Wednesday, August 31, 2016

பேஸ்புக்' பெண்களுக்கு பாதுகாப்பு தேவையா?

1 எனது ராஜ தந்திரத்தால்தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் போனது: வைகோ # எங்க ஊர்ல இதுக்கு குள்ளநரித்தனம்னு சொல்வாக,ராஜ தந்திரமாம்ல?


===============


திமுகவில் மக்கள் தேமுதிக:ஜூலை 17-இல் இணைப்பு விழா # சந்திரகுமார், அவர் ஃபேமிலி, ஃபிரண்ட்ஸ் மொத்தம் 20 பேரு இருப்பாங்களா? அதுக்கு ஏன் விழா?


=================


சுவாதி கொலை வழக்கு :5 நாள்களாகியும் துப்பு துலங்கவில்லை # கோர்ட் வேற 2 நாள் டைம் தான் கொடுத்திருக்கு,டார்கெட் பிர்சர்ல எவனையாவது மாட்டி விட்ராதீக


======

ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ்காக 250 சைக்கிள்- ஜெ # பை சைக்கிள் தீவ்ஸ் ஜாக்கிரதை


==========5 மாற்றி அமைக்கப்படுகிறது மத்திய அமைச்சரவை: பல அமைச்சர்களின் இலாகாக்கள் மாற வாய்ப்பு

# ஜெ மோடி சந்திப்பில் ஐடியா கொடுத்துஇருப்பார் போல
============

6 பெண்கள் மீதான குற்றங்களை குறைக்க தேவை ஆன்மீக கல்வி: ராமகோபாலன் # நம்மாளு நான் நாத்திகவாதினு சொல்லி எஸ் ஆகிடுவானே?


===========


7 தமிழர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட நிலங்கள் அனைத்தும் திருப்பி தரப்படும்-இலங்கை அரசு # நட்ட ஈட்டுடன் வட்டி போட்டு தரனும்.


============

8 பொதுஜனம் சுவாதி கொலையை தடுக்கவும் முயற்சிக்கவில்லை, தகவலும் தரவில்லை: தா.பாண்டியன் # கோர்ட் கேஸ்னு அலையவிடுவாக

============

9 சுவாதி கொலை சம்பவம்.. ஒய்.ஜி.மகேந்திரனை தொடர்ந்து எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து # நாட்ல ஆளாளுக்கு கண்டபடி கருத்து சொல்லி மாட்டிக்காதீங்க

==========

10 விலையில்லா வைஃபை! - ஹிலாரியின் தேர்தல் அறிவிப்பு
# தமிழ் நாட்டு டெக்னிக்கை தரணி எங்கும் பாலோ பண்ண ஆரம்பிச்ட்டாக

============

11 மோடியின் வாக்குவங்கி குறைந்தது; 2019-ல் வெற்றி பெற முடியாது: கேஜ்ரிவால் # மோடிக்கு ஆதரவு அலை குறையும்.சீட் குறையும்.ஆனா வெற்றி உறுதி

=============

12 ரயில்வே ஸ்டேசனில் ஏன் கேமரா வைக்கவில்லை? - நீதிமன்றம் கேள்வி # நித்யானந்தா, பெரிய கருப்பன் ரூம்னா உடனே வெச்சிருவோம்

===========

13  கறுப்புப் பணம், 100 நாட்களில் மீட்கப்படும்' என்றனர். தற்போது, 26 மாதங்கள் ஆகின்றன. கறுப்புப் பணம் மீட்கப்படவில்லை; -மல்லிகார்ஜுன கார்கே # முதல் 100 நாட்களில்னு நினைச்ட்டீங்களா? கடைசி 100 நாளில்னு  சமாளிப்பாங்க

========================


14  தமிழக அரசியலில் விஜயகாந்தை யாரும் திரும்பிக் கூட பார்க்கவில்லை.-சந்திரகுமார் # 2011 அரசியல் களத்தில் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தவர் விஜயகாந்த் என்பதை மறக்காதீர்

=========================

15    கூலிப்படை கலாசாரத்தை ஒழிக்க, தமிழக அரசு தவறிவிட்டது; கூலிப்படையை ஒழிக்க கடும் நடவடிக்கை தேவை.-ஜி.ராமகிருஷ்ணன்
# விரைவில் சம்பளப்படையாக அவை பதவி உயர்வு பெறக்கூடும்


======================

16  வேண்டாம் காங்கிரஸ்' என்ற நிலையை மாற்றி, 'வேண்டும் காங்கிரஸ்' என்ற நிலைக்கு கொண்டு வந்தவர் இளங்கோவன்.-நாசே.ராமச்சந்திரன் # காங் கட்சியின் ஜீன் கிளாடு வேண்டம் EVKS?

=====================

17 ரவுடிகளை ஒடுக்குவது முதல்வரின் கடமை: ஸ்டாலின் # இதான் சாக்குன்னு அழகிரியை கட்டம் கட்டப்பார்க்கறாரு


==========================

18 'பேஸ்புக்' பெண்களுக்கு பாதுகாப்பு தேவை: தமிழிசை  # ஃபேஸ்புக்கில் ஃபேஸ் அப்டேட்டாமல் இருப்பதே முதல் பாதுகாப்பு

==========================19 நிதிப் பற்றாக்குறை அதிகமுள்ள மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் -கலைஞர் # சட்டசபையில் கருணா”நிதிப்பற்றாக்குறை   , உடனே ஆஜர் ஆகவும்


=================================


20  ”பிரியங்கா முதல்வர் வேட்பாளரா?: ஆய்வு செய்ய குழு அமைத்தது காங்., #கூகுள் பண்ணிப்பார்த்ததில் ராகுல் பிரியங்காவை விட பின் தங்கி  உள்ளார்


======================

0 comments: