Tuesday, August 02, 2016

டாக்டர்.2 குழந்தைக்களுக்கு மத்தியில் எவ்வளவு இடைவேளை விடுவது நல்லது?

1
  •  சார், முதல் டைம் திருத்தும்போது ஒழுங்கா டோட்டல் போட மாட்டீங்களா?

 யோவ், வருசம் ரீ வேல்யூவேசன் வசூல் மட்டும் 75 கோடி வருது. எக்ஸ்ட்ரா வருமானம்

====================

  • வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் பட புஷ்பா புருசன் சூரியிடம் உங்கள் கேள்விகளை கேட்கலாம்

 சாரி சார், எந்த சந்தேகமா இருந்தாலும் நாங்க டைரக்டா க்யூட் புஷ்பா கிட்டேயே கேட்டுக்கறோம்


===============

தலைவரே! மலேசியா டூர்னு சொல்லிட்டு மக்காவ் தீவுக்கு போய்ட்டீங்களாமே? ஏன்?

என்னை ட்விட்டர்ல ஃபாலோ பண்ணுங்க, ஆனா என் பர்சனல் லைஃபை பாலோ பண்ணாதீங்க


=================

4  ஜட்ஜ் = சூர்யா அடிச்சார்னு நேத்து சொல்லிட்டு இன்னைக்கு அடிக்கலைன்னு சொல்றீங்களே?

 கைதி = யுவர் ஆனர் இதுக்கு எஸ் ஜே சூர்யா பதில் தான். இருக்கு, ஆனா இல்லை


==================


காசில இருக்கறதா உங்க சம்சாரம் சொல்லுச்சு, ஆனா சென்னைல இருக்கறதா சிலர் சொல்றாங்களே?

சாரி சார், 2ம் சரி சார். நான் சென்னை காசி தியேட்டர்ல இருக்கேன்
================


6
  • சார், இதுவரைக்கும் 5 தெலுங்குப்படங்களை ரீமேக்கி இருக்கீங்களா?

 ஆமா, எப்டி கண்டுபிடிச்சீங்க?

 ஐம்பெருங்”காப்பி”யங்கள் மகிழும் 50 வது நாள்-னு விளம்பரம் பார்த்தேன்

====================

ஏன் ஒரு ஆண், ஒரு அழகான பெண்ணை மட்டுமே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான்?

நாம தான் அழகில்லை, நம்ம சம்சாரமாவது அழகா இருக்கட்டும்னுதான்


==================


8 எங்க ஆள் நடிச்ச கடைசி 13 படத்துல அவர் தம் அடிக்கும் சீனே இல்லை

அப்டியா , குட், எங்கே 13 நாளா ஹாஸ்பிடல் வந்துட்டு இருக்கே?

ஓவர் தம், லொக் லொக் இருமல்

===================


9 யுவர் ஆனர், எனக்கு சட்டம் சரியாப்புரியலை

லூசுப்பயலே. சின்ன திருடன்னா பெரிய தண்டனை, பெரிய திருடன்னா சின்ன தண்டனை

============

10 சாமி! நீங்களே ஏன் கண் கலங்கறீங்க?

ஊருக்கு ஊர் ஒரு குமாரசாமி இருந்தா இந்த நாடு எப்டி உருப்படும்னு நினைச்சேன்

=================

11

சென்னைல புத்தக கண்காட்சி நடக்குதாமே? 


இல்லையே? நடக்கலை. ஒரே இடத்தில் தான் இருக்கு

==================


12 தலைவரே! தமிழக மக்களுக்கு உயிர் போற பிரச்னைன்னா என்ன செய்வீங்க?
டெல்லிக்கு கடிதம் எழுதுவேன்
மகளுக்கு ஜெயில் போற பிரச்னைன்னா?
டெல்லி ஃபிளைட் ஏறுவேன்


=================


13  ஜட்ஜ் = 13 வயசுப்பையனை லவ் பண்ணும் 24 வயசு டீச்சர் நீங்க தானா? இதுக்கு  என்ன காரணம்?

கைதி= பிரேமம்  தான். அந்தப்படம் பார்த்தேன்


===================


14 தலைவரே!கூட்டணிக் கட்சிகளுக்கு அவர்கள் பலத்தை மீறி சீட் தருவது உங்க இயல்பாமே? நிஜமா?

இதயத்தில் இடம் தருவதுதான் என் இயல்பு. எல்லாம் நிர்ப்பந்தம்


================

சார், உங்க கேர்ள் ஃபிரண்டை செல்லமா எப்டி கூப்பிடுவீங்க?

 செல்லம்மா-ன்னு 


 அடடா, அப்போ அம்மா முறை ஆகிடுச்சே?


15


=======================
16 டாக்டர்.2 குழந்தைக்களுக்கு மத்தியில் எவ்வளவு இடைவேளை விடுவது நல்லது?யோவ்.அவங்க சேர்ந்தே இருக்கட்டும்.நீ சம்சாரத்தை விட்டு தள்ளி இரு"

=============

17 பணம் கேட்டு மிரட்ன ரவுடி கிட்டே இருந்து ஹீரோ தான் காப்பாத்துனாரு.

எவ்ளோ கேட்டானுங்க?
2000 ரூபா.
அட போம்மா.இப்போ ஹீரோக்கு 2 லட்சம் செலவு

==============

18 தலைவரே! பால் விலை ஏறி இருக்கு.சேவை வரி ஏறி இருக்கு.எதிர்க்கட்சி நீங்க போராட்டம் பண்ணலை?

என்னை தோற்கடிச்சீங்க இல்ல.?அனுபவிங்க

============


19 இன்ஸ்பெக்டர்.வாசல் ல நின்ன போலீஸ் ஜீப்பை காணோம்.
போலீஸ் ல புகார் கொடுங்க.
சுத்தம்.அப்போ நாம யாரு? @ சென்னை


================


20 அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே னுதானே சொல்வாங்க , பெருந்துன்பமா? எப்டி?

1 அழகான மனைவி
2 அன்பான துணைவி 
சக்களத்தி சண்டை


====================

0 comments: