Sunday, August 07, 2016

சபாஷ் நாயுடு ஹால்"-டியர்.Dக்கு முன்னால E என்பது என்ன?

உருவ கேலி தப்பு.ஆனா பேய் பிசாசை கிண்டல் பண்ணலாம்

எப்டி?
பேய்க்கு தான் உருவமே இல்லையே?அரூபம் தானே?

=================

2 டாக்டர்.குடிகாரனை அடையாளம் கண்டுக்க என்ன.வழி?

ஹோட்டல்ல தயிர் சாதம் வாங்கிக்கொடுங்க.கடிச்சுக்க எத்தனை ஊறுகாய் யூஸ் பண்றான்னு பாருங்க

==============

3 என்் மொத்த வாழ்க்கையே தலைகீழா போயிடுத்து.
எப்டி டீச்சர்?
யோகா டீச்சர் போஸ்ட் செலக்டட்.சிரசாசனம் மட்டும் சொல்லித்தரனுமாம்

===============

4 மிஸ்டர்.எந்தப்பொண்ணைப்பார்த்தாலும் முதல்ல பாதத்தை நோட் பண்றீங்களே?எதுக்கு?

ஹை ஹீல்ஸ்.செப்பல்ல அடி வாங்குனா ரத்தக்காயம் வரும்.

==============

5 அஜித் ,விஜய் என்ன வித்யாசம்?


ஸ்டைலிஸில்,குணத்தில் அஜித் ரஜினிக்கு கிட்டே வந்துட்டார்.விஜய் கிட்டே வந்துட்டதா மக்களை நம்ப வைக்க முயற்சி் பண்றார்
===============

6 சார்.சபாஷ்.நாயுடு டைட்டில்ல ஜாதி வருவதால் தடை வருமாமே?

அப்டி வந்தா " சபாஷ் நாயுடு ஹால்"னு மாத்திட்டா போச்சு.லேடீஸ் கூட்டம் அள்ளிக்கும்


===========
7 டியர்.நான் என்ன செஞ்சாலும் என்னை விட்டு போய்ட மாட்டீங்களே?
ம்ஹூம்.ஆனா தயவு செஞ்சு உப்புமா மட்டும் செஞ்சுடாதே!

============

8 இப்பொழுதெல்லாம்
ஒப்பனைகளை தவிர்த்து விடுகிறேன்.
ஓஹோ.வெயிட் குறைப்பதற்கான முதல் கட்ட முயற்சியா?


==============

9 டியர்.Dக்கு முன்னால E என்பது என்ன?


இது தெரியாதா?காதலி மாசமா இருக்கேன்னதும் ஓடிடுவானே்.டெலிவரிக்கு முன் எஸ்கேப் (DELIVERY -ESCAPE)


==============
10 குருவே! சாந்தி பெற என்ன வழி?

சொல்லிடுவேன்.அடுத்து சாந்தி அப்புறம் நித்யானு வந்து நிப்பே


==============

11 உங்க பையன் குழந்தையா இருக்கும்போது வீல் வீல் னு கத்திட்டே இருப்பானாமே?

ஆமா.அப்ப இருந்தே அவன் டூ வீல் பிரியன்.இப்போ டூ வீலர் ப்ரியன்.


==============

12 அம்மா கணக்கு ஹிட் ஆகுமா?

66 கோடி + 570 கோடி பத்தியா கேட்கறீங்க?
ஹய்யோ.தனுஷ் + இளையராஜா படம் பற்றி
ராஜா+அம்மா எப்பவும் ஹிட்


=============


13 சார்.2000 ரூபா கடன் கேட்டீங்களே?இந்தாங்க.
சாரி.நான் யார் கிட்டெயும் கை நீட்டி காசு வாங்க மாட்டேன்.என் பேங்க் அக்கவுன்ட் நெம்பர் ல கட்டிடவும்====


14 படத்துக்காக நெல்லைத்தமிழ் கத்துக்க்ப்போறேன்.

பாவம் சார்.தமிழ்
தொல்லை பண்றீங்க

================

15 டியர்.எனக்கு வந்த ஹெட்போன் பரிசை ஏன் ஒளிச்சு.வெச்சுக்கிட்டே?
நல்ல நாள்லயே என் பேச்சு உங்க காதில் விழாது.இப்டி செஞ்சாதான் வீட்ல பிரச்னை எழாது


=================

16 வரலட்சுமி என்னில் பாதி.

ஓஹோ.உன் கூட வந்திருக்கா?
இல்ல.அவ பேரில் பாதி.
வரல(ட்சுமி)
புரில.

==================

17 சார்.லாட்ஜ் ல எந்த ரூம்ல தங்கி இருக்கீங்க?
LKGல புரியல.ரூம் நெம்பர் 1,ல இருந்துதானே ஆரம்பிக்கும்? அது அப்போ.இப்பவெல்லாம் LKG,UKG,1,2,3

===============

18 பொண்ணு பேரு ஓவியா.ஓவியம் வரையத்தெரிஞ்ச மாப்ளை தான் வேணுமாம்.
50% ன்னா ஓக்கேவா? எப்டி? சித்திரம் வரையத்தெரியாது.ரம் வேணா அடிப்பாரு


================

19 பஞ்சாய்த்துத்தலைவியா கும்முனு இருக்கும் லேடியை நியமிப்பதில் சிக்கல் இருக்கு.
என்ன? செம கட்டப்பஞ்சாயத்துத்தலைவி னு சொல்வாக

===============


20 சாட்சியோட நிரூபிச்சு உன்னை ஜெயில்ல தள்ளி கம்பி எண்ண வைக்கிறேன்.
அது உங்களால முடியாது. ஏன்? எனக்கு 1,2,3 கூட எண்ணத்தெரியாது


================

0 comments: