Wednesday, August 24, 2016

சார், நீங்கள் ஆள் கறுப்பா இருக்கீங்க, ஆனா கை மட்டும் சிவப்பா இருக்கே?

 டியர், வழக்கமா நீ ரோஸ் கலர்ல இருப்பே, இன்னைக்கு மெரூன் கலர்ல இருக்கே?

இருட்டுல பாண்ட்ஸ் பவுடர்க்குப்பதிலா ப்ரூ காஃபி பவுடர் அடிச்ட்டேன் போல 

==================


2   டாக்டர், கல்யாணம் ஆனதுல இருந்து என் சம்சாரம் ஒல்லியாவே இருக்கு, பெருக்கவே மாட்டெங்கறா

 இந்தக்காலப்பொண்ணுங்க வாசல் பெருக்க மாட்டாங்க, வேலைக்காரி வெச்சுக்குங்க


=================

நான் கெட்டவ அப்டின்னா எதுக்கு என் கிட்டே  பேசறீங்க?

மிஸ்! அந்த தகவலை உங்க கிட்டே சொல்ல பேசி இருப்பாரு


====================


ஆபீசில் ஆன்மீகப்பணியில் ஆஷா ஈடுபட்டதால் மெமோவா ?சாமி கும்பிட்டா தப்பா?டெம்ப்பிள் ரன் கேம் விளையாடிட்டு இருந்துச்சாம்

===============


5 மிஸ்.டெய்லி காலை 10.30 வரை தூங்கறீங்ளே.ஏன்?பத்தரமாத்து தங்கம்னு பேர் எடுக்க ஆசை

=============

6 டியர்.உன் மேல சத்தியமா கொஞ்ச நாளைக்கு டிபி மாத்தமாட்டேன்."ஓஹோ.அந்த கொஞ்ச நாள் க்கு டெபனிசன் என்ன?
2 நாள்


==============

7 பொன்னுமணி ரீமேக்கில் நயன் தாரா நடித்தால் பாடல் வரி என்னவா இருக்கும்?நெஞ்சுக்குள்ளே இன்னார் இன்னார் இன்னார் இன்னார் இன்னார் இன்னார் என்று சொன்னால் தெரியுமா?


===============

8 ஓர் தங்கக்கொலுசு நான் தந்த பரிசு வேறென்ன வேண்டும் கண்மணி?இன்னொரு கொலுசு.
எதுக்கு?
லூசு.2 கால்.2 கொலுசு


=============

9 அதிரசம் நல்லா ருசியா செய்வா னு சொன்னது பொய்யா மாமா?ம்ம்
அவ கச்"சாயம்",வெளுத்திடுச்


===========

10 மிஸ்!உங்க இனிஷியல் எம் ஆர் எஸ் ஸா?யோவ்.நல்லா பாரு.அது MRS.மேரேஜ் ஆனவனு அர்த்தம்


===========

11 சார், இந்தப்படத்துல ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் நீங்க தான்

ஏன் சார் அப்டி?

 ஷூட்டிங் ஸ்பாட்ல  வேன்ல போய் உக்காந்து டிமிக்கி அடிக்க மாட்டீங்க இல்ல?


===================


12 என் பொண்ணு  ரொம்ப அமைதி டைப், சாப்பிட  மட்டும் தான் வாய் திறப்பா மாப்ளை.

 மாமா, அப்போ கொட்டாவி எப்டி விடுவா?

=====================


13 டாக்டர், உடம்பு நனையாம நீச்சல் கத்துக்க என்ன வழி?

நோகாம நோம்பி கும்பிட நினைச்சா அதுக்கான பலன் கிடைக்காதே?


======================

14   என் காதலர் ரொமான்ஸ் பண்றப்போ ரெமோவா மாறிடுவார்


 செம ஜாலி தான்

நீ வேற அந்நியன் ரெமோவா இல்ல, சிவகார்த்திகேயன் ரெமோவா. பொண்ணு மாதிரி வெட்கப்படுவார்

=======================

15 டாடி,E என்ன வரைய?.. Elephant ?சிம்பிளா Egg?

பேசாம ஈ வரைஞ்சிடேன்

=================

16
சார், நீங்கள் ஆள் கறுப்பா இருக்கீங்க, ஆனா கை மட்டும் சிவப்பா இருக்கே?
டெய்லி சொந்த சம்சாரத்துக்கு பீட்ரூட் அரிஞ்சு தருவேன், அப்பப்ப மருதாணி அரைச்சுத்தருவேன்


==================

17  என்னை யார் கூடவும் ஒப்பிடாதீங்க டியர், எனக்குப்பிடிக்காது

அப்டியா? நீ ஸ்ரீ திவ்யா மாதிரி இருக்கே

இப்டி ஒப்பிட்டா ஓக்கே


==================

18 தலைவருக்கு குஷ்பூ பிடிக்கும், ஆனா அமலாபால் பிடிக்காதா? ஏன்?

ஏன்னா “அம்மா கணக்கு” ஹீரோயின் ஆச்சே?


==================

19  சார்,நடு சாமத்துல யாரோ ஒரு பொண்ண திட்டிட்டு இருந்திங்களாமே?

பின்னே என்னய்யா? வீட்ல சம்சாரம் இருக்கும்போது ஐலவ்யூ மெசேஜ் அனுப்பி மாட்டி விடுது

==================

20 நடுநிசில மோகினிப்பேய் நடமாட்டம் இருக்குமாமே நிஜமா?

அது தெரில, ட்விட்டர், ஃபேஸ்புக் வந்தா மோகினிப்பொண்ணுங்க நடமாட்டம் நிறைய இருக்கும்


=======================

0 comments: