளது # ஒரு  கறுப்பு ஆடு கறுப்பு சிவப்பு கட்சியில் இணையுது, அதானே


================14 கணக்கில் காட்டாத சொத்து விவரங்களை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்:- மோடி # அப்படி தெரிவிக்கா விட்டால் அக்டோபர் 31 க்குள்  தயவு செய்து தெரிவிக்கவும்


=========================


15   உத்தர பிரேதேசத்தில் லஞ்ச பணத்தை பிரித்துக்கொள்வதில் நான்கு போலீஸார் 

=இடையே மோதல் # அடிச்சுக்காதீங்க ஏட்டக்ய்யா, திருடனுங்க கூட ஒற்றுமையா பங்கு பிரிச்சுக்கறாங்க=
=============================


16 

===================


17 

மதிமுக நிர்வாகிகள் மூவர் நீக்கம்: வைகோ அறிவிப்பு # 

கட்சில இருப்பதே  30 பேர், அதுல 3 பேரை  நீக்கிட்டா எப்டி?

=====================

18   நதிநீர் இணைப்பிற்காக  ரஜினிகாந்த் அறிவித்த ரூ.1 கோடியும் நதிகள் இணைப்புக்காண பணி தொடங்கியவுடன் அளிக்கப்படும் சத்தியநாராயண ராவ் # எப்படியும் இப்போதைக்கு அந்தப்பணி தொடங்க மாட்டாங்கன்னு நம்பிக்கை

=====================

19 அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்து கணிப்புகளில் #டிரம்பை முந்தினார் #ஹிலாரி  # எல்லா இடங்களிலும் பெண் நிலை முன்னிலை

======================

20 

வினுப்ரியா தற்கொலைக்கு போலீஸாரின் அலட்சியமே காரணம்: அண்ணாதுரை  # சைபர் க்ரைம் போலீசார் அப்பவே அந்த ஃபெஸ்புக் கணக்கை லாக் பண்ணி இருந்தா தடுத்திருக்கலாம்===================

0 comments: