Tuesday, February 02, 2016

தமனாக்கு ஆஸ்கார் விருது!!?? தமிழர்கள் அதிர்ச்சி!

1  மதுவை கொடுத்து மக்களை கெடுப்பதில் அதிமுகவும், திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: ராமதாஸ்  # மப்பு தெளிஞ்சுட்டா இவங்க ஊழல் தெரிஞ்சுட்டா?அதான் தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிக்கறாங்க================
2  இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் பெரும்பாலான பாஸ்வேர்டு 123456 - செய்தி #  இதைத்தான் ரஜினி தர்மதுரைலயே 1991ல  பாடிட்டாரே?
=================
ஜல்லிக்கட்டு குறித்து பேச திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தகுதி இல்லை: ஓ.பன்னீர்செல்வம் # உங்களுக்குத்தகுதி இருக்கு, ஆனா பேச முடியாது
==================கோயிலுக்குள் காலணி அணிந்து வந்ததாகப் புகார்: சல்மான் கான், ஷாரூக் கானுக்கு எதிராக வழக்கு # கார் ஏத்திக்கொன்ன வழக்கிலயே தப்பியாச், இது ஜூஜுபி
=================
5  கட்டடம் கட்டியபிறகே கல்யாணம்: விஷால் உறுதி #  ஏனுங்க்ணா, கண்ணாலம் கட்ன பிறகு கட்டிடம் கட்னா சங்கத்துல ஒத்துக்கமாட்டாங்களா?எதுனா ஒரு சால்ஜாப்
===================
6  இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தான் செயல்பட வேண்டும் ஃபரூக் அப்துல்லா # அதுக்குத்தானே சானியா மிர்சாவை அங்கே கட்டிக்கொடுத்திருக்கோம்
===================
7  கேரளாவில் சங்கீத அகாடமி தொடங்க இளையராஜாவுக்கு 5 ஏக்கர் நிலம்: கேரள முதல்வர் அறிவிப்பு #  கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் வரப்பு
==================
தமிழக அரசின் தற்போதைய நிகர கடன் ரூ. 1.98 லட்சம் கோடி மட்டுமே - ஓ.பன்னீர்செல்வம் # அடடே, 2 ஜி ஊழல் மதிப்பு அளவுதானா? தேவலையே?
================திருத்தணியில் இருந்து பிரச்சாரத்தை துவங்கும் ஜெயலலிதா # வாக்காளர்களுக்கு  வாக்கு கொடுத்து பின் ஜெயிச்சபின் மொட்டை அடிக்கப்போறாங்க, குறியீடு
==================
10 பெங்களூரில் ஐபிஎம் ஊழியை கொலை: 3 மணிநேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்த போலீஸ்  # சூப்பரு, ஒரு சினிமா பார்க்கற டைம் தான் 
====================11 ஒரே நேரத்தில் 12 வகையான ஒயின் குடித்த மதுபான விடுதி ஊழியர் உயிரிழப்பு..# ஓசி ல கிடைச்சா எதை வேணாலும் அளவில்லாம அடிச்சுடவேண்டியது
============
12  பிரதமரின் வங்கிக் கணக்கு திட்டத்தில் வைப்புத் தொகை ரூ.30 ஆயிரம் கோடியை தாண்டியது # மோடியின் திட்டங்களில் இது ஒரு உருப்படியான விஷயம்=============


13 விவசாயத்துறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா விருப்பம் # நம்ம மண்ணில் கால் வைக்க அயல்நாட்டு மண்ணுக்கு அனுமதி அளித்தால் அபாயம்


===========

14 பஞ்ச் டயலாக்குடன் 26/1/16ல் வெளியாகிறது் 'தெறி' டீசர்!# ஆபீசுக்கு லீவ் போட்டுட்டு டீசரை பஞ்சர் பண்ணக்காத்திருக்காங்க அஜித் ரசிகர்கள்


==========

15 என்னை நீக்கியதற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் காரணம் விஜயதாரணி அதிரடி குற்றச்சாட்டு# பேரை அஜித் தாரணின்னு மாத்திப்பாருங்க.ஒர்க் அவுட் ஆகலாம்

============

16 கிருஷ்ணகிரி-டாஸ்மாக் கடைக்கு சென்ற கணவரை காணோம். நீதி கேட்கும் மனைவி # எல்லா சாக்கடை ஓரத்திலும் தேடிப்பாருங்க.மப்புல உருண்டு கிடப்பாரு


==============

17 நீதிபதிகள் பற்றி அவதூறு. மன்னிப்பு கேட்ட் வைரமுத்து : வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட் பேசுனதுக்கு சாரி.இன்னைக்கு வீட்ல டிபன் பூரி


================

18 2016ல் மக்கள் வாழச் சிறந்த நாடுகள்... ஜெர்மனி முதலிடம்... இந்தியாவிற்கு 22! # ஜெர்மனியின் செந்தேன் மலரே!


==============19 நயன்தாராவுக்கு இணையாக சம்பளம் கேட்கும் காஜல் அகர்வால் #  நயன் தாராக்கு இணை ஆக சம்பளம் கேட்கும் காஜல்னு ஒரு அர்த்தம் வருது


===================


20 வெள்ளையா இருந்தாதான் ஆஸ்கர் அவார்டு கிடைக்குமா?விழாவை புறக்கணிக்கும் வில் ஸ்மித்   எல்லாம் இல்லீங்க, தமனாவுக்கு குடுத்திருப்பாங்களே?


======================

0 comments: