Sunday, February 21, 2016

தொட்டால் தொட ரூம் -எஸ் ஜே சூர்யா

1  என் பட டீசர் செம ஹிட் ஆகிடுச்சு

 டீசர், ட்ரெய்லர் ஹிட் ஆகறது  ஓக்கே, படம் ஹிட் ஆச்சா?ஆகுமா?அதான் மேட்டர்


==============


2  ஜோசியரே! முதல் இரவுக்கு நல்ல   முகூர்த்த நேரம் குறிச்சுக்குடுங்க

நைட் 12 டூ 12.15


இதென்ன சினிமாப்பட டீசரா விடப்போறேன்?

=============


3  தலைவரே! நம்மை திட்டின கட்சிக்கு கூட்டணி அழைப்பு விட சங்கோஜமா இருக்கு


 மேரேஜ் இன்விட்டேசன் வைப்பது போல் நைசா முதல்ல உள்ளே போய்யா


==================


4  மிஸ்! நீங்க தீவிர  விஜய் ரசிகையா?

 எப்டி கண்டு பிடிச்சீங்க?

திரிபுர  சுந்தரிங்கற பேரை   திருப்பாச்சி சுந்”தெறி”ன்னு மாத்திக்கிட்டீங்களே?


=================


5  நீங்க  ஆம்பளைங்க கிட்டே பேச மாட்டீங்களா?

 யா, சின்னக்குழந்தையா இருக்கும்போதே டாக்டர் கிட்டே பேசலையாம், நர்ஸ் கிட்டேதான் பேசுனேனாம்


================


சார், இலக்கிய உலகத்துல இதுவரை உங்க எழுத்து மூலம் என்ன சம்பாதிச்சு இருக்கீங்க? 

 பல பேருடைய எதிர்ப்பைத்தான்


================


7  சார், கவிஞன் ராக்கி பட்டப்பேரு உங்களுக்கு எப்டி கிடைச்சது?

 எந்த ஃபிகருக்கு கவிதை எழுதிக்கொடுத்தாலும் படிச்சே பார்க்காம கைல ராக்கி கட்டுதுக


================


8 டியர், கோபத்தில் உன் மூக்கு சிவந்துடுச்சே ஏன்?

 அடமானம் வெச்ச மூக்குத்தியை  ஒழுங்கு மரியாதையா திருப்பிக்குடுத்துடுங்க


==============


9  டியர்! நான் விரும்பி அதிக முத்தங்கள் வாங்கியது, என் காபி கப்


 ம்க்கும், உயிருள்ள லவ்வருக்கு தராத, ஜடப்பொருளுக்கு குடு, ஜடம் ஜடம்


=============


10  என்ன சார்? ஹோட்டலுக்கு மெடிக்கல் ஷாப் னு போர்டு வெச்சிருக்கீங்க?
உணவே மருந்து.மருந்தே உணவு


==============


11 டியர்.என் கண்ணுக்குள் நிலவு தெரியுதா?
இப்பவெல்லாம் வானத்துலயே நிலவு சரியாத்தெரிய மாட்டேங்குது.உன் கண் ல எப்டி தெரியும்?


============

12 சினிமால ஹீரோ,ஹீரோயின் கட்டிபுடிக்கிறப்ப அவங்களுக்குள்ள ஆசை வராதா?
அவங்களுக்கு வருதோ வர்லையோ நமக்கு வருது

============

13 தலைவரே! கூடா நட்பு கேடாய் முடியும்னு அன்னைக்கு சொல்லிட்டு கூச்சமே இல்லாம கூட்டணி பேச்சு வார்த்தை?


நடந்ததை மறப்போம்.நடக்கப்போவதை நினைப்போம்


=============

14 டியர்.கூடா நட்பு கேடாய் முடியும்னு சொல்லி டைவர்ஸ் பண்ணீங்க.இப்போ ஏன் மறுபடி மேரேஜ் பண்ணிக்கலாமா?னு கேட்கறீங்க?
வேற யாரும் சிக்கலை.


============

15 கேபிள் சங்கர் சாரின் தொட்டால் தொடரும் படத்தை எஸ் ஜே சூர்யா ரீமேக்கினா என்ன டைட்டில் வைப்பாரு?
தொட்டால் தொட ரூம்


===========


16 டாக்டர்.எனக்கு சிகா.வைரஸ் காய்ச்சல் வந்திருக்கா?ன்னு செக் பண்ணுங்க.
ஏன்?டவுட்? தர்"ஷிகா" வை இன்னைக்குதான் ஏர்போர்ட்டில் பார்த்தேன்.

===========

17 சார்.சாப்பாடு எவ்ளோவ்?
100 ரூபா போன டைம் வந்தப்போ 90 ரூ தானே கொடுத்தேன்? ஓஹோ.அப்போ பழைய பாக்கி 10 + 100 =110 ரூபா கொடுங்க


===========

18 வரலாறு மிஸ் வனஜா = ரிப்பன் பிரபு சிறு குறிப்பு வரை
சின்னத்தம்பி ல குஷ்பூ க்கு ரிப்பன் வாங்கித்தந்ததால் ரிப்பன் பிரபு ஆனார்


==============


19 உங்களுக்கு லவ்வர்💘 இருக்காங்களா? இல்லையா?
ஏம்மா இருந்தா பார்க் பீச் போய் இருக்க மாட்டோமா?எதுக்கு இங்கன ஃபேஸ்புக் வர்றோம்?


============


20 எல்லோரும் சாப்புட்டிங்கள மக்களே


சாப்பிடலைன்னு சொன்னா  உங்க 12,345   ஃபாலோயர்சுக்கும்  சாப்படு வாங்கித்தருவீங்களா?

===================

0 comments: