Friday, February 12, 2016

உலகின் ‘டாப்–50’ பணக்காரர்கள் பட்டியலில்.......

1  சகாயம் போன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்..பழ கருப்பையா # அரசியலுக்கு நல்லவர்கள் வருவதில்லை.வந்தால் நல்லவர்களாக இருக்க யாரும் விடுவது இல்லை


============2 நான்தான் அடுத்த ச.ம.க. தலைவர்: எர்ணாவூர் நாராயணன் அதிரடி! # நாராயணன் னா கலகம் தான் பண்ணனுமா?============
3 கூட இருந்த ஒரே எம்.எல்.ஏ-வையும் கட்சியை விட்டு நீக்கினார் சரத்குமார் # எம் எல் ஏ வை நீக்குனவங்க எல்லாம் கேப்டனாவோ அம்மாவாகவோ முடியாது
==========4 சமத்துவ மக்கள் கட்சியை உடைக்க சதி...

அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம்: சரத்குமார்# நீங்க சொன்னா நம்பமாட்டோம்.அம்மா சொன்னாதான் நம்புவோம்


============

5 svs கல்லூரிக்கு அனுமதி அளித்தது குறித்து எனக்கு தெரியாது - அன்புமணி.!# நல்ல வேளை, அப்டி ஒரு காலேஜ் அந்த ஊர்ல இருந்ததே தெரியாதுனு சொல்லலை


==============


திமுக ஆட்சியில் முதல் கையெழுத்து மதுவிலக்கு -ஸ்டாலின் # ராமதாஸ் சொல்றதை  கலைஞரும், அன்புமணி சொல்றதை ஸ்டாலினும் அட்ட்டக்காபி அடிக்கறாக


================

ஆட்சிக்கு வந்தால் 90லட்சம் பேருக்கு வேலை:ஸ்டாலின் # சொல்றது தான் சொல்றீங்க, ரவுண்டா 1 கோடினு அடிச்சு விட்ருக்கலாமில்ல?தலைவா!வரவா போறோம்?


=============


8  திமுக தனித்து நின்று ஒரு வார்டு உறுப்பினர் ஆக முடியுமா? - கேப்டன் #  இதெல்லாம் ரொம்ப ஓவரு கேப்டன், நீங்க எப்பவும் எல்லாத்துலயும் ஓவர்தான்


===============


9  பாமக ஆட்சிக்கு வந்தால் எந்த  காலேஜாக இருந்தாலும் படிப்புசெலவை அரசே ஏற்கும் - ராமதாஸ்  வரமாட்டோம்னு தெரிஞ்சுட்டா அள்ளி விடலாம் போல


==================


10 பல்வேறு சமூக விரோதிகளை நான் மன்னிக்க தயார்-விஜயகாந்த்  #  ஓஹோ, அப்போ திமுக கூட கூட்டணி உறுதினு சொல்றீங்களா?


===============

11  மத்திய அரசு வெளியிட்ட முதல் 20 'ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் சென்னை, கோவை # இங்கே  எல்லாம் ஸ்மார்ட் ஃபோன் செம சேல்சாம்

===============

12  சோலார் பேனல் ஊழல்: கேரள முதல்வர் உம்மன் சாண்டி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவு # முதல்வர்களுக்கு இந்த வருசம் ஜெ யில் ராசி போல


=================


13  எனது பிறந்த நாளை கொண்டாட விரும்பவில்லை: மு.க.அழகிரி தகவல் # கழக  ஆட்சி மலர்ந்தால்  அழகிரி பிறந்த நாள் விழா சிறப்பாகக்கொண்டாடப்படும்


==================14 'அதிமுக ஆட்சியில் லஞ்சம் அதிகரிப்பு'- எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா-பழ.கருப்பையா #  ஏன் நாலே முக்கால் வருசமா பொறுமையா  இருந்தீங்க?


=================

15  சிவகார்த்திகேயனுடன் நடிக்கத் தயார்: திரிஷா பேட்டி  # டைட்டில்  எனக்கு  38  உனக்கு 28? 


================

16 கனிமொழி-இளங்கோவன் தூத்துக்குடியில் சந்திப்பு- செய்தி # எங்க கூடாரத்துல இருந்து வந்த குஷ்பூ எப்படி இருக்காங்க?

 அழகா , லட்சணமா இருக்காங்க


=============


17 விஜயதாரணி குற்றச்சாட்டுக்கு பதில்சொல்லதேவையில்லை - குஷ்பு# நலம்தானா  வாசிக்கத்தெரியாதுன்னு சொல்லுங்க,  வாசிக்க முடியாது, தேவையில்ல சொல்லாதீக

=============


18  த.மா.கா–தே.மு.தி.க. கட்சிகள் மக்கள் நல கூட்டணிக்கு வரும்: திருமாவளவன் பேட்டி # தாமாக வராது, பொட்டி கை மாறுனா வரும்


================


19 ஊழல் குறைவான நாடுகள்: முதல் இடத்தில் டென்மார்க், 76-வது இடத்தில் இந்தியா. # ஓஹோ, போட்டி லிஸ்ட்ல மொத்தம் 76 நாடுகளா?

=================

20  உலகின் ‘டாப்–50’ பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்களுக்கு இடம் # சோனியாகாந்தி, கலைஞர், ஜெ இவங்க 3 பேருமா?=================

0 comments: