Monday, February 22, 2016

இது ஒரு ”கல்லா”க்காதல் கதை?

1  தலைவரே! நீங்க குடுத்த  பார்ட்டில சரக்குல போதையே  ஏறலையே? ஏன்?


 இன்னைக்கு  போதை ஒழிப்பு தினம் ஆச்சே?அதான்==============


2  சுய மரியாதைத்திருமணத்தை நீங்க ஆதரிக்கறீங்களா? எதிர்க்கறீங்களா?


 சுய மரியாதை இருக்கறவன், எதிர்பார்ப்பவன்  கல்யாணமே பண்ணிக்கமாட்டானே?


===============


3 ஏய் மிஸ்டர்! உனக்கு காமன் சென்சே இல்லையா?இப்டி பஸ்ல உரசிட்டு நிக்கறே?

மிஸ்! உங்களுக்கு ரதி சென்சே இல்லையா? ஏன் விலகிப்போறீங்க?  


===================

4 கட்சியின் ஆணிவேராய் இருந்து  மக்கள் பிரச்சனையை தீர்ப்பேன்

 ஆணியே புடுங்க வேணாம் தலைவரே! ரெஸ்ட் எடுங்க


==============


5  அவன் சரியான ஜொள்ளு பார்ட்டினு எப்டி சொல்றே?

MACHINE( மெஷின்)-னு எழுதி இருக்கறதையே மச்சினி-னு தான் படிக்கறான்


===============


6  இண்ட்டர்வ்யூவில்
சார்,  பார்த்து. ஈசியான கேள்வியா கேளுங்க

அய்யய்யோ, நாங்க கஷ்டமான கேள்விகள் மட்டும்தானே மனப்பாடம் பண்ணிட்டு வந்திருக்கோம்?


=============

7  டியர், உனக்கு சுஜாதா புக் வேணுமா?பாலகுமாரன் புக் வேணுமா?


உங்க செக் புக் ல சைன் பண்ணிக்குடுங்க, வேணும்கற புக்ஸ் வாங்கிக்கறேன்


==========


8   கட்சி எனும் ஆலமரத்துக்கு வேராய் இருப்பேன், கட்சியைக்காப்பேன்

 தலைவரே! கட்டுமரம்னீங்களே? அதுக்கு ஏது வேர்?


============


9   தலைவருக்கு இண்ட்டர்நெட் அறிவே இல்லைனு எப்டி சொல்றே?

 உங்க மெயில் ஐடி சொல்லுங்கன்னா நெ20 மெட்ராஸ் மெயில்னு சினிமா டைட்டிலை சொல்றாரே?


==============


10 சார், உங்க ஹோட்டல்  லெமன்  ரைஸ்  பழையதா?


 இல்லியே புதுசுதான், ஏன் கேட்கறீங்க?


 எலு”மிச்ச” சாதம்னு போட்டிருக்கீங்களே, அதான் டவுட்


================


11  உலகில்  இருக்கும் எல்லா முக்கிய ஹோட்டல் சர்வர்களும் இதில் நடிச்சிருக்காங்க

ஓ, அப்போ இது சர்வ(ர் )தேசப்படம்னு சொல்லலாம்

===============


12 ஹீரோயின்  பேங்க்ல கேஷியரா இருக்கா,  படிப்பறிவே இல்லாத ஹீரோ  அவளை லவ் பண்றார்

 அப்போ இது ஒரு ”கல்லா”க்காதல் கதை?


==================


13 மழைக்காதலன் = பெண்களை  நான் தெய்வமா மதிக்கிறேன்

ஓஹோ, டெய்லி ஒரு தெய்வத்தை பீச்சுக்குக்கூட்டிட்டுப்போறீங்களாமே? அது ஏன்?


================14 மிஸ்! உங்க முகம் கேரம் போர்டு மாதிரியே இருக்கு

 என்ன மேன் உளர்றே?


  அவ்ளோவ் பவுடர் கொட்டிக்கிடக்கு


=================


15   தலைவரே! எதுக்கு திருப்பதி போறீங்க?


எலக்சன்ல ஜெயிச்சா மக்களுக்கு மொட்டை அடிக்கறதா வேண்டுதல் நிகழ்த்தப்போறேன்


=============

16  ஹீரோயின் மாசமா இருக்காராம்

 சூப்பர், அப்போ பட போஸ்டர்ல சக்கை போடு போடும்கறதை எடுத்துட்டு ம”சக்கை” போடு போடும் 50 வது நாள்னு ஒட்டுங்க


================


17 சின்ன வயசுல இருந்தே  நான் பலர்ட்ட பல்பு வாங்கி இருக்கேன்

ஓஹோ, காசு கொடுத்துட்டியா? சும்மாவா?=============


18   தலைவரே! நம்ம கட்சிக்கொள்கை என்ன?


 களவும்  கற்று மறை,
ஊழல், லஞ்சம்  பெற்று மறை


===============

19  திரட்டி பந்தல்ல  கிளிமூக்கு மாங்கா கிலோ 60 ரூ, செந்தூர மாம்பழம் கிலோ 80 ரூ-ன்னு  லிஸ்ட் இருக்கே? எதுக்கு?


மா”விலை”த்தோரணம்  கட்டுன்னீங்களே?

=============
20 டியர்! கல்யாணத்துக்கு முன் “ தண்ணி அடிக்கும் பழக்கம் இல்லை”ன்னீங்களே?

 மப்புல உளறி இருப்பேன்


=================

0 comments: