Wednesday, February 10, 2016

ஃபர்ஸ்ட் நைட்க்கு ஹெலிகாப்டர்!!!!

சமுதாயத்துக்காகப் பாடுபட்டவர்களை மறக்கக் கூடாது: கருணாநிதி # மறக்க மாட்டோம் தலைவரே! கக்கன் , காமராஜர் இவங்க தான் உண்மையா  நாட்டுக்காக,சமுதாயத்துக்காகப் பாடுபட்டாங்க, மத்தவங்க எல்லாம் அவங்கவங்க குடும்பத்துக்காகத்தானே பாடுபட்டாங்க?


==============
துறைமுகம் MLA  பழ கருப்பையா அதிமுக வில் இருந்து நீக்கம்-ஜெ அறிவிப்பு.# சார்! நீங்க ஏதாவது மீடியால பேட்டி கொடுத்த மாதிரி தெரிலயே?
====================

3  அதிமுக., விலிருந்து பழ. கருப்பையா நீக்கம் - ஜெ  # பழம் நழுவி எதிர் பால் அணியில் விழுந்தா ஆளுங்கட்சிக்குத்தான் நட்டம்


==================


4   தி.மு.க. ஆட்சியில் முதல் கையெழுத்து மதுவிலக்கு: மு.க.ஸ்டாலின் பேச்சு # கையெழுத்தைப்போடறது அப்பாவா?நீங்களா?


==============


5 தி.மு.க. ஆட்சியில் முதல் கையெழுத்து மதுவிலக்கு: மு.க.ஸ்டாலின் #,2 வது கையெழுத்து கள்ளுக்கடை?

============


6 சமக கூடாரமே காலியானது.சரத்குமார் அவசர ஆலோசனை -செய்தி.# கூடாரமே காலி ஆன பின் யார் கிட்டே ஆலோசனை செய்வாரு?


=============


7 மக்கள் புகார்களுக்கு தீர்வு காண தவறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை: -மோடி உத்தரவு # இது MLA ,MP க்களுக்கும் பொருந்துமா?கட்சிகள் திருந்துமா?

===========

8 சட்டங்களை தவறாக பயன்படுத்தும் பெண்களுக்கு வக்கீல்கள் துணை போகக்கூடாது : நீதிபதி# BASIC INSTINCTல வருவது போல் வக்கீலையே கரெக்ட் பண்ணிடறாங்க


============

9 அம்மா திட்டமே சும்மா திட்டம்தான்: இளங்கோவன் பேச்சு # அன்னை சோனியா திட்டம் எல்லாம் வெண்ணை திட்டமா?ன்னு அவங்க கேட்பாங்களே?


=============

10 புல்லட் பைக்கை ஓட்டியபடி திருமண அரங்கிற்கு வந்த மணப்பெண்# அடேங்கப்பா.அப்போ பர்ஸ்ட் நைட்க்கு ஹெலிகாப்டர் ல வந்து மொட்டை மாடி ல இறங்குமோ?


=============

11 தமிழகத்தில் தனித்துப் போட்டியிட எந்த கட்சிக்கும் துணிவில்லை-வாசன்# தனியாப்போய் ஓட்டுக்கேட்டா தகராறு.கூட்டத்தோட கோவிந்தா போட்டா வரலாறு


==============


12 போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்த கடும் தண்டனை: நீதிமன்றம் கருத்து# சரக்கு அடிச்சா போதை ஏறாத மாதிரி ஊசி போட்டு விட்ருங்க


===============

13 கட்சியிலிருந்து சிலர் வெளியேறுவதால் ச.ம.க., அழிந்து விடாது-சரத்குமார் # நாட்டாமை சித்தப்பு.நம்ம கட்சில இருந்ததே ஒரு சிலர் தானே?


=============

14 எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் ஒழியாது.எல்லாரும் கூட்டு களவாணிகள்-பழ கருப்பையா # ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்னீங்கண்ணா

==============

15 நாட்டுக்கு நல்ல நேரம் மிக விரைவில் வர போகிறது - ஸ்டாலின் # என்ன?வர வர குடுகுடுப்பைக்காரன் ரேஞ்சுக்கு பேச ஆரம்பிச்ட்டீங்க?


=============

16 146 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை-நக்கீரன் க.கணிப்பு # இன்னும் கூட்டணியே முடிவாகலை.அடிச்சு விடாதீங்க


==============


17 கச்சத்தீவை 25 ஆண்டுகளாக தமிழக அரசால் மீட்க முடியவில்லை: ஸ்டாலின் -நுணலும் கழகமும் தன் வாயால் கெடும்.அந்த 25ல 10 நம்ம ஆட்சிதானே தலைவா?


=============


18 விரைவில் இந்தியா வரும் விரிசல் விழாத ஸ்மார்ட்போன்.!# இதை வாங்கி வெச்சுக்கிட்டா கட்சில விரிசல் விழாதா?


===============

19 உம்மன் சாண்டிக்கு ரூ 1.90 கோடி லஞ்சம் கொடுத்தேன்... சரிதா நாயர் அதிரடி புகார்# சுத்தம்.லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக யூ ஆர் அண்டர் அரெஸ்ட்


================


20 ‘GETHU’ என்பதில் ‘கெ’ உச்சரிப்பு வராததால் வரிவிலக்கு தரவில்லை: -அரசு # கெ உச்சரிப்பு வந்தா இது GAY பிலிம்னு கிண்டல் பண்ணுவாங்க இல்ல?


=============

0 comments: