Thursday, August 04, 2016

சார், தயாரிப்பாளர்களை அவமானப்படுத்துனீங்களா?

570 கோடி க்கு கணக்கு சொல்லுங்க

 நீங்க உங்க 200 கோடிக்கு கணக்கு சொல்லுங்க

 சரி, மீதி 370 கோடிக்கு கணக்கு சொல்லுங்க. 200க்கு 200 சரியாப்போச்சு

================

 தேர்தல்ல தோற்றதால எதிர்க்கட்சித்தலைவரா உங்க மகனை நியமிச்ட்டீங்க.

 ஆமா

 ஜெயிச்சிருந்தா ஆளுங்கட்சித்தலைவரா அவரை நியமிச்சிருப்பிங்களா?

ஆ!

===================

3 ஜாதிக்கலவரம் நடக்காம இருக்க ஊருக்குள்ளே 144 தடை உத்தரவு போட்டுடுங்க

 ஒரு உத்தரவு போட்டா போதாதா?===================

4 டாக்டர், நான் பரிபூரண சைவம், எனக்கெப்பிடி பறவைக்காய்ச்சல் வந்திருக்கும்?

 உங்க சம்சாரம் அசைவம், சிக்கன் சாப்ட்டிருக்கும், லிப் கிஸ் அடிச்சிருப்பீங்க


================

5    நீங்க எங்க கட்சிக்கு ஓட்டுப்போடல இல்ல? எப்படி இப்டி கேள்வி கேட்கலாம்?

 அப்போ கலைஞர் ஜெ கிட்டே கேள்வி கேட்கறாரே? அவர் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டாரா?


==============


6 இண்ட்டர்வ்யூவில்

 பைசா நகர கோபுரம் ஏன் சாய்ஞ்சிருக்கு?

 பைசா வுக்குப்பொறாத விஷயம் சார்,


===============


7 அப்பா. அவரு வேலைக்கே போறதில்லை, நம்ம வீட்லயே தான் இருக்காரு. ட்வீட் போட்டுட்டே இருக்காரு

 ஓஹோ, ட்”வீட்டோட” மாப்ளையா இருக்காரா? விளங்கிடும்

==================


8 மிஸ்! டெய்லி பகல் டைம் பூரா உங்க மனம் நெருக்கடியாவே இருக்குமா?

 ஏன்?

ஆஃபீஸ்ல எப்பவும் தூங்கிட்டே இருக்கீங்களே?


=================


9  டியர். என் மேல முழு நம்பிக்கை வந்திருக்கா?

கொஞ்ச நாள் ஆகும்

 ஓஹோ, அப்போ கொஞ்ச நாள் கழிச்சே பீச்ல மீட் பண்ணலாமா? இப்பொ எதுக்கு வேஸ்ட்டா?


=====================

10  


டியர்,என்ன வச்சி காமெடி கீமடி பண்ணலயே?

உன்னை வெச்சு காதலே சரியா பண்ண முடியல, காமெடி எப்டி பண்ன?


========================

11  சார், ஸ்க்ரிப்ட்ல பொம்பளை பொறிக்கி-ன்னு எழுதி இருக்கீங்களே? பொறுக்கி தானே சரி?

 வில்லன் பெண்களை பொறி வெச்சு கரெக்ட் பண்றவன், அப்போ ”பொறி”க்கி தானே?


==================

12 


வாழ்க்கைய எப்டி சந்தோஷமா ஓட்டரது,

முறைப்பொண்ணோ நம்மை முறைக்கற பொண்ணோ டைம் கிடைக்கும்போதெல்லாம் ஓட்டிட்டே இருக்கனும்


====================

13

சார், நீங்க இப்போ சுட்ட ரோஸ்ட் சாப்பிடுவீங்களா? 2 நாள் முந்தி சுட்டதையா?

 லூசாய்யா நீ?

 இல்லை விமர்சனத்தை படம் ரிலீஸ் ஆகி 10 நாள் கழிச்சு சொல்லுன்னீங்களே?


======================

14 மிஸ்! எங்க  வீட்டை விட்டு கிளம்புங்க முதல்ல 

 ஏன்?


சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு வீட்டை சுத்தம் பண்ணுங்கன்னு சொன்னீங்களே?

=================15 சார்,கலைஞர் டுவிட்டர் வந்த பின் தான் டிவிட்டர் பிரபலமானதுனு சொல்றாங்களே?

நல்ல வேளை , மு.க வந்த பின்புதான் முக நூல் ( ஃபேஸ்புக்) உருவாச்சுன்னு சொல்லலை

==============

16 சார், காசுக்காகத்தான் நடிச்சேன்னு சொன்னீங்களா?

நோ, நோ , “கா”ர்த்திக் “சு”ப்புராஜ் காகத்தான் நடிச்சேன்னேன்

===============

17 தலைவரே! நீங்க நேத்து யார் யார் வீட்டுக்குப்போனீங்கன்னு உளவுத்துறை   நோட் பண்ணுச்சா?

 இல்ல

 யாரோ யார் வீட்டுக்கோ போனா உங்களுக்கென்ன? ஏன் அடிச்சுக்கறீங்க?

============

18   டியர், நெற்றி  முத்தம் எப்பவும் அப்பாவுக்கு நிகரானவங்களுக்கு மட்டும் தான்

 உன்னைக்கேட்டேனா முருகேசி.? நாம எப்பவும் லிப்ஸ் ல தான் பப்ஸ் சாப்பிடுவோம்==============


19   டியர், எனக்கு வீட்ல வேற மாப்ளை பார்த்துட்டாங்க

 போடி போ அவன் மும்பை முகேஷ் மாதிரியோ ஈரோடு மகேஷ் மாதிரியோ தான் அமைவான்

=================


20  சார், தயாரிப்பாளர்களை அவமானப்படுத்துனீங்களா?

ஆமா, சான்ஸ் கேட்டுப்போனப்போ அவனுங்க அவமானப்படுத்துனானுங்க, தானிக்கு தீனி, அனுபவி ராஜா அனுபவி


==================

0 comments: